பைரசியுடன் தொடர்பு..? வதந்திகளை மறுக்கும் லைகா

பைரசியுடன் தொடர்பு..? வதந்திகளை மறுக்கும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lyca productionsதமிழ் சினிமாவை சீர் குலைக்கும் அரக்கனாக உருவெடுத்துள்ளது ஆன்லைன் பைரசி.

இதில் முக்கிய இணையதளங்களான தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் ஆகியவற்றை தடுக்க முடியாமல் தவிக்கிறது தமிழ் சினிமா.

இந்நிலையில், இந்த இணையதளங்களை நடத்துவது சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா என்றும், அது விஷாலுக்கு தெரியும் என சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கு லைகா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில்… “லைகா நிறுவனம் ஆன்லைன் பைரசியை ஊக்கப்படுத்துவதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை.

லைகா நிறுவனத்திற்கு எதிராக கட்டுரை வெளியிட்ட அந்த இணையதளம் மற்றும் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

திரையுலகிற்கு எல்லா விதத்திலும் நாங்கள் ஆதரவாக இருந்துள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanஒரு பக்கம் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மற்றொரு பக்கம், தயாரிப்பாளராக உருவெடுத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

தன்னுடன் படித்த கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.

அருண்ராஜா காமராஜா ஏற்கெனவே நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் தலைப்பு மற்றும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் தலைப்பு ‘கனா’ என தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் ஆடும் கிரிக்கெட்டை மையப்படுத்தியுள்ள இப்படத்தை உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kanaa first look poster

விஜய்வசந்துடன் இணையும் நந்திதா; 7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்!

விஜய்வசந்துடன் இணையும் நந்திதா; 7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Vasanth teams up with Nandita Swetha for Narmatha movieஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா’.

நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது.

சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார்.

கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது…

‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன்.

இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.

கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது’ என்றார்.

இயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கையை பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதலைப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘ ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இவர், இதற்காக சிறந்த இயக்குநர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Vasanth teams up with Nandita Swetha for Narmatha movie

Vijay Vasanth teams up with Nandita Swetha for Narmatha movie

நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷுக்கு கமல்-விஜய் பாராட்டு

நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷுக்கு கமல்-விஜய் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal and Vijay congratulates Keerthy Suresh for Nadigaiyar Thilagamகீர்த்தி சுரேஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான படம் ‘நடிகையர் திலகம்’.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார் டைரக்டர் நாக் அஸ்வின்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷை அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டினார்.

இது தொடர்பாக ஒரு வீடியோவை கமல் வெளியிட்டு இருந்தார்.

தற்போது விஜய்யும் கீர்த்தி சுரேஷை பாராட்டி இருக்கிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal and Vijay congratulates Keerthy Suresh for Nadigaiyar Thilagam

Kamal congratulates Keerthy Suresh for Nadigaiyar Thilagam

 

Breaking: பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

Breaking: பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Writer Balakumaran passes awayபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். இவர், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை எழுதியுள்ளார்.

அவர் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம். பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.

இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருதுபெற்றார். ரஜினி நடித்த பாட்ஷாபடத்தில் ’ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி’ என்ற வசனத்தை எழுதியவர் .

குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளார். 72 வயதான பாலகுமாரன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு நேற்றி நள்ளிரவு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடும் மூச்சுத்திணறல் காரணமாக எழுத்தாளர் பாலகுமாரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அவர் மரணமடைந்துள்ளார்.

Tamil Writer Balakumaran passes away

விபத்தில் இரு கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி உதவி!

விபத்தில் இரு கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி உதவி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthமதுரை திருநகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். வயது 33.

திருமணமான இந்த இளைஞர் சில தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் பயணம் செய்த போது, செங்கல்பட்டு அருகே படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த அடிபட்டார்.

விபத்து நடந்த இடத்திலேயே ஒரு கால் ரயில் சக்கரத்தில் மாட்டி துண்டிக்கப்பட்டுவிட்டது.

உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

மிகவும் அடிபட்டு குணப்படுத்த முடியாத நிலையில் இருந்த அவரது இன்னொரு காலும் அகற்றப்பட்டது.

இந்த விஷயம் தலைவர் ரஜினிகாந்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

விஷயம் அறிந்து மிகவும் வருந்திய ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரை தன் சார்பில் அனுப்பி வைத்தார்.

அவருடன் தென் சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் ராமதாசும் சென்றார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசி விஸ்வநாதனை நேரில் சென்று சுதாகர் அவர்கள் பார்வையிட்டு மருத்துவரிடம் அவருடைய உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.

அவரது பெற்றோர்கள், மனைவியிடம் ரஜினி சார்பில் நிதி உதவி வழங்கியதுடன், தனது தொலைபேசி எண்ணை அளித்து எந்நேரம் வேண்டுமாணாலும் தொடர்பு கொள்ளுங்கள்.

வரும் நாட்களில் காசி விஸ்வநாதன் மற்றும் அவரது குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் ரஜினி சார்பில் வாக்குறுதி அளித்துவிட்டு வந்தார் சுதாகர்.

More Articles
Follows