சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்த நாள் முடிவானது

சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்த நாள் முடிவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naga Chaitanya and Samantha are getting engaged on Jan 29th 2017தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா.

இவர் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா உடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜோடியாக நடித்திருந்தார்.

அனறு முதலே இருவருக்கும் காதல் என்று ஊடகங்கள் சொன்னது.

தற்போது இவர்களின் காதல் திருமணத்தில் சென்று அடைகிறது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் 2017 ஜனவரி 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மோதலுக்கு தயாரான லாரன்ஸ்… டார்க்கெட் விஜய்? சூர்யா?

மோதலுக்கு தயாரான லாரன்ஸ்… டார்க்கெட் விஜய்? சூர்யா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawrance sivalinga movie release on january 2017ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 (சி3) படம் சில மாறுதல்களுக்கு பிறகு 26 ஜனவரி 2017 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸை திருநாளை முன்னிட்டு தன் சிவலிங்கா படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

பி. வாசு இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜனவரி வெளியீடு என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

ஜனவரியில் விஜய்யின் பைரவா மற்றும் சூர்யாவின் சி3 ஆகிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகவுள்ளது.

எனவே இந்த இரண்டில் ஒன்றுடன் லாரன்ஸ் மோதக்கூடும் என தெரிகிறது.

பொங்கல் ரிலீசுக்கு எட்டு படங்கள் வரிசை கட்டி நிற்பதால், 99% சூர்யா படத்துடன் மோதுவார் என்றே தகவல்கள் வந்துள்ளன.

Lawrance sivalinga movie release on january 2017

‘இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு…’ தனுஷ் அதிரடி

‘இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு…’ தனுஷ் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushகௌதம் மேனன்-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் எனை நோக்க பாயும் தோட்டா.

இதில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் பரஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது.

இன்று 8.30 மணிக்கு இப்பட டீசர் வெளியாக உள்ளது.

இதற்கு இன்னும் 1.30 மணி நேரமே உள்ள நிலையில், தனுஷ் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதில்… இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Dhanush ‏@dhanushkraja 5m5 minutes ago
#erangiadikkalaamnumudivupanniyaachu

dhanush

தோனியுடன் விஜய்.. இது ‘பைரவா’வின் பேட் கனெக்ஷன்

தோனியுடன் விஜய்.. இது ‘பைரவா’வின் பேட் கனெக்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Bairavaa movie vijay fight related to Cricketபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் 2017 பொங்கலுக்கு வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையைமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் சண்டை காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார்.

அதில் ஒன்றில் கிரிக்கெட் சண்டைக்காட்சியும் உள்ளதாம்.

இது ரசிகர்களுக்கு செம்ம விருந்தாய் அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சண்டைக்காட்சியில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தோனி பயன்படுத்தும் பேட்டை விஜய் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கமல்-சூர்யா-விஜய்யை முந்தி ரஜினியை நெருங்கிய தனுஷ்

கமல்-சூர்யா-விஜய்யை முந்தி ரஜினியை நெருங்கிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Dhanushஒவ்வொரு ஆண்டு முடியும்போது, அந்த ஆண்டின் சிறந்த பிரபலங்கள் யார்? என்ற பட்டியல் வெளியாகும்.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டு முடியும் தருவாயை எட்டியுள்ளதால், உலகின் முன்னணி ஊடகமான ஃபோர்ப்ஸ் (Forbes) இந்தியாவின் 100 நட்சத்திரங்களை பட்டியல் இட்டுள்ளது.

ஆனால் இந்த பட்டியலில் டாப் 10ல் தென்னிந்திய அளவில் யாரும் இல்லை.

13வது இடத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.

இவரைத் தொடர்ந்து மற்ற இடங்களை பிடித்துள்ள நடிகர்களை பார்ப்போம்…

  • 30வது இடத்தில் ரஜினிகாந்த்
  • 33வது இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு
  • 46வது இடத்தில் ஸ்ருதிஹாசன்
  • 47வது இடத்தில் தனுஷ்|
  • 49வது இடத்தில் கமல்ஹாசன்
  • 51வது இடத்தில் சூர்யா
  • 53வது இடத்தில் காஜல் அகர்வால்
  • 61வது இடத்தில் விஜய்
  • 72வது இடத்தில் சீயான் விக்ரம்
  • 90வது இடத்தில் பிரபுதேவா

Forbes Magazine released 2016 Celebrity 100

பெரும் தொகைக்கு அஜித் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

பெரும் தொகைக்கு அஜித் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala ajithகடந்த வருடம் தீபாவளிக்கு அஜித்தின் வேதாளம் ரிலீஸ் ஆனது.

இப்படத்தை பிரபல நிறுவனமான ஜாஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது.

வாங்கிய தொகையை விட டபுள் மடங்கு லாபம் பெற்றதாக கூறப்பட்டது.

இதனையடுத்து ரஜினியின் கபாலி படத்தின் உரிமையையும் இந்நிறுவனமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘தல-57’ படத்தையும் அந்நிறுவனமே வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் ரூ 40 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Jazz cinemas bought TN rights of Thala 57 movie

More Articles
Follows