தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் கலையரசன்.
மேலும் ராஜா மந்திரி, டார்லிங்2, அதே கண்கள் உள்ளிட்ட படங்களில் தன் நாயகனாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் புதிதாக நடிக்கவுள்ள ஒரு படத்திற்கு டைட்டானிக் என பெயரிட்டுள்ளனர்.
‘காதலும் கவுந்துபோகும்’ என்ற டேக்லைனுடன் இந்த டைட்டில் உள்ளது.
இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக சிவி. குமார் தயாரிக்கிறார்.
ஜானகிராமன் என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சாவேரி என டபுள் ஹீரோயின்ஸாம்.