கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி & சௌந்தர ராஜா நிதியுதவி

கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி & சௌந்தர ராஜா நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor thavasiசிவகார்த்திகேயன் & ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது.

தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருவதாக அவரது உறவினரே தெரிவித்துள்ளார்.

தற்போது கேன்சர் (புற்றுநோயால்) பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனது மருத்துவ செலவுக்கு திரைப் பிரபலங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து டாக்டரும், திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சரவணன், மருத்துவ செலவுகள் அனைத்தையும் சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தவசியை நடிகர் சௌந்தர ராஜா நேரில் சந்தித்துள்ளார்.

தன் சார்பாக ரூ 10000/- பணத்தையும் விஜய்சேதுபதி வழங்கிய 1 லட்சத்தை உதவியாக வழங்கியுள்ளார்.

Makkal Selvan sends help for actor Thavasi’s cancer treatment

கொல வெறி நாளில் ‘ரௌடி பேபி’ பாடல் தென்னிந்தியளவில் சாதனை..; தனுஷ் செம ஹாப்பி

கொல வெறி நாளில் ‘ரௌடி பேபி’ பாடல் தென்னிந்தியளவில் சாதனை..; தனுஷ் செம ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rowdy baby recordரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி படம் 3.

இந்த படத்தில் தனுஷ் அண்ட் சிவகார்திகேயன் இணைந்து நடித்திருத்தனர். இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘கொல வெறி’ பாடல் வெளியாகி இன்றோது 9 ஆண்டுகள் ஆகிறது.

இந்த பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி யு டியூபில் வெளியானது.

இதே தேதியில் தான் மாரி 2 படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடலும் வெளியானது.

அந்த பாடல் தற்போது வரை 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.( 100 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.)

இந்த பாடலுக்கு யுவன் இசையமைத்திருந்தார். நடனத்தை பிரபுதேவா அமைத்திருத்தார்.

ஒரே நாளில் தனுஷின் 2 பாடல்கள் பெரும் சாதனை படைத்திருப்பது குறித்து தனுஷ் தன் ட்விட்டரில்…

‘கொலவெறிடி’ பாடல் வெளியான 9வது ஆண்டு தினத்தில் ‘ரௌடி பேபி’ பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.

தென்னிந்திய அளவில் முதல் முறையாக 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளதற்கு நாங்கள் கௌரவமாக நினைக்கிறோம். எங்கள் மொத்த குழுவும் எங்கள் இதயத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

Massive – Rowdy baby hits 1 billion views on youtube

கிறிஸ்துவ போலி சாமியார் காட்சி நீக்கம்..; இந்துக்கள் இளிச்சவாயர்களா.? ஆர்ஜே பாலாஜிக்கு கண்டனம்

கிறிஸ்துவ போலி சாமியார் காட்சி நீக்கம்..; இந்துக்கள் இளிச்சவாயர்களா.? ஆர்ஜே பாலாஜிக்கு கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி, சரவணன் இயக்கியிருந்த படம் மூக்குத்தி அம்மன்.

தீபாவளி வெளியீடாக இந்த படம் ஓடிடியில் வெளியானது.

தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் போலி சாமியார்கள், மத அரசியல் உள்ளிட்டவைகளை காட்டியிருந்தனர்.

இந்து மற்றும் கிறிஸ்துவ மத போலி சாமியார்கள் எப்படியெல்லாம் அப்பாவி பொது மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருந்தனர்.

இப்படத்தின் ரிலீசின் முன்பே சில காட்சிகளை வெளியானது.

அதில் கிறிஸ்துவ போலி மத போதகராக மனோ பாலா நடித்திருந்தார்.

மதப்பிரசங்க மேடையில் காட் இஸ் காலிங் எனச் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவார். அப்போது அம்மனாக நடித்திருக்கும் நயன்தாரா, ஜீசஸ் என்னுடைய பிரண்டுதான் என்ற வசனத்தை பேசுவார்.

ஆனால் படம் வெளியான பின் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை.

அதாவது கிறிஸ்துவ மதத்தை கிண்டலடிக்கும் சில நிமிட காட்சிகளை நீக்கிவிட்டனர்.

ஆனால் படம் முழுவதும் காட்டப்பட்டுள்ள இந்து மதத்தை கிண்டலடிக்கும் காட்சிகளை மட்டுமே படமாக காட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஆர்ஜே. பாலாஜிக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Mookuthi Amman controversial scenes deleted

ரஜினி-சிவகார்த்திகேயன் உடன் நடித்த ‘தவசி’ புற்று நோயால் அவதி (வீடியோ)

ரஜினி-சிவகார்த்திகேயன் உடன் நடித்த ‘தவசி’ புற்று நோயால் அவதி (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்து மாதவி உள்ளிட்டோர் இணைந்து நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.

இந்த படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

பெரிய தாடி, முறுக்கு மீசை என வலம் வரும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் அந்த படத்தில் பேசிய வசனம் மிகவும் பாப்புலர் ஆனது.

கிழக்குச் சீமையிலே படத்தில் இவர் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து வருகிறாராம்.

மேலும் ராசாத்தி என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது புதிய புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மொட்டை தலையுடன் மெலிந்த உடலுடன் காணப்படுகிறார். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார் தவசி.

அவருக்கு திரையுலகினர் உதவ வேண்டும் என அவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது அவருக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளிப்பதாக தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் உறுதியளித்துள்ளார்.

Tamil actor Thavasi struggles with cancer

பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம்

பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

losliya fatherஇலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லொஸ்லியா.

இவர் பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். அதன் மூலம் தமிழகத்தில் பிரபலமானார்.

இதனால் உலகளவில் தமிழ் பேசும் மக்களிடம் அறிமுகமானார்.

தனது தந்தை மரியநேசன் குடும்பத்தைப் பிரிந்து, கனடா நாட்டில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு தன் தந்தையை மிகவும் பிடிக்கும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறிக் கொண்டே இருப்பார்.

தற்போது விளம்பரப் படங்களிலும் தமிழ் திரைப்படங்களிலும் வாய்ப்பு பெற்று நடித்து வருகிறார்.

இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கனடாவில் இருந்த மரியநேசன் அவர்கள் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார்.

லொஸ்லியாவின் ரசிகர்களும் அவரின் திரையுலக நண்பர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Losliya father Mariyanesan passed away in canada

‘குற்றம் 23’ படத்தயாரிப்பாளரின் ‘சலூன்’..; யோகி பாபு முடியை வெட்டுவாரா சிவா..?

‘குற்றம் 23’ படத்தயாரிப்பாளரின் ‘சலூன்’..; யோகி பாபு முடியை வெட்டுவாரா சிவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெதான் – தி சினிமா பீப்பிள் இந்தர்குமார் தயாரிப்பில் சிவா கதாநாயகனாக நடிக்க – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் “சலூன்”

‘குற்றம் 23’, ‘தடம்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்மபிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார் இந்தர்குமார்.

‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா – யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

‘சலூன்’ பின்னணியில் கடையின் முதலாளியாக மிர்ச்சி சிவா, தொழிலாளியாக யோகி பாபு நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது.

படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு – இந்தர்குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முத்துக்குமரன்
ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன்
இசை – சாம்.சி.எஸ்
எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – சி.எஸ்.பாலசந்தர்
பாடல்கள் – யுகபாரதி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Yogi Babu and Mirchi Shiva joins for Saloon

yogi babu saloon

More Articles
Follows