‘பாபநாசம் 2′ இயக்க காத்திருக்கும் ஜீத்து .; கௌதமி வேண்டாம்.. கமல் கண்டிசன்.?

kamal gauthami papanasamஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடித்த ‘த்ரிஷ்யம் 2′ கடந்த பிப்ரவரியில் ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

அதுபோல இதன் தெலுங்கு ரீமேக்கையும் இயக்கி முடித்துவிட்டார் ஜீத்து ஜோசப்.

‘த்ரிஷ்யம்’ பட முதல் பாகம் தமிழில் கமல் கௌதமி நடிப்பில் ரீமேக்காகி ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது.

எனவே இதன் 2ஆம் பாகத்தை மலையாளம், தெலுங்கை போலவே தமிழிலும் ‘பாபநாசம் 2′ படத்தை இயக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளார் ஜீத்து ஜோசப்.

பாபநாசம் முதல் பாகம் உருவாகும் போது கமல் & கௌதமி தங்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்தனர்.

அது தொடர்பான பிரஸ் மீட்டர் கூட “எத்தனையோ டாப் ஹீரோயின்கள் (முன்னணி நடிகைகள்) இருக்க கௌதமி ஏன்? என கேட்க… ” எனக்கு கௌதமி தான் டாப்” என பதிலளித்தார் கமல்.

இப்போது அந்த டாப் இடத்தில் நடிகை பூஜா குமார் இருக்கிறார் என்பதை உலகம் அறியும்.

எனவே முதல் பாகத்தில் ஜோடியாக நடித்த கௌதமி 2ஆம் பாகத்தில் நடிப்பதை கமல் விரும்ப மாட்டார்.

கௌதமிக்கு பதிலாக 2ஆம் பாகத்தில் மீனா நடிக்க வாய்ப்பிருக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும் பாபநாசம் பட முதல் பாகத்தை போல 30-40 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஜீத்து.

விக்ரம், இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் என கமல் கைவசம் சில படங்கள் இருப்பதால் பாபநாசம் 2 படம் எப்போது உருவாகும்? என்பது கேள்விக்குறியே.

Kamal Haasan condition on Papanasam 2 ?

Overall Rating : Not available

Latest Post