‘மாநாடு’ படம் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த புரொடியூசர் சுரேஷ் காமாட்சி

suresh kamachiவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா எஸ்ஏசி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’.

யுவன் இசையமைத்த இப்படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் மூலம் தயாரித்துள்ளார்.

இப்பட டப்பிங் முடிந்து அவரும், சிம்புவும் படத்தை பார்த்துள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளதாவது…

“மங்காத்தா படத்தை உருவாக்கியவர் த்ரில்லிங் மாஸ் என்டர்டெயினருடன் திரும்பி வந்துள்ளார்.

எங்கள் பாசத்துக்குரிய இயக்குனருக்கு நன்றி.

அற்புதமான நடிப்பை எஸ்.ஜே.சூர்யா தந்துள்ளார்” என ‘மாநாடு’ பற்றி பகிர்ந்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன், கல்யாணி ப்ரியதர்ஷிணி ஆகியோரின் நடிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தை தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவது என்பதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu latest update by producer suresh kamatchi

Overall Rating : Not available

Latest Post