இயக்குநராக மாறிய விக்ரம் வேதா தயாரிப்பாளர்.; மாதவன் – நயன்தாரா – சித்தார்த் பேட்டி

இயக்குநராக மாறிய விக்ரம் வேதா தயாரிப்பாளர்.; மாதவன் – நயன்தாரா – சித்தார்த் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட பல வெற்றிகரமான மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர். YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த்.

இவர் தற்போது தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் மாதவன் சித்தார்த் மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து இவர்கள் மூவரும் கூறியதாவது..

*ஆர்.மாதவன் கூறுகையில்…

“சஷி இயக்குநராக அறிமுகமாவதில் மிகுந்த மகிழ்ச்சி. கட்டிட வடிவமைப்பு கலைஞராக இருந்து வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளராக மாறிய அவர், இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுப்பதை பார்ப்பது உற்சாகம் அளிக்கிறது.

‘இறுதி சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு YNOT உடனான எனது மூன்றாவது படமான ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

சித்தார்த் கூறுகையில்…

“ஒரு அற்புதமான தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர் மற்றும் அன்பான நண்பராக சஷியை எனக்கு தெரியும். அவரை இயக்குநராக பார்க்க ஆவலாக உள்ளேன். இந்த ‘டெஸ்டில்’ அவர் சிறப்பாக தேர்ச்சி பெறுவார் என நான் நம்புகிறேன். இப்படத்தில் எனது பங்களிப்பு குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” என்றார்.

*நயன்தாரா கூறுகையில்…

“சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் சிறந்த திறமைகள், தரமான கதைகள் உள்ளிட்டவற்றுக்கு சான்றாக திகழ்கின்றன. சஷிகாந்தின் அசாத்தியமான திறமையை பற்றி பல சகாக்களிடமிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவருடைய தனித்துவமான பார்வையும், கதை சொல்லும் திறமையும் இந்தப் படத்தை அமோக வெற்றியடைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

YNOT தயாரிப்பில் சஷிகாந்தின் இயக்கத்தில் உருவாகும் முதல் படமான ‘டெஸ்ட்’டில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், சிறப்பான கதாபாத்திரத்தில் இப்படத்தில நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.

Madhavan Nayanthara Siddharth talks about their upcoming film

ஹாலிவுட்டிலே இல்லாத திரைக்கதை யாத்திசை-யில்..; சக்திவேலன் பெருமிதம்

ஹாலிவுட்டிலே இல்லாத திரைக்கதை யாத்திசை-யில்..; சக்திவேலன் பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவான படம் ‘யாத்திசை’.

ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் ‘யாத்திசை’.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்தின் உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…*

“யாத்திசை.. சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் நிறைய பெருமையான படைப்புகளை வெளியிட்டுள்ளோம் அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும்.

இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள்.

எல்லோரையும் இந்தப்படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. டிரெய்லரை விட இந்தப்படத்தில் இன்னும் பிரமாண்டம் இருக்கும்.

ஹாலிவுட் போர் படங்களில் கூட இல்லாத ஒரு அட்டகாசமான திரைக்கதை இந்தப்படத்தில் இருக்குறது. கண்டிப்பாக இது மிக முக்கியமான படமாக இருக்கும்.

*நடிகர் விஜய் சேயோன் பேசியதாவது…*

யாத்திசையை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. இது நம்முடைய பெருமைமிகு படைப்பு. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இப்படம் வெற்றிபெற ஆதரவு தாருங்கள், நன்றி.

இத்திரைப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Distributor Sakthi Velan praised Yaathisai movie

Yaathisai Movie Press Meet

*With ‘Yaathisai’ trailer getting massive response by crossing 6 million views in just 6 days, the film is gearing up to be released in theatres across Tamil Nadu by Sakthivelan B’s Sakthi Film Factory on April 21*

1300 வருடங்களுக்கு முந்தைய கதை.. வழக்கொழிந்த மொழி.. 28 உதவி இயக்குனர்கள்.; ‘யாத்திசை’ ஹைலைட்ஸ்

1300 வருடங்களுக்கு முந்தைய கதை.. வழக்கொழிந்த மொழி.. 28 உதவி இயக்குனர்கள்.; ‘யாத்திசை’ ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவான படம் ‘யாத்திசை’.

ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் ‘யாத்திசை’.

வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘யாத்திசை’ தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இனிதே நடைபெற்றது.

*இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசியதாவது…*

தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப்படத்தின் உயிர் என்னுடைய டீம் தான். எடிட்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இருவரும் இல்லையென்றால் நான் இல்லை.

எங்களை நம்பி ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஒரு ஷெட்யூல் முடித்து காட்ட சொன்னார்கள், அதன் பிறகே இந்தப்படம் உருவாவது உறுதியானது. 1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது.

அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை, அது வியாபாரம் அல்ல. மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர் தான் உறுதியாக நின்றார். அவருக்கு நன்றி.

இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழு தான். 28 உதவியாளர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் உயிர் எல்லோரையும் இழுத்து உடன் இணைந்து பயணிக்கிறது.

இந்தப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல ஆனால் யாத்திசை மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.

28 assistant directors worked in Yaathisai movie

மாதவன் சித்தார்த் நயன்தாரா கூட்டணியை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்

மாதவன் சித்தார்த் நயன்தாரா கூட்டணியை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட பல வெற்றிகரமான மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர். YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த்.

இவர் தற்போது தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சக்தி வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமை மிகுந்த தயாரிப்பாளரான எஸ். சஷிகாந்த், தனது 23வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த ‘டெஸ்ட்’ என்னும் திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

*இது குறித்து தயாரிப்பாளர் சக்ரவர்த்தி ராமச்சந்திரா கூறுகையில்,*

“பத்தாண்டுகளுக்கும் மேலாக சஷியுடன் பணியாற்றியுள்ள நான் சரியான கதைகளைக் கண்டறிவதில் அவருக்கு இருக்கும் திறமையையும், சிறு விவரங்கள் மீதும் அவருக்குள்ள பேரார்வத்தையும் நன்கறிவேன். மிகவும் ஈர்க்கக்கூடிய கதையம்சம் கொண்டது ‘டெஸ்ட்’.

சஷி இயக்குநராக அறிமுகமாகும் படத்தை தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. YNOTன் முதல் தயாரிப்பின் போது இருந்ததைப் போலவே இப்போதும் மிகுந்த உற்சாகமாக இருக்கிறோம்,” என்றார்.

*எஸ்.சஷிகாந்த் கூறுகையில்…

“ஒரு கட்டிடக் கலைஞராக இருந்து தயாரிப்பாளராக மாறியதால், கதை சொல்லும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டேன். இந்தத் துறையில் உள்ள திறமையான திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றும் அதிர்ஷ்டம் பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்து வருகிறது.

அவர்களது அர்ப்பணிப்பு நிலையான உத்வேகமாக எனக்கு இருந்து வருகிறது. இப்போது, ஒரு இயக்குநராக எனது புதிய அத்தியாயத்தை தொடங்கும் போது, எனது கண்ணோட்டத்தை திரையில் கொண்டு வரவும், பார்வையாளர்களை சென்றடையும் கதைகளை கூறவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அசாதாரண திறமை கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளனர். அவர்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

மனித உணர்வுகளின் உன்னதத்தை விவரிக்கவுள்ள ‘டெஸ்ட்’, விளையாட்டுத்திறன், தோழமை உணர்ச்சி மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை மையப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு கதையாகும். பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர்த்தி அவர்களின் இதயங்களை தொடும் படமாக இது இருக்கும்.

சென்னை மற்றும் பெங்களூரில் ஜூலை 2023 வரை படப்பிடிப்பு நடைபெறும். 2024 கோடை காலத்தில் உலகளவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும்.

இத்திரைப்படம் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு #theTEST உடன் இணைந்திருங்கள்.

