பாஜக எதிர்ப்பு எதிரொலி; ஜிஎஸ்டி வசனங்களை நீக்க விஜய் தரப்பு முடிவு

பாஜக எதிர்ப்பு எதிரொலி; ஜிஎஸ்டி வசனங்களை நீக்க விஜய் தரப்பு முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal producer decided to remove GST dialogues from the movieவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் கடந்த அக். 18ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் சில காட்சிகளில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகளை எதிர்த்து பேசியிருந்தார் விஜய்.

இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், பாஜ கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பற்றிய காட்சிகளை நீக்க விஜய் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தயாரிப்பாளர் முரளி இது தொடர்பாக போனில் பேசியதாகவும் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

Mersal producer decided to remove GST dialogues from the movie

விஜய்யின் பொருளாதார அறிவீனத்தை மெர்சல் காட்டுகிறது… பாஜக எச்.ராஜா

விஜய்யின் பொருளாதார அறிவீனத்தை மெர்சல் காட்டுகிறது… பாஜக எச்.ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP H Raja condemned Vijay dialogues in Mersalமெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் தற்போது தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

இந்த காட்சிகளுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது.

ஆனால் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் இந்த வசனங்களை நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழிசை சவுந்தரராஜன் முதலில் எதிர்ப்பு குரல் கொடுக்க, பின்னர் பொன். ராதாகிருஷ்ணனும் தன் கருத்தை வெளியிட்டார்.

தற்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் தன் எதிர்ப்பு கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள பல்வேறு ட்வீட்டுக்கள் இதோ…

H Raja‏Verified account @HRajaBJP

ஏற்கனவே நாடுமுழுவதும் பள்ளி கல்வி மற்றும் மருத்துவம் அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசம் தான்.

H Raja‏Verified account @HRajaBJP
H Raja Retweeted vasudevan
தமிழகத்தில் கடந்த 20 yr கட்டப்பட்ட சர்ச் 17500, மசூதிகள் 9700, கோவில்கள் 370 இப்ப எதை தவிர்த்து மருத்துவ மனை கட்டணும் என்கிறார் விஜய்

விஜய் அவர்களின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா?

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல்.

மெர்சல் பட வசனம் விஜய் அவர்களின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது. முதலில் GST புதிய வரி அல்ல சாராயத்திற்கு 58% மேல் வரி விதிக்கப்படுகிறது.

BJP H Raja condemned Vijay dialogues in Mersal

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனங்களை நீக்க தேவையில்லை.. காலா இயக்குநர் ரஞ்சித்

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனங்களை நீக்க தேவையில்லை.. காலா இயக்குநர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ranjithவிஜய் நடிப்பில் மெர்சல் படம் வெளியாவதற்கு முன்னரே பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆனபின்பும், படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்களை விஜய் பேசியதால், அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பாஜ கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் முதல் குரலாக அந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

இவரையடுத்து மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனும் அவர்களும் தன் எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஆனால் விஜய் பேசிய வசனங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசு குரல் கொடுத்துள்ளார்.

மெர்சலுக்கு தணிக்கை சான்று இருந்தால்போதும்; பாஜகவிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமில்லை என அவர் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

தற்போது ரஜினியின் காலா பட இயக்குனர் ரஞ்சித் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது…

மெர்சல் படத்தில் மக்களின் பிரச்னைகளை தான் சொல்கிறார்கள். அந்த காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

ஜிஎஸ்டி வரி குறித்த காட்சிகளை நீக்க தேவையில்லை.” என  தெரிவித்துள்ளார்.

Kaala director Ranjith supports Vijays GST dialogue in Mersal

இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்… கமல் ஆவேசம்

இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்… கமல் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dengue speech issue Kamal reactionநிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன்.

வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை.

அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன். அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.

மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறேன். சித்தா அலோபதி என்ற தனி சார்பு எனக்கில்லை.

அதுவரை டெங்குவை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்றால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்.

Kamalhassan reaction to Dengue speech issue

பாண்டியராஜன் மகன் நடிக்க பாக்யராஜ் சிஷ்யர் இயக்கியுள்ள ‘தொட்ரா’

பாண்டியராஜன் மகன் நடிக்க பாக்யராஜ் சிஷ்யர் இயக்கியுள்ள ‘தொட்ரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pandiarajan son Prithivirajan in Thotra movieJ.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’.

இந்தப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர்.

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சரவணக்குமார் புது வில்லனாக அறிமுகமாகிறார். “மெட்ராஸ்” பட வில்லன்களைப் போல இதில் முழுக்க முழுக்க விளையாடியிருக்கிறார்.

