தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்தது

தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maari 2பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலெஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் மாரி 2 .

படத்தின் படப்பிடிப்பு கடைசியாக ஒரு சண்டை காட்சியுடன் நிறைவடைந்தது. ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது.

விரைவில் அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டு முழுப்படமாக்கப்படும்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

சர்கார் விஜய்க்காக தீம் மியூசிக் போடும் ஏஆர். ரஹ்மான்

சர்கார் விஜய்க்காக தீம் மியூசிக் போடும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay AR Rahmanசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் சர்கார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இதற்கு முன்பே விஜய் நடித்த உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் தீம் மியூஸிக் எதுவும் போட்டதில்லை.

ஆனால் முதன்முறையாக, ‘சர்கார்’ படத்தில் விஜய்க்காக ஸ்பெஷலாக தீம் மியூஸிக் போட்டு வருகிறாராம்.

ஏஆர். முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் அனிருத் போட்ட தீம் மியூசிக் படு பாப்புலர் ஆனது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் சர்க்காரை விலைக்கு வாங்க முயற்சிக்கும் மெர்சல் நிறுவனம்

விஜய்யின் சர்க்காரை விலைக்கு வாங்க முயற்சிக்கும் மெர்சல் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

அது வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது.

மேலும் கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய்யும் முருகதாசும் 3வது முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற மெர்சல் படத்தை தயாரித்து ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அஜித்-சூர்யாவை தொடர்ந்து சிம்புவை இயக்கும் பிரபல டைரக்டர்

அஜித்-சூர்யாவை தொடர்ந்து சிம்புவை இயக்கும் பிரபல டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu with venkat prabhuநடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் சென்னை 28 படத்தின் மூலம் படு பாப்புலர் ஆனார் டைரக்டர் வெங்கட் பிரபு.

இதனையடுத்து அஜித் நடித்த மங்காத்தா, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, கார்த்தி நடித்த பிரியாணி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

தற்போது ஆர். கே. நகர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சிம்பு நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பார் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மூவரும் சந்தித்து பேசியுள்ளதாகவும், விரைவில் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரவிக்குமார்

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and ravikumarரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை படம் வசூல் வேட்டையாடியது.

இது வெளியாகி இன்றோடு மூன்றாண்டுகளை கடந்துள்ளது.

இதுகுறித்து பட இயக்குனர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது! நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை.

நிச்சயம் நாளையை நமதாக்குவோம்! எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்கவுள்ளார் ரவிக்குமார்.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க, கருணாகரன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன்2-வில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களை தியேட்டரில் பார்க்கலாம்

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன்2-வில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களை தியேட்டரில் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First clap Season 2 Short listed 5 films will be screened in Theatresமூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை செயலதிகாரி அரவிந்த் ரங்கநாதன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் அந்த ஐந்து குறும்படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக மூவி பஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..

மூவி பஃப் பர்ஸ்ட் கிளாப் சீஸன் -2 வின் போட்டிகள் ஜனவரி மாதம் இருபதாம் தேதியன்று தொடங்கியது. இந்த போட்டியில் முதல் சீஸனை விட மும்மடங்கு அளவில் அதாவது 750க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் போட்டியாளர்களாக பங்குபெற்றனர்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குறும்படங்களையும் தேர்வு குழுவினர் பார்வையிட்டனர். தேர்வு குழுவில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹாம்ச, இயக்குநர்கள் ராம் சுப்ரமணியன். விக்னேஷ் சிவன், கார்த்திக் நரேன், நித்திலன் சுவாமிநாதன், அருண் பிரபு, ஒலிப்பதிவு பொறியாளர் உதயகுமார், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், விமர்சகர் சதீஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் ஐம்பது குறும்படங்களை முதல் கட்டமாகவும்,பிறகு அதிலிருந்து ஐந்து குறும்படங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள்

குக்கருக்கு விசில் போடு (இயக்கம் ஷியாம் சுந்தர்)

கல்கி (இயக்கம் விஷ்ணு எதவன்)

கம்பளிப்பூச்சி (இயக்கம் V.G. பாலசுப்ரமணியன்)

மயிர் (இயக்கம் லோகி)

பேரார்வம் (இயக்கம் சாரங்கு தியாகு)

இந்த ஐந்து படங்களையும் ஜுன் 29 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கியூப் சிஸ்டம் உள்ள 200 திரையரங்குகளில் ஐந்து வாரங்களுக்கு சுழற்சி முறையில் திரையிடப்படுகிறது. இதன் மூலம் இந்த ஐந்து குறும்படங்களையும் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பெரிய திரையில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு உருவாகிறது.

அத்துடன் நில்லாமல் இதனை கண்டு ரசிக்கும் மக்கள் தங்களுக்கு விருப்பமான குறும்படங்களை எஸ் எம் எஸ் முறையில் பதிவிட்டு வாக்களிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.moviebuff.com என்ற இணைய தளத்தினை பார்வையிட்டு விளக்கம் பெறலாம்.

அதிக வாக்குகளை பெறும் குறும்படங்களை தேர்வு குழு பரிசீலனை செய்து முடிவுகளை அறிவிக்கும்.

முதல் பரிசு மூன்று லட்சம்

இரண்டாம் பரிசு இரண்டு லட்சம்

மூன்றாம் பரிசு ஒரு லட்சம்

இது தவிர தேர்வு பெற்ற இயக்குநர்கள் 2டி நிறுவனத்தில் கதைசொல்லும் வாய்ப்பும், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்.
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 2டி நிறுவனத்தை சார்ந்த தயாரிப்பாளர் ராஜசேகர் பேசும் போது, ‘இந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற ஐம்பது படைப்பாளிகளையும் நான் ஒரு முறை சந்தித்து கலந்துரையாடவிருக்கிறேன்.

தேர்தெடுக்கப்பட்ட இந்த ஐந்து இயக்குநர்களும் வெற்றிப் பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

திறமையான படைப்பாளிகளை இனம் கண்டு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்புகளை உருவாக்கி தரும் இந்த அரிய முயற்சியை மூவி பஃப் தொடரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பேருதவியாக இருந்த நாக் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கும், லிட்டில் ஷோஸ் நிறுவனத்திற்கும், மூவி பஃப் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.’ என்றார்.

First clap Season 2 Short listed 5 films will be screened in Theatres

First clap Season 2 Short listed 5 films will be screened in Theatres

 

More Articles
Follows