தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விதார்த்த் நடித்த ஆள் என்ற படத்தை இயக்கியவர் ஆனந்த் கிருஷ்ணன்.
இவர் தற்போது பாபி சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மெட்ரோ படத்தை இயக்கியுள்ளார்.
இதில் நாயகனாக ஸ்ரீரிஷ் நடிக்க, மாயா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சென்ட்ராயனும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் பேசியதாவது….
மெட்ரோ சிட்டியில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் மையக்கரு. சென்சாரில் இப்படத்திற்கு அதிகபட்சமாக ஏ சர்ட்டிபிகேட் கிடைக்கும் என நினைத்தேன்.
ஆனால் இப்படத்தை வெளியிடவே கூடாது என கூறிவிட்டார்கள்.
கிட்டதட்ட இரண்டு மாத போராட்டதிற்கு பிறகு படத்தை பார்த்த கங்கை அமரன் ஏ சான்றிதழுடன் வெளியிடலாம் என்று சென்சாரில் பேசி அனுமதி பெற்று தந்தார்.
ஏ சான்றிதழ் படம் என்றால் எல்லாரும் பிட்டு படமா? என கேட்கிறார்கள். என் வீட்டிலும் கேட்கிறார்கள்.
வன்முறை நிறைந்த படங்களுக்கும் ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள் என்பதே பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது.
அதுமாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை சென்சார் ஏற்படுத்த வேண்டும்”
என்று பேசினார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன்.