ஒரு படம் வெற்றியடைய கதாநாயகனை எதிர்ப்பவர் சரியான தேர்வாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவராக சரவணக்குமார் இப்படத்தில் பார்ப்பவர்களுக்கு பயமேற்படுத்தும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மைனா சூசன், தீப்பெட்டி கணேசன், கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் மதுராஜ் கூறியதாவது…

இன்று இருக்கக்கூடிய சமூக சூழலில் உறவுகள் எப்படி மதிக்கப்படுகின்றன? பண ஏற்றத்தாழ்வுகள், பிரிவினை ஏற்றத்தாழ்கள் என்ற இரண்டும்தான் உறவுகளை இணைப்பதோ பிரிப்பதோ செய்கிறது.
மிகப்பெரிய பணம் உள்ளவர் சாதி ரீதியாக அடித்தட்டில் இருந்தாலும் மேல்தட்டில் உள்ளவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள தடையிருப்பதில்லை.

பணமற்றவர்கள் தங்கள் மனதின் தேடலை நிறைவேற்றிக்கொள்ள முயலும்போதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. அப்படி ஒரு பிரித்தாளும் கும்பல் எல்லா ஏரியாக்களிலும் உள்ளது.

சிங்கத்திடமிருந்து தப்ப முதலை வாய்க்குள் மாட்டிக்கொள்வது போல அங்கே காதலும் காதலர்களும் சிதைக்கப்படுகிறார்கள்.

காதல் என்றாலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. இதில் வீட்டைவிட்டு வெளியேறும் காதலர்கள் எதிர்கொள்ளும் போராட்டம் ரொம்பவே கடினமான ஒன்று.

அதிலும் அவர்கள் வழிமாறிப்போய் காதல் வியாபரிகளின் கையில் சிக்கிக்கொண்டால்..? இப்படி ஒரு விஷயத்தைத்தான் இந்தப்படத்தில் சமூக கண்ணோட்டத்துடன் பேசியுள்ளேன்.

இந்த மாதிரி சம்பவங்கள் சட்டத்தின் கண்காணிப்பில் வருவதே இல்லை. தன்னைச் சார்ந்தவர்களாகவே இருந்துகொண்டு எதிராக காய்களை நகர்த்திக்கொண்டே இருப்பார்கள். இப்படி காதலர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் மாட்டிக்கொள்ளும் பல நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து கதையை செதுக்கியுள்ளோம்.

பரத்துக்கு ஒரு “காதல்” போல பிருத்விக்கு “தொட்ரா” நல்ல பேர் வாங்கித்தரும்.

சினிமாவில் மிகமிக நல்ல பையன். அமைதி, ஸ்டார் வீட்டுக் கன்றுக்குட்டி போன்ற எந்த பந்தாவும் இல்லாதவர்.

இந்தப் படத்துக்கு பிருத்விதான் சரியா இருப்பான்னு எனக்கு கைகாட்டிவிட்டவர் என் குருநாதர் கே. பாக்யராஜ்.

முழுக்க முழுக்க சரியாகவே அமைந்திருந்தார் பிருத்வி.

வட மாவட்டங்களில் நடைபெற்ற, தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு பயங்கரமான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர் சந்திரா சரவணக்குமார் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு பெண் தயாரிப்பாளர்.

இதனால் என்ன வருமானம் வரும் எனக் கேட்காமல்.. இதனால் நீ வெற்றி பெற்றுவிடுவாயா எனக் கேட்டு தயாரிக்க முன் வந்தார்.

வியாபாரத்தில் திட்டமிட்டுப் பழகியவர் என்பதால் எனக்கு இந்த படத்தை சரியாகத் திட்டமிட்டுக் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு தயாரிப்பு நிர்வாகியாகவே மாறிப்போனார்.

அவரின் ஆளுமை இந்தப் படத்தை விரைவாக முடிக்க உதவியது என்றார் இயக்குநர் மதுராஜ்.

கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா-2’வுக்கு இசையமைத்த உத்தமராஜா என்கிற இசையமைப்பாளரை இந்தப்படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார் மதுராஜ்.

