பிரபுதேவா-நிவேதா ஜோடியுடன் இணைந்தார் தெறி வில்லன்

பிரபுதேவா-நிவேதா ஜோடியுடன் இணைந்தார் தெறி வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director mahendranபிரபுதேவா நடித்த `யங் மங் சங்’, `லக்‌ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபுதேவா முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இவருடன் நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ்மேனன் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

கடந்த வருடம் வெளியான தெறி படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் மகேந்திரன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிஷந்த் ஜபக் தயாரிக்கிறார்.

இமான் இசையமைக்கவுள்ள இப்படத்தை முகில் என்பவர் இயக்கவுள்ளார்.

சொடக்கு மேல பாட்டுக்கு ஆட்டம் போட்டு சுளுக்கு எடுக்கும் சாயிஷா

சொடக்கு மேல பாட்டுக்கு ஆட்டம் போட்டு சுளுக்கு எடுக்கும் சாயிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sayyesha dance for sodakku mela songவிஜய் இயக்கி வனமகன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் சாயிஷா.

அதில் தன் நடனத்தாலே ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார்.

தற்போது ஆர்யாவுடன் கஜினிகாந்த், விஜய்சேதுபதியுடன் ஜுங்கா, கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள ’சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தான் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு சுளுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.

அப்பாவுடன் வாழும் அதிர்ஷ்ட்டத்தை பெறாதவன் நான்.. சிவகார்த்திகேயன் உருக்கம்

அப்பாவுடன் வாழும் அதிர்ஷ்ட்டத்தை பெறாதவன் நான்.. சிவகார்த்திகேயன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and his fatherசின்னத்திரை டூ வெள்ளித்திரை வந்த சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவரது தந்தை காவல் துறை அதிகாரியாக பணி புரிந்தவர். அவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.

கடந்த 2003 – ம் ஆண்டு மறைந்த சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் பற்றி அவருடன் பணியாற்றிய உதவியாளர் சௌந்தரராஜன் என்பவர் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் சிவகார்த்தியின் அப்பா உயிரிழக்கும் கடைசி நிமிடத்தில் தான் மட்டுமே அவருடன் இருந்ததாகவும், அந்த நினைவுகளை மறக்க முடியாது என்றும் அவரது இறந்த நாளில் தெரிவித்துள்ளார்.

அதற்கு ட்விட்டரில் பதிலளித்த சிவகார்த்திகேயன்…

என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவருடன் பல வருடங்கள் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டத்தை கிடைக்கப் பெறாதவன் எனவும் அவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ரஜினி என்ற வசீகரம் வென்று விட்டது; காலா குறித்து விவேக் கமெண்ட்

ரஜினி என்ற வசீகரம் வென்று விட்டது; காலா குறித்து விவேக் கமெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivekரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் உருவான காலா திரைப்படம் கடந்த ஜீன் 7ஆம் தேதி வெளியானது.

இதில் ரஜினியுடன் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டீல், அருந்ததி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளன்று உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விவேக், காலா படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், காலா பார்த்தேன். சூப்பர் ஸ்டாரை வித்தியாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள்.எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும்,’ ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது ’ என தெரிவித்துள்ளார்.

காலா பார்த்தேன். Super starஐ வித்யாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள்.எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும், ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது. @rajinikanth @dhanushkraja

— Vivekh actor (@Actor_Vivek)

பர்ஸ்ட் லுக்கும் வேண்டாம்; பர்த் டேவும் வேண்டாம்; விஜய் திடீர் முடிவு..?

பர்ஸ்ட் லுக்கும் வேண்டாம்; பர்த் டேவும் வேண்டாம்; விஜய் திடீர் முடிவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayநடிகர் விஜய்யின் 44 வது பிறந்த நாள் வருகிற ஜூன் 22 – ம் தேதி வருகிறது.

விஜய் படங்கள் என்றாலே அவரது ரசிகர்கள் அமர்களம் செய்துவிடுவார்கள். அதுவும் அவரின் பிறந்தநாள் என்றால் கேட்கவா வேண்டும்..?

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட இப்போதே தயாராகி விட்டனர்.

அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரிடையாக சந்தித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார் விஜய்.

அதனால், இந்தாண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்த உள்ளாராம் விஜய்.

அன்று துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் அன்று வெளியிட வேண்டாம் என விஜய் வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

காலா படத்தை பார்ப்பேன்; ரஜினியை ரசிப்பேன்… – சீமான்

காலா படத்தை பார்ப்பேன்; ரஜினியை ரசிப்பேன்… – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will watch Kaala movie and as a fan i will admire Rajini acting says Seemanஇயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் அவர்கள் ரஜினியை தாக்கி பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர்.

ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை இவர் கண்டிக்காத நாளில்லை.

இந்நிலையில் அண்மையில் வெளியான ரஜினியின் காலா திரைப்படம் பற்றி இவர் பேசியுள்ளார்.

அப்போது காலா திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. விரைவில் அந்த படத்தை பார்ப்பேன்.

ரஜினிக்கு இருக்கிற பெரிய ரசிகர்கள் வட்டத்தில் நானும் ஒருவன். காலா படம் பார்ப்பேன். அவரை ரசிப்பேன்.

ஆனால் தியேட்டரில் பார்ப்பேன் என சொல்ல முடியாது. அங்கே ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருக்கும்.” என்று பேசினார்.

I will watch Kaala movie and as a fan i will admire Rajini acting says Seeman

More Articles
Follows