மெர்சலை மீண்டும் சென்சார் செய்ய வேண்டாம்; விஜய்க்கு கமல் ஆதரவு

மெர்சலை மீண்டும் சென்சார் செய்ய வேண்டாம்; விஜய்க்கு கமல் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal vijayநேற்றுமுன் தினம் வெளியான விஜய்யின் மெர்சல் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

இதில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை நீக்குமாறு பாஜ கட்சி தொடர்ந்து வலியுறுத்த அந்த காட்சிகளை நீக்க மெர்சல் தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டுவிட்டார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட எவரும் இதுபற்றி வாய் திறக்காத நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மெர்சல் படத்திற்கு சென்சாரில் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. மறுபடியும் சென்சார் செய்ய வேண்டாம்.

விமர்சனங்களை தர்க்க ரீதியில் எதிர்கொள்வோம். விமர்சகர்களை மௌனமாக்க வேண்டாம்.

பேசும்போதுதான் இந்தியா பிரகாசிக்கும்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

விஸ்வரூபம் படத்தின் பிரச்சினையின் போது கமலுக்கு ஆதரவாக விஜய் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal movie certifed Dont recensor it says Kamal

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Mersal was certified. Dont re-censor it . Counter criticism with logical response. Dont silence critics. India will shine when it speaks.

சமூகத்திற்கு தேவையான வசனமே மெர்சலில் உள்ளது; வைகோ பாராட்டு

சமூகத்திற்கு தேவையான வசனமே மெர்சலில் உள்ளது; வைகோ பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Politician Vaiko support vijays dialogues in Mersal movieவிஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இதற்கு பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்தியா முழுவதும் இப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி காட்சிகளை நீக்க தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அபிராமி தியேட்டரில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது… அரசு மருத்துவமனைகள் தொடர்பாக படத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்.

சமுதாயத்திற்கு தேவையான வசனங்கள் மெர்சல் படத்தில் கூறப்பட்டுள்ளன. என தன் கருத்தை தெரிவித்துள்ளார் மதிமுக தலைவர் வைகோ.

மெர்சல் படம் பார்ப்பதற்கு முன்பே, கன்னட அமைப்பினர் பிரச்சினையில் இப்படத்திற்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.

Politician Vaiko support vijays dialogues in Mersal movie

மக்கள் பிரச்சினையை பேசிய விஜய்யை பார்த்து மெர்சலாயிட்டேன்… – குஷ்பூ

மக்கள் பிரச்சினையை பேசிய விஜய்யை பார்த்து மெர்சலாயிட்டேன்… – குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

While i seen Vijay acting I am Mersalayitten says Kushboo‘மெர்சல்’ படத்தில் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை எதிர்த்து தன் கருத்தை பதிவிட்டு இருந்தார் விஜய்.

இதில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு கூறியிருப்பதாவது:

நான் மெர்சலாயிட்டேன். முழுவதும் ஒன் மேன் ஷோ. இந்தத் தீபாவளிக்கு கண்களுக்கு விருந்தாக இருக்கிறார் விஜய்.

சோர்வான ஒரு நொடி கூட இல்லை. படத்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்போம். ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் என பல சமூக மக்கள் பிரச்சினைகளை தைரியமாக திரையில் பேசியதற்கு பாராட்டுகள்.

சிலருக்கு மெர்சலால் பல இரவுகள் தூக்கம் இழக்க நேரிடும்.

படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் எனச் சொல்வது சுதந்திரத்தை நசுக்குவதைப் போல. அது பாஜகவின் அச்சத்தையே காட்டுகிறது.

என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.

While i seen Vijay acting I am Mersalayitten says Kushboo

விஜய்க்கு அதிகம் நடிக்க வாய்ப்பு கொடுத்த படம் மெர்சல்… – சுசீந்திரன்

விஜய்க்கு அதிகம் நடிக்க வாய்ப்பு கொடுத்த படம் மெர்சல்… – சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suseenthiran vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் பார்த்துள்ளார்.

அப்படத்தை பாராட்டியுள்ள அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை தன் கைப்பட எழுதி பகிர்ந்துள்ளார்.

அதில் சுசீந்திரன் எழுதியுள்ளதாவது…

பிரம்மாண்டமான பட்ஜெட்-ல் நல்ல சமூக கருத்து.

விஜய் சாருக்கு அதிகம் நடிக்க வாய்ப்பு கிடைத்த திரைப்படம், அதை சிறப்பாக செய்துள்ளார். விஜய் சார் என்றால் மாஸ், சமந்தா – விஜய் சார் காதல் காட்சிகள், விஜய் சாரின் நக்கல் கலந்த வசன உச்சரிப்பு, வடிவேலு சாரின் இந்தியாவின் தற்போதைய நிலையை “இந்தியாவுல எல்லாரும் பொறக்க கையதா நக்கிட்டு இருக்கானுங்க” என்று ஏடிஎம் கார்டுஐ பற்றி கூறுவது, அனல் அரசு-வின் சண்டைக் காட்சிகள், ஷோபி மாஸ், கேமிரா மேன் விஷ்ணு, அட்லி என அனைவரும் கடினமாக உழைத்து உள்ளனர்.

ரஹ்மான் சாரின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே செம. ‘மெர்சல்’ விஜய் ரசிகர்களுக்கு விருந்து.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

Director Suseenthiran praises Vijay and Mersal movie team

susee letter

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அட்லியுடன் விஜய்

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அட்லியுடன் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeதெறி மற்றும் மெர்சல் படங்களை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்ற செய்திகளை பார்த்தோம்.

இதை தன் சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார் அட்லி.

மெர்சலை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

அதற்குள் அடுத்த பட கதையை நான் தயார் செய்துவிடுவேன். அதை விஜய் அண்ணாவிடம் தெரிவிப்பேன்.

அதன்பின்னர் அவர் ஓகே செய்யும் பட்சத்தில் அடுத்த படத்தை ஆரம்பிப்போம் என தெரிவித்துள்ளார்.

After AR Murugadoss film 3rd time Vijay teams up with Atlee

ரசிகர்களை நினைச்சா கீர்த்தி சுரேஷுக்கு பயமா இருக்காம்

ரசிகர்களை நினைச்சா கீர்த்தி சுரேஷுக்கு பயமா இருக்காம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh artவிஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது சாவித்ரி வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம், சூர்யா உடன் தானா சேர்ந்த கூட்டம், மற்றும் விக்ரம் உடன் சாமி ஸ்கொயர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி.

இவரது பெரும்பாலான படங்கள் வெற்றிப் பெறவே, ராசியான நடிகையாக மாறிவிட்டார்.

ஆனால் தொடரி படம் தோல்வியை சந்திக்க பல மீம்ஸ்கள் உருவாக காரணமாகிவிட்டார் கீர்த்தி.

இதுகுறித்து தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது..

என் ரசிகர்கள் விரும்பும் படியான நடிப்பை என்னால் முடிந்தவரை கொடுக்க நினைக்கிறேன்.

சில சமயம் ரசிகர்களின் மீம்ஸ்களை பார்த்தால் பயமாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

I am afraid of memes says Keerthy Suresh

More Articles
Follows