தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த படம் ‘இந்தியன் 2’.
கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு முன்பே இந்தியன் 2 பட செட்டில் கிரேன் அறுந்து விழுந்ததில் 4 பேர் மரணம் அடைந்தனர்.
இதன் பின்னர் ஊரடங்கு, கமல்ஹாசனின் அரசியல் பணிகள், கமலுக்கு மேக்அப் அலர்ஜி, நடிகர் விவேக் மரணம் போன்ற காரணங்களால் பல மாதங்களாக சூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து கொரோனா 2வது அலை ஊரடங்கும் வந்தது.
இதனிடையில் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படம், ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டானார் ஷங்கர்.
எனவே இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்க தடை கோர்ட்டில் தடை கோரியது லைகா நிறுவனம்.
ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தியது.
இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
எனவே மீண்டும் இந்த பிரச்சனை கோர்ட்டுக்கு வந்தது.
அதன்படி பிரச்சினைக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க இன்று கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் லைகா நிறுவனத்தின் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Madras High Court dismisses injunction filed by Lyca Productions against director Shankar