போக்கிரிராஜா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
‘ஆறாது சினம்’ உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் என்பவர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

சண்டைக் காட்சிகளை உறியடி படத்திற்கு காட்சிகள் அமைத்த விக்கி நந்த கோபால் அமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் தேவர்மகன் படப்பிடிப்பு நடந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தேவர்மகனுக்குப் பிறகு வேறெந்த படமும் அங்கு நடைபெறவில்லை. அதன்பிறகு நடந்த படப்பிடிப்பு “தொட்ரா”வின் படப்பிடிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் ; பிருத்விராஜன், வீணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், “மைனா” சூசன், “தீப்பெட்டி” கணேசன், கூல் சுரேஷ் மற்றும் பலர்

படத்தொகுப்பு ; ராஜேஷ் கண்ணன்
ஒளிப்பதிவு ; ஆஞ்சி
இசை ; உத்தமராஜா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ; மதுராஜ்
தயாரிப்பு ; J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார்

கமல் கட்சியில் சேர விருப்பமா..? கோவை சரளா பேட்டி

கமல் கட்சியில் சேர விருப்பமா..? கோவை சரளா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kovai Sarala reaction to joining in Kamals Political Partyகோவை சரளா, சரண்யா பொன்வண்ணன், கல்பனா, மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிறடை மூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இட்லி.

அப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பட டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படம் குறித்து கோவை சரளா மற்றும் சரண்யா பொன்வண்ணன் கூறியதாவது…

நிருபர்: உங்களுக்கு குழந்தை இருக்கிறதா?
கோவைசரளா: எனக்கு நானே குழந்தை.
சரண்யா பொன்வண்ணன்: இராமசந்திராவில் இரண்டுபேருமே மருத்துவம் பெரியவள் மூன்றாம் ஆண்டும் சிறியவள் முதலாம் ஆண்டும் படிக்கிறார்கள்.

நிருபர்: கமல் சார் கட்சி ஆரமித்தால் அவர் கதாநாயகிகள் எல்லாம் அவர் கட்சியில் சேர்வார்களா?

கோவைசரளா: அது எனக்கு தெரியவில்லை இன்று என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை அப்படி இருக்கையில் நாளை என்ன என்பது மட்டும் எப்படி தெரியும்.

நிருபர்: இட்லி படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க?

சரண்யா பொன்வண்ணன்: ஒரு படத்தை கதாநாயகனை நம்பி எடுப்பார்கள், இயக்குநரை நம்பி எடுப்பார்கள் ஆனால் இயக்குநர் கதையை மட்டுமே நம்பி எடுப்பது தான் சாமர்த்தியம்.

அப்படி தற்போது வந்தபடம் மகளிர்மட்டும் அதில் கதைக்கு யார் தேவையோ அவர்களை மட்டும் வைத்தார்கள் அதுபோலத்தான் இந்த இட்லி படமும் கதைக்கு தேவை என்பதால் எங்களை சேர்த்தார்.இந்த மாதிரி கதைகளை நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

நிருபர்: நீங்கள் மூன்றுபேரும் இப்படத்தில் தோழிகளா இல்லை யதார்த்தமாக சந்திப்பீர்களா?

சரண்யா பொன்வண்ணன்: ஆரம்பம் முதலில் இருந்தே தோழிகளாக வருவோம்.

நிருபர்: ஏதோ தனியா வேஷம்லாம் போட்டிருக்கிங்களாமே?

கோவை சரளா: ரொம்ப பெருசலாம் இல்ல ஓரளவுக்கு போட்டிருப்பேன்.
சரண்யா பொன்வண்ணன்: என்ன பொறுத்தவரை அது பெருசுதான் பேன்ட் சர்ட், ஜீன்ஸ்லாம் நான் போட்டதே இல்ல.

முதலில் விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து கேட்டேன் அவர்கள் கதைக்கு தேவைபட்டால் அதை பண்ணலாம் என்று சொன்னார்கள்.இயக்குநர் அளித்த நம்பிக்கையில் நடித்தேன்

நிருபர்: நீங்க மட்டுமா இல்லை அனைவருக்கும் அதே உடையா?

சரண்யா பொன்வண்ணன்: எல்லோருக்கும் அதே உடை அதுதான் ஆறுதலாக இருந்தது.

கோவைசரளா: ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம். எங்களுக்கு ஒரு லவ் ட்ராக் இருக்கு அது மிக வித்தியாசமான ஒன்று அதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

நிருபர்: மூர்த்தி சார் பற்றி சொல்லுங்க:-

கோவை சரளா அவர் பெரிய லஜன்ட் அப்போ என்ன வம்பு பண்ணுவாறோ அது இப்பவரை இருக்குது.

சரண்யா பொன்வண்ணன் : இதில் ரொம்ப நடிகர்கள் இருக்கிறார்கள் அதான் இதன் ப்ளஸ்.எல்லாரும் அவங்க பங்கை சிறப்பா பண்ணியிருக்காங்க..

Kovai Sarala reaction to joining in Kamals Political Party

itly movie shooting spot

 

More Articles
Follows