விக்ரம் & லாரன்ஸ் உடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.?

விக்ரம் & லாரன்ஸ் உடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தற்போதைய வெற்றி பட இயக்குனர்களின் முக்கியமான இடத்தை அடைந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய நான்கு படங்களுமே ஒன்றை ஒன்று மிஞ்சி வசூல் வேட்டை ஆடியது.

இதற்கு அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து ‘தளபதி 67’ என்ற படத்தை இயக்க உள்ளார் லோகேஷ்.

இதற்கான பூஜையும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது இரண்டு புதிய படங்களை லோகேஷ் கனகராஜ் தயாரித்து தன் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரு படத்தை ரத்னகுமார் இயக்க லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு படத்தில் சியான் விக்ரம் நடிக்க மற்றொரு உதவியாளர் மகேஷ் என்பவர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

‘தமிழ்க்குடிமகன்’ பர்ஸ்ட் லுக்.; சேரனை போல செய்ய எவராவது முன்வருவார்களா.?

‘தமிழ்க்குடிமகன்’ பர்ஸ்ட் லுக்.; சேரனை போல செய்ய எவராவது முன்வருவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் சேரன்.

தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை பெற்ற தந்துள்ளார் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டுள்ளார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தமிழ்க்குடிமகன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் சேரன்.

இசக்கி கார்வண்ணன் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரீபிரியங்கா நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் லால், துருவா, தீபா, வேலாராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழ்க்குடிமகன் படத்தை தயாரிக்கிறது. ராஜேஷ் யாதவ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

நடிகராக இது சேரனுக்கு 36-வது படம்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 12ல் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளனர்.

மாநகரை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் & துணை நடிகர் – நடிகைகள் ஆகிய எளிய மக்களை வைத்து போஸ்டரை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

பாபா ரீ-ரிலீஸ்.. ரீ-ரிவ்யூ.; என்ன சொல்ல வருகிறார்? மீண்டும் குழப்பும் ரஜினி.!?

பாபா ரீ-ரிலீஸ்.. ரீ-ரிவ்யூ.; என்ன சொல்ல வருகிறார்? மீண்டும் குழப்பும் ரஜினி.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2002ல் ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த திரைப்படம் ‘பாபா’.

தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் மறுபடியும் வெளியாகி உள்ளது.

முதன்முறை ரிலீஸ் ஆனபோது ஏழு மந்திரங்கள் இருந்தன.. தற்போது ஐந்து மந்திரங்கள் இருந்தது. ‘படையப்பா’ படத்திற்குப் பிறகு இந்த படம் வெளியானதால் நாசர் மற்றும் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன.

மேலும் சீனா & ஜப்பான் நாடுகளில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில் ‘பாபா’ படத்திலும் ஜப்பான் ரசிகருக்கான காட்சிகள் இருந்தன.

தற்போது இந்த இரண்டு மந்திர காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன் ரஜினி அரசியலில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்டது.் அப்போது அரசியல் சார்ந்த அதற்கான காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது அது தொடர்பான பாடல் வரிகளும் அதற்கான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக… “புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய் புரியாத புதிர் நீ பாபா.. என்ற பாடல் வரி காட்சிகள் இருந்தன. தற்போது நீக்கி விட்டனர்.

‘சக்தி கொடு….’ என்ற பாடலில் மடிவெடுத்தால் பின்னால் நான் தடம் மாற மாட்டேன்… முன்வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்.. என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன் என்ற வரிகள் இடம் பெற்றிருந்தன. அந்த பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்.. உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடி விடமாட்டேன் என்ற வரிகள் இருந்தன.

மேலும்… கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்.. காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் என்ற வரிகள் மட்டும் இடம்பெற்றுள்ளது.

முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில்.. ‘ஆன்மீகமா.? அரசியலா.? என்று இருந்த நிலையில் ஆன்மீகத்தை தவிர்த்து மக்களை நோக்கி வருவதாக அரசியல் வருவது போல இருந்தன.

ஆனால் தற்போது உள்ள நிலையில் ரஜினிகாந்த் வருகிறார்.. மக்கள் காத்திருப்பது போல உள்ளனர்.

இதன் மூலம் ரஜினிகாந்த் என்ன சொல்ல வருகிறார்? என்பது புரியாமல் ரசிகர்களும் மக்களும் உள்ளனர்.

