தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மான்’ படத்தினை விளம்பரப்படுத்துவதிலும், இப்படம் குறித்து ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை அதிகரிப்பதிலும் படக்குழுவினர் தொடர்ந்து அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அண்மையில் இப்படத்திற்கான திரையரங்க முன்னோட்டம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளனர்.
அவை அனைத்தும் சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான வகையில் உருவாகி.. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் 4வது பாடலை வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தின் பாடல் -இசையமைப்பாளர் கௌரஹரியின் இசை கோர்வையில் உருவாகி இருக்கிறது.
இந்தப் பாடலை சாய் சரண் பாஸ்கருணி, லோகேஷ்வர் இடாரா மற்றும் ஹர்ஷவர்தன் சாவேலி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலுடன் வெளியிடப்பட்டிருக்கும் 3D தொழில்நுட்பத்திலான விளக்கக் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இதனை நாம் திரையில் காட்சிகளுடன் காணும் போது வியப்பில் ஆழ்த்துவது உறுதி. முதல் மூன்று பாடல்களைப் போலவே ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் இந்தப் பாடலும் இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவரும்.
ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.
ஸ்ரீமதி சைதன்யா இத்திரைப்படத்தை வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.
தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்க பொறுப்பை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் திரைப்படம் ‘ஹனு-மான்’. இத்திரைப்படம் ‘அஞ்சனாத்ரி’ எனும் கற்பனையான உலகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால் இது உலகம் முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் சிறப்பான வரவேற்பை பெறுவதற்கான சாத்திய கூறு உள்ளது.
பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மான்’ திரைப்படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான்- வேர்ல்ட் படமாக திரையரங்குகளில் வெளியாகிறது.
Hanuman movie 4th single song released