சூர்யா படத்திற்காக தேசிய விருது பெற்றவர் ரஜினியுடன் இணைந்தார்

சூர்யா படத்திற்காக தேசிய விருது பெற்றவர் ரஜினியுடன் இணைந்தார்

National award winner Cinematographer Thiru to Work With Rajinikanthரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இப்படத்தின் ரிலீசுக்கு பிறகுதான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யாவின் 24 என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

National award winner Cinematographer Thiru to Work With Rajinikanth

கார்த்தியுடன் இணையும் இரும்புத் திரை இயக்குனர்..? முற்றுப்புள்ளி வைத்த மித்ரன்

கார்த்தியுடன் இணையும் இரும்புத் திரை இயக்குனர்..? முற்றுப்புள்ளி வைத்த மித்ரன்

Karthi teams up with Irumbu Thirai director Mithranவிஷால் தயாரித்து நடித்த இரும்புத்திரை படம் அண்மையில் வெளியாகி சக்கைப் போடு போட்டு கொண்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் மித்ரன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து கார்த்தியை பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

அந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து மித்ரன் கூறியதாவது…

இரும்புத்திரை படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இப்போதுதுதற்போது தான் எனது முதல் பட வெற்றியை கொண்டாடி வருகிறேன். உடனடியாக எனது அடுத்த படம் பற்றி பேசுவது சரியாக இருக்காது. அடுத்த படத்திற்கான கதை தயாரான பிறகு, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருக்கிறார்

Irumbu Thirai director PS Mithran clarifies about his next movie

PS Mithran‏ @Psmithran
I’m slowly coming to terms with #IrumbuThirai ‘s response. It is too early to talk about my next film when I’m celebrating the support you have showered on us. Let me take the pleasure of officially breaking the news about my next film after I am done figuring out the script

விஜய் பிறந்தநாளில் எஸ்ஏ. சந்திரசேகர் கொடுக்கும் மெகா ட்ரீட்

விஜய் பிறந்தநாளில் எஸ்ஏ. சந்திரசேகர் கொடுக்கும் மெகா ட்ரீட்

On Vijay Birthday SAC plans to release his Traffic Ramasamy movieசமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார்.

அவரது மனைவியாக ரோகினி நடிக்க, முக்கி வேடங்களில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் விஜய்சேதுபதி கேரக்டர் முதலில் விஜய்க்கு ஒதுக்கப்பட்டதாம். அவருக்கு பதிலாகதான் இவர் நடித்துள்ளாராம்.

நடிகர் விஜய் ஆண்டனி, விஜய் ஆண்டனியாகவே நடித்திருக்கிறார். குஷ்பு அரசியல்வாதியாகவும், அம்பிகா நீதிபதியாகவும் நடித்துள்ளனர்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் விக்கி இயக்கி உள்ளார். பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

எனவே படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளின் படி 3 தேதிகள் தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாம்.

அதில் ஜுன் 22ந் தேதியை தேர்வு செய்து அதில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஜூன் 22ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்தானே…

ம்ம்… மகன் பிறந்த நாளில் அப்பா ஹீரோவாக நடித்த படம் வெளியானால் இருவருக்கும் மகிழ்ச்சிதானே…

On Vijay Birthday SAC plans to release his Traffic Ramasamy movie

அட்லியின் பேராசையை தல-தளபதி நிறைவேற்றுவார்களா..?

அட்லியின் பேராசையை தல-தளபதி நிறைவேற்றுவார்களா..?

Will Ajith and Vijay join together in Atlee movieதெறி, மெர்சல் ஆகிய படங்களின் மெகா வெற்றிக்கு பிறகு டைரக்டர் அட்லி இயக்கத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக ஆவல் ஏற்பட்டுள்ளது.

எனவே அவரது அடுத்த படத்தின் நாயகன் யாராக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அவர் அடுத்து இயக்கவுள்ள ஒரு படம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிக்கும் பொதுவான ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இதனையடுத்து அவரது அண்மையில் பேட்டியில் விஜய் மற்றும் அஜித்தை இணைத்து ஒரே படத்தில் இயக்குவீர்களா? என சிலர் கேட்டுள்ளனர்.

நிச்சயம் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது கட்டாயம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

அஜித், விஜய் ஆகியோரின் கால்ஷீட் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் இந்த கால கட்டத்தில் அட்லிக்கு இருவரின் கால்ஷீட்டும் ஒரே நேரத்தில் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

ம்ம்… அட்லியின் இந்த பேராசையை தல தளபதி நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Will Ajith and Vijay join together in Atlee movie

விஷாலை அடுத்து கார்த்தியை இயக்கும் இரும்புத் திரை இயக்குநர்.?

விஷாலை அடுத்து கார்த்தியை இயக்கும் இரும்புத் திரை இயக்குநர்.?

Karthi teams up with Irumbu Thirai director Mithranவிஷால் தயாரித்து நடித்த இரும்புத்திரை படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அறிமுக இயக்குனர் மித்ரன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து மித்ரன் அடுத்து எந்த ஹீரோவை இயக்க போகிறார்? என்ற கேள்விகள் இப்போதே கோலிவுட்டில் வலம் வர ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் அடுத்து கார்த்தியை வைத்து மித்ரன் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ரஜத் என்பவர் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவிருக்கிறார்.

அந்த படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ்தான் மித்ரன் இயக்கும் படத்தையும் தயாரிக்கவுள்ளது என சொல்லப்படுகிறது.

Karthi teams up with Irumbu Thirai director Mithran

இன்னும் கட்சி ஆரம்பிக்கல; அதான் வரல.. கமலிடம் கூறிய ரஜினி

இன்னும் கட்சி ஆரம்பிக்கல; அதான் வரல.. கமலிடம் கூறிய ரஜினி

Rajini not participated in TN Cauvery Farmers meeting conducted by Kamalமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “காவிரி : நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில் கட்சி பாகுபாடு இன்றி தமிழர்களாய் ஒன்றிணைவோம் என அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திந்தார் கமல்ஹாசன்.

இன்றைய கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக., அதிமுக., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்கவில்லை.

ஆனால் பா.ம.க., சார்பில் அன்புமணி, தினகரன் கட்சி சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், டி.ராஜேந்தர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் விவசாய சங்கத்தின் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினியை கலந்துக் கொள்ள அழைப்பு விடுத்திருந்தார் கமல்.

ஆனால் ரஜினி வரவில்லை. இதுகுறித்து கமலிடம் செய்தியாளர்கள் கேட்தற்கு “இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை நான் எப்படி வருவது என்று ரஜினி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் இனி வரும் கூட்டங்களில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்பதே என் எண்ணம்” எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், இது ஒரு நாளில் முடியும் கூட்டமில்லை. தூங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை தட்டி எழுப்பும் கூட்டமாக இருக்கும்.

நாங்கள் எங்களை தமிழர்களாக, விவசாயிகளின் நண்பர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது போன்ற கூட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருப்போம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

Rajini not participated in TN Cauvery Farmers meeting conducted by Kamal

More Articles
Follows