தன்னையும் குழப்பி ரசிகர்களையும் குழப்பம் முயற்சிக்கிறார் ரஜினிகாந்த்.

இனி அரசியலுக்கு வர மாட்டேன்.. என தீர்க்கமாக அறிவித்த பின் “காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்..” என ரஜினிகாந்த் அந்த பாடல் வரியை மட்டும் வைத்த நோக்கம் என்ன என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

இதற்கெல்லாம் பதில் அளிப்பாரா.?

Baba Re release Re Review will Rajini answer for this?

ரஜினி தைரியம் யாருக்கு வரும்.? தோல்வி படத்தை வெற்றி படமாக்கிய ‘பாபா’ மேஜிக்.!

ரஜினி தைரியம் யாருக்கு வரும்.? தோல்வி படத்தை வெற்றி படமாக்கிய ‘பாபா’ மேஜிக்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களுக்குப் பிறகு ரஜினியின் ‘பாபா’ படம் ரீரிலீஸ் ஆனது.

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் வெளியான நிலையில் சில காட்சிகளை மட்டுமே திரையிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானதால் தமிழகமெங்கும் இந்தப் படத்தை நிறைய அரங்குகளில் திரையிட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த வாரம் வெளியான படங்களை விட இந்த பாபா-வின் மறுவெளியீட்க்கு மவுஸ் அதிகரித்துள்ளது.

இதுவரை 3 நாட்களில் ஒரு கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாகவே ஒரு சூப்பர் ஹிட் படத்தை தான் ரீ ரிலீஸ் செய்வார்கள். ஆனால் ‘பாபா’ படத்தை தயாரித்த ரஜினிகாந்தே இது தோல்வி என ஒப்புக்கொண்ட நிலையில் அவரே 20 வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் செய்துள்ளார்.

ஆனால் அன்று தோல்வி அடைந்த நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி அடைந்துள்ளது எனலாம்.

ரஜினியின் இந்த புதிய முயற்சி கோலிவுட் வட்டாரத்தில் புதிய உற்சாகத்தை நம்பிக்கையும் தந்துள்ளது எனலாம்.

ஒரு தோல்வி படத்தை தற்போது வெற்றி படமாக்கி காட்டி இருக்கிறார் ரஜினிகாந்த் என திரைப்பட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியைப் போல எவருக்காவது தங்கள் தோல்வி படங்களை மீண்டும் ரிலீஸ் செய்ய தைரியம் இருக்கா? எனவும் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Will any actor Re release their failure movies

‘ஜெயிலர்’ பட ரஜினியின் கேரக்டர் வீடியோ.; பிறந்தநாளில் ரசிகர்கள் அப்செட்

‘ஜெயிலர்’ பட ரஜினியின் கேரக்டர் வீடியோ.; பிறந்தநாளில் ரசிகர்கள் அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.

நெல்சன் இயக்கத்துல் உருவாகும் இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இன்று 2022 டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த கேரக்டருக்கான அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் ரஜினிகாந்த் மாஸாக உடை அணிந்து கண்ணாடி அணிந்து ஒரு நீண்ட அருவாளை வெளியே எடுப்பதாக கெத்தாக வருகிறார்.

ஜெயிலர்

இதில் ரஜினி டைட்டில் கார்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக ரஜினியின் டைட்டில் கார்டுகளுக்கு தேனிசைத் தென்றல் தேவாவின் மிரட்டலான இசையே பின்னணியில் ஒலிக்கும். ஆனால் இந்த முறை நெல்சன் அதை மாற்றி இருக்கிறார்.

இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரஜினி கேரக்டர் வீடியோ பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பு பெறவில்லை என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பு நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ திரைப்படம் மோசமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஜெயிலர்

Jailer movie Muthuvel Pandiyan character Rajini fans upset

————–

#Muthuvel_Pandian arrives ???

#Superstar @rajinikanth a very Happy Birthday!

#SuperstarRajinikanth #HBDSuperstar #HBDSuperstarRajinikanth

#Jailer l #filmistreet

https://t.co/fI7crxI3vO

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘செத்தும் ஆயிரம் பொன்’ புகழ் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிக்க இருக்கிறார்.

ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க உள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

ஜி.வி.பிரகாஷ்

இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு மற்றும் கிருபாகரன் படத்தொகுப்பு செய்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.

ஜி.வி.பிரகாஷ்

Aishwarya Rajesh joining a first time GV Prakash

More Articles
Follows