தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.
இப்படம் வெளியான நாள் முதலே உலகளவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை கடந்துள்ளது.
இதனை படக்குழு போஸ்டரை ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.
‘ஜெயிலர்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
மேலும், அந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரெகார்ட் மேக்கர் (Super star rajinikanth record maker) என பதிவிட்டுள்ளது.
Rajinikanth’s Jailer really collected at box office in its first week for 375 crore