ரசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் ‘ரவுடி பேபி’ சாங்; புதிய சாதனை

ரசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் ‘ரவுடி பேபி’ சாங்; புதிய சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rowdy Baby song created new record by crossing 20M views in Youtubeதனுஷ் தயாரித்து அவரது நடிப்பில் வெளியான படம் மாரி2.

பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் தனுஷ் உடன் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலரும் நடிக்க, யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் யூடியூபிலம் நல்ல வரவேற்பை ஆரம்பம் முதலே பெற்று வருகிறது.

தற்போது வரை ரவுடி பேபி பாடலை 200 மில்லியன் அதாவது 20 கோடி பேர் பார்த்துள்ளனர்.

இதன்மூலம் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் பாடல் என்ற பெருமையை இந்த ‘ரவுடி பேபி’ பாடல் பெற்றுள்ளதாம்.

Rowdy Baby song created new record by crossing 20M views in Youtube

யஷ்ஷின் KGF பட 2ஆம் பாகத்தில் சஞ்சய் தத்..?

யஷ்ஷின் KGF பட 2ஆம் பாகத்தில் சஞ்சய் தத்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yash and Sanjay Duttகன்னடத்து சினிமா ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் ரிலீசாகி அனைவரின் பாராட்டைப் பெற்ற படம் கே.ஜி.எஃப்.

பிரசாந்த் நீல் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

கன்னட சினிமாவில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்துக்கு கிடைத்தது.

இதன் தமிழ் டப்பிங் படத்தை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.

தற்போது 2வது பாகத்திற்கான படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளனர்.

இதில் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம்.

தாணு தயாரிப்பில் ‘காக்க காக்க 2’; சூர்யா-ஜோதிகா மீண்டும் ஜோடி.?

தாணு தயாரிப்பில் ‘காக்க காக்க 2’; சூர்யா-ஜோதிகா மீண்டும் ஜோடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Jyothika again pair up for Kaaka Kaaka sequelதமிழ் சினிமாவில் புதிய கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா? எனத் தெரியவில்லை. அல்லது புதிய கதைகளை எடுப்பதை ரிஸ்க்காக நினைத்துவிட்டார்களோ என்னவோ?

பழைய ஹிட்டான படங்களின் கதையுடன் தொடர்பு படுத்தி 2ஆம் பாகத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்கள் இயக்குனர்.

இதில் ஒன்றிரண்டு படங்களை தவிர மற்றவை அனைத்துமே தோல்விதான்.

அண்மைகாலங்களில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டித்த படம் `காக்க காக்க’.

அப்படத்தின் 2வது பாகத்தை உருவாக்க தயாராகி வருகிறார்களாம்.

கலைப்புலி தாணு, இது தொடர்பாக கௌததம் மேனனனிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் சூர்யா – ஜோதிகாவை நடிக்க வைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Suriya and Jyothika again pair up for Kaaka Kaaka sequel

தன் பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி

தன் பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aariசமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் ‘அலேகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர்.

ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார்.

இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ்-ன் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ்-ன் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். ‘அய்யனார்’ புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை – சத்யா, ஒளிப்பதிவு – தில் ராஜ், படத்தொகுப்பு – கார்த்திக் ராம், பாடல்கள் – யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன்.

‘அலேகா’ மூலம் காதலுக்கும் குரல் கொடுக்கும் ஆரி

‘அலேகா’ மூலம் காதலுக்கும் குரல் கொடுக்கும் ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

alekaசிறுவயது முதலே காதலர் தினமும் காதலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. நானே மறந்தாலும் அதுவே ஞாபகப்படுத்திவிடும். ஏனென்றால், காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ( நேற்று ) என் பிறந்த நாள். ஆனால், இந்த வருட பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது நான் நடிக்கும் ‘அலேகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், என் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதில் பெருமைதான் .
இது,
காமத்தை வியாபாரமாக்கும்
நோக்கத்தோடு
எடுக்கப்பட்ட படம் இல்லை
இது காதலின்
உயர்வை சொல்லும் படம்

காதலின் தெரிவே காமத்தின் தொடக்கம்

காதல் இல்லா காமமும் இல்லை..
காமம் இல்லா காதலும் இல்லை.

ஆனால்..
காமத்தில் வரும் காதல் காலம்தாண்டி வாழ்வது இல்லை. காதலில் வரும் காமம்தான் காலம்தாண்டி வாழும்.

இது எங்கள் கதை அல்ல
உங்கள் காதல் கதை..
என்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு விளக்கமளித்துள்ளார்.

‘மாலை பொழுதின் மயக்கத்திலே’, ‘நெடுஞ்சாலை’ என்று படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் ஆரி, இப்படத்தில் முழுக்க முழுக்க காதலனாக நடித்திருக்கிறார்.அதேபோல், சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் இப்பபடத்தில் நடிப்பதில் பெருமைகொள்கிறேன் என்றார் ,ஆரி.

முன் காலத்தில் காதலுக்கு எதிரியாக ஜாதி, மதம் மற்றும் அந்தஸ்து இருந்தது. ஆனால், இப்போது காதலுக்கு காதலே எதிரியாக இருக்கிறது. எங்கள் காதல் அல்ல; உங்கள் காதல் கதை. இந்த வரிகள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும். இப்படத்தின் முதல் வீடியோ ‘டிக்டாக்’-ல் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தது.

மேலும் இது ஜாலியான காதல் படமாக இல்லாமல், காதலை ஆழமாக உணர்த்தும் நிஜமான காதலை கூறும் படமாக இருக்கும். இப்படம் இக்காலகட்டத்திற்கு மட்டுமல்ல, அனைவரையும் தொடர்படுத்தும் படமாகவும், பிரதிபலிக்கும் படமாகவும் இருக்கும்.

சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கு குரல் கொடுக்கும் ஆரி, ‘அலேகா’ படம் மூலம் ‘ஆரோக்யம் குறைந்தால் உடல் கெட்டுவிடும்; காதல் குறைந்தால் வாழ்க்கை கெட்டுவிடும்’ என்று காதலுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ்-ன் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ்-ன் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். ‘அய்யனார்’ புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை – சத்யா, ஒளிப்பதிவு – தில் ராஜ், படத்தொகுப்பு – கார்த்திக் ராம், பாடல்கள் – யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன்.

கிருஷ்ணம் பட ட்ரைலரை வெளியிட்டு வாழ்த்திய எஸ்ஏ.சந்திரசேகர்

கிருஷ்ணம் பட ட்ரைலரை வெளியிட்டு வாழ்த்திய எஸ்ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veteran filmmaker SA Chandrasekhar launches Krishnam TrailerPNB சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தினேஷ் பாபு இயக்கத்தில் புது முகங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் கிருஷ்ணம்.

கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை வைத்து கிருஷ்ணனால் நடந்த அதிசயத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நாயகனாக நோயால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணன் அருளால் மீண்டும் வந்த இளைஞரே நடித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரைலரும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலரை பிரபல இயக்குனரும் தளபதி விஜயின் தந்தையுமான SA சந்திரசேகர் வெளியிட்டு படக்குழுவை ஊக்கப்படுத்தியுள்ளார்.

Veteran filmmaker SA Chandrasekhar launches Krishnam Trailer

இதோ கிருஷ்ணம் படத்தின் ட்ரைலர் உங்களுக்காக

More Articles
Follows