YNOT ஸ்டுடியோஸ் பற்றி

எஸ். சஷிகாந்தால் 2009ம் ஆண்டு நிறுவப்பட்ட YNOT ஸ்டுடியோஸ், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சென்னையில் இருந்து இயங்கும் YNOT ஸ்டுடியோஸ், கடந்த 13 ஆண்டுகளாக உயர்தர தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களை தயாரித்து விநியோகித்து வருகிறது.

‘இறுதி சுற்று’, ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘மண்டேலா’ மற்றும் பல திரைப்படங்கள் அதன் குறிப்பிடத்தக்க தயாரிப்புகளில் அடங்கும். புதுமையான கதைசொல்லல், துணிச்சலான கருப்பொருள்கள் மற்றும் அற்புத திறமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியத் திரைப்படத் துறையில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரிப்பதில் YNOT ஸ்டுடியோஸ் நற்பெயரைப் பெற்றுள்ளது.

2021ம் ஆண்டில் ‘மண்டேலா’ (தமிழ்) திரைப்படத்திற்காக தயாரிப்பாளராக ‘சிறந்த அறிமுகப் படத்திற்கான இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருது’ உட்பட ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் இந்நிறுவனம் வென்றுள்ளது.

தயாரிப்பாளர் திரு.எஸ்.சஷிகாந்த் தேசிய விருதை பெற்றார். புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு திரைப்படத் துறையின் எல்லைகளை விரிவுப்படுத்துவதிலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் கதைகளை வழங்குவதிலும் YNOT ஸ்டுடியோஸ் உறுதியாக உள்ளது.

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/studiosynot

ட்விட்டர்: https://twitter.com/studiosynot

யூடியூப்: https://www.youtube.com/@ynotstudios
முகநூல்: https://www.facebook.com/ynotstudios

மின்னஞ்சல்: [email protected]

TEST’ to be helmed by Sashikanth to feature Madhavan Siddharth Nayanthara

வெற்றி – ஷில்பா மஞ்சுநாத் இணையும் படம்.; கலைஞர்கள் விவரம் இதோ..

வெற்றி – ஷில்பா மஞ்சுநாத் இணையும் படம்.; கலைஞர்கள் விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘8 தோட்டாக்கள்’ படத்தின் நடிகர் வெற்றி மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் நடிகை ஷில்பா மஞ்சுநாத் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் அஷ்ரப் அலி இயக்க, சின்னத்தம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிக்குகிறது.

வெற்றி - ஷில்பா மஞ்சுநாத்

இப்படம் நேற்று அதிகாரப்பூர்வ பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் மூத்த குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் மகேஷ் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

மேலும், அருண் விஜய் நடித்த ‘தடம்’ படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வெற்றி - ஷில்பா மஞ்சுநாத்

Vetri & Shilpa Manjunath’s film begined with pooja

தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு ரஜினி ஆறுதல்.; உதவிய சூர்யா – கருணாஸ் – லாரன்ஸ்

தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு ரஜினி ஆறுதல்.; உதவிய சூர்யா – கருணாஸ் – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் விஏ.துரை.

இவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தார்.

விக்ரம் – சூர்யா நடிப்பில் பாலா இயக்கிய ‘பிதாமகன்’, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை.

மேலும் ரஜினிகாந்த் தயாரித்து நடித்து ‘பாபா’ படத்திலும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது மனைவி, மகளை பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வருகிறார்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிப்பு இருந்தது. சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மேலும் வி.ஏ.துரை சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாயும் , கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டி இருந்தனர்.

ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து இருந்தார். அத்துடன், நான் பார்த்துக் கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் என நம்பிக்கை மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரின் உதவி குறித்த எந்த தகவலும் அவரது தரப்பில் இருந்து வெளிவரப்படவில்லை.

தற்போது அண்ணா நகரில் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வி.ஏ.துரை.

மருத்துவ செலவிற்கான ரூபாய் 3 லட்சத்தை நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரான்ஸ் மருத்துவ மனையில் செலுத்தி உதவியிருக்கிறார்.

rajini suriya Karunas Lawrence helped producer durai

More Articles
Follows