‘மாவீரன்’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

‘மாவீரன்’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ‘மாவீரன்’ படத்தின் முதல் சிங்கிள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர் விரைவில் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதியை எதிர்பார்க்கலாம்.

மேலும், சன் டிவி மற்றும் அமேசான் பிரைம் இப்படத்தின் சாட்டிலைட் , டிஜிட்டல் உரிமைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Maaveeran’s first single will release on Christmas

யோகி பாபு – லட்சுமி மேனன் நடிக்கும் ‘மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

யோகி பாபு – லட்சுமி மேனன் நடிக்கும் ‘மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஐபி முருகேஷ் இயக்கும் படத்தில் யோகி பாபுவும், லட்சுமி மேனனும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘மலை’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் காளி வெங்கட், சிங்கம்புலி, ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லட்சுமி மேனன் மற்றும் யோகி பாபு ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து மலை கிராமத்திற்கு மருத்துவராக வரும் பெண்ணாக நடிக்கிறார்.

மேலும், ஐபி முருகேஷ் அவர்கள் இயக்குனர்கள் சுசீந்திரன் மற்றும் சீனு ராமசாமி ஆகியோரின் முன்னாள் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

Yogi Babu and Lakshmi Menon starrer ‘Malai’ first look

பா.ரஞ்சித் பிறந்தநாளில் ‘தங்கலான்’ பட புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

பா.ரஞ்சித் பிறந்தநாளில் ‘தங்கலான்’ பட புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரம் வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இன்று பா.ரஞ்சித் பிறந்தநாள் என்பதால் ‘தங்கலான்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டள்ளது.

மேலும், இப்படத்தை அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Thangalan team released new poster on Pa Ranjith’s birthday

டிசம்பர் 9-10 இந்த வார தியேட்டர் & ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் & ரீ-ரீலீஸ்.?

டிசம்பர் 9-10 இந்த வார தியேட்டர் & ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் & ரீ-ரீலீஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை டிசம்பர் 9ல் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள படங்கள் இதோ…

ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’…் நட்டி நடராஜ் நடித்த ‘குருமூர்த்தி’, கலையரசன், ரம்யா நம்பீசன் நடித்த ‘எஸ்டேட்’ & சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ’ ஆகிய தமிழ் படங்கள் இந்த வாரம் (டிசம்பர் 9) வெளியாக உள்ளது.

ஓடிடி ரிலீஸ்:

இயக்குநர் ரஃபீக் இஸ்மாயீல் இயக்கியுள்ள ‘ரத்தசாட்சி’ ஆஹா ஓடிடி தளத்திலும்…

ரோகினி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வினோத் சாகர் நடித்துள்ள ‘விட்னஸ்’ சோனிலிவ் ஓடிடி தளத்திலும் 9-ம் தேதி வெளியாகிறது.

கன்னட படங்களின் 2 டப்பிங் படங்கள்…

ப்ரியாமணி நடித்துள்ள ‘டிஆர்56’ மற்றும் ரிஷிகா ஷர்மா இயக்கியுள்ள ‘விஜயானந்த்’ (Vijayanand Biopic) ஆகிய இரண்டு படங்கள் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன.

ஓடிடி வெப் சீரிஸ்

அஞ்சலி நடித்துள்ள ‘ஃபால்’ (Fall) தமிழ் இணையத்தொடர் ஹாட்ஸ்டாரில் 9-ம் தேதி வெளியாகிறது.

ஏற்கெனவே தியேட்டரில் ரிலீசான படங்கள் ஓடிடியில் ரிலீஸாகிறது.. அவை…

சுந்தர்.சி இயக்கிய ‘காஃபி வித் காதல்’ ஜீ5 ஓடிடி தளத்தில் 9-ம் தேதி வெளியாகிறது.

சமந்தா நடித்த ‘யசோதா’ அமேசான் ப்ரைம் ஓடிடியில் 9-ம் தேதி வெளியாகிறது.

ரஜினி பர்த் டே ஸ்பெஷல்..ரீ-ரீலீஸ் படங்ஙள்

டிசம்பர் 10ஆம் தேதி ‘பாபா’ ரீ- ரிலீசாகிறது.

ஷங்கர் ரஜினி கூட்டணியில் உருவான ‘சிவாஜி’ திரைப்படமும் டிசம்பர் 9 முதல் 15 வரை பிவிஆர் & சினிபொலிஸ் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிரம்மாண்ட திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கால் பாதிக்கும் சாய் பல்லவி

பிரம்மாண்ட திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கால் பாதிக்கும் சாய் பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாய் பல்லவி ஒரு பிரம்மாண்டமான, படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தில் சீதா தேவியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

‘பிரம்மாஸ்திரா’ புகழ் ரன்பீர் கபூர் இதிகாச புராண படத்தில் ராமராக நடிக்கவுள்ளார்.

தீபிகா படுகோன் மற்றும் கரீனா கபூர் படத்தில் இருந்து விலகியதை அடுத்து சாய் பல்லவிக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

ரஜினி பிறந்தநாள் மெகா கொண்டாட்டம்.; 2 படங்களை ரீ-ரீலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்

ரஜினி பிறந்தநாள் மெகா கொண்டாட்டம்.; 2 படங்களை ரீ-ரீலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

பொதுவாக ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் ஓரிரு காட்சிகள் திரையிடப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். இதையே ரசிகர்கள் புதிய படம் போல கொண்டாடுவார்கள்..

ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ரஜினி நடித்த ‘பாபா’ மற்றும் ‘சிவாஜி தி பாஸ்’ ஆகிய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன.

இதற்காக நிறைய திரையரங்குகள் ரெடியாகி வருகின்றன.

பாபா

‘பாபா’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவானதால் அந்தப் படத்திற்கு புதிய காட்சிகளை இணைத்து டப்பிங் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

எனவே தமிழகத்திலும் வெளிநாட்டிலும் நிறைய தியேட்டர்களில் வெளியிட உள்ளனர்.

டிசம்பர் 10ஆம் தேதி ‘பாபா’ ரிலீசாகவுள்ள இந்த நிலையில் தற்போது ஷங்கர் ரஜினி கூட்னணியில் உருவான ‘சிவாஜி’ திரைப்படமும் டிசம்பர் 9 முதல் 15 வரை பிவிஆர் & சினிபொலிஸ் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த வருடம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இது மெகா விருந்து தான் என்பதில் சந்தேகம் இல்லை.

சிவாஜி தி பாஸ்

Superstar rajinikanth  re-releasing 2 films on his birthday

More Articles
Follows