தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபு உடன் ராகுல் பிரீத்தி சிங், பரத், எஸ்ஜே சூர்யா, ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை வருகிற ஜீன் மாதம் 22ஆம் தேதி வெளியிடவிருந்தனர்.
அன்றைய தினம் விஜய்யின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க முடிவு செய்திருக்கிறாராம் முருகதாஸ்.
அதற்கு காரணம் ஸ்பைடர் படத்தின் க்ளைமாக்ஸ் போன்றே மற்றொரு படத்தின் க்ளைமாக்ஸ் சமீபத்தில் ஒரு படத்தில் இருந்ததாம்.
எனவே க்ளைமாக்ஸை மாற்றி மீண்டும் படமாக்கவிருக்கிறாராம்.
எனவே அந்த காட்சிகளை முடித்துவிட்டு, ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடவிருக்கிறார்களாம்.
அஜித்தின் நடித்துள்ள விவேகம் படமும் ஆகஸ்ட் மாதம் இறுதியில்தான் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Mahesh Babus Spyder release date connect with Vivegam