தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளுடன் சினிமா சூட்டிங்கை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
ஆனாலும் லைகா-கமல்- ஷங்கர் -அனிருத் ஆகியோர் இணையும் பிரம்மாண்ட படமான ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்படாமலே உள்ளது.
இதனால் இந்தியன் 2 படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல்கள் பறந்தன.
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் தெரியவந்துள்ளன.
அதாவது இந்தியன் 2 பட சில காட்சிகளில் குறைந்தது 250 பேர் வரை பணிபுரிவதாக உள்ளதாம்.
ஆனால், 100 பேருடன்தான் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இன்னும் தாமதம் ஆகிறதாம்.
மேலும், கமல் மேக்கப்பிற்கு வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டும் என்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
Major clarifications on Indian 2 shooting