ரஜினியை அடுத்து கமலை இயக்க முருகதாஸ் ப்ளான்.? தெலுங்கு நடிகரும் கூட்டணியா?

kamal haasanசூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்குவதாக இருந்தது.

ஆனால் அந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலகினார். பின்னர் சூர்யாவுடன் கூட்டணி என கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த நடிகரை இயக்குவார் இந்த நடிகரை இயக்குவார் என பல யூகங்கள் வந்தாலும் எதையும் முருகதாஸ் தரப்பு உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போகிறார் முருகதாஸ் என ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் இதே படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதில் ‘சர்கார்’ பட வில்லியும் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுபோல முருகதாசின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் பறந்தாலும் எதுவுமே இதுவரை உறுதியாகவில்லை.

ஏற்கெனவே மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

AR Murugadoss to direct Kamal Haasan’s next film?

Overall Rating : Not available

Related News

அண்மையில் வெளியான ‘ஸ்பைடர்’ மற்றும் ‘மெர்சல்’…
...Read More
மெர்சல் மற்றும் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில்…
...Read More
வினோத் இயக்கத்தில் உருவாகும் 'தீரன் அதிகாரம்…
...Read More
'ஸ்பைடர்' படத்தில் மகேஷ் பாபுவை இயக்கினார்…
...Read More

Latest Post