தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் அ. வினோத் பேசியதாவது..
“படத்தின் டிரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. படத்திற்காக காத்திருக்கிறேன். ஜெயம் ரவி சார் நெகடிவ் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும். ஆல் தி பெஸ்ட்”.
எடிட்டர் மணிகண்ட பாலாஜி…
” இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. திரில்லர் ஜானரில் படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
கலை இயக்குநர் ஜாக்கி…
“நான் பயந்த சுபாவம் என்பதால் திரில்லர் ஜானரில் படங்கள் பார்ப்பதில்லை. ஆனால், அப்படியான ஒரு படத்தில் என்னை இயக்குநர் வேலை செய்ய வைத்திருக்கிறார். அவருடன் அடுத்தடுத்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. படத்திற்கு வாழ்த்துகள்”.
நடிகர் நரேன்…
“போலீஸ் கதாபாத்திரம் அடிக்கடி எனக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு காரணமான என் நண்பர்கள் அகமது சார், ஜெயம் ரவிக்கு நன்றி.
இந்தப் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. ‘அஞ்சாதே’ படத்திற்கு பிறகு விஜயலட்சுமியுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோவிற்கும் நன்றி”.
நடிகர் அழகம் பெருமாள்..
“‘இறைவன்’ படத்தை தயாரித்திருக்கும் சுதனுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். அவருக்கு மட்டுமல்ல இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வெற்றி படமாக அமைய வாழ்த்துகள்”.
After Anjadhey again pair with Vijayalakshmi says Narain