கமல் பட இசை விழாவில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் பங்கேற்பு..; அஜித் மட்டும்.?

கமல் பட இசை விழாவில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் பங்கேற்பு..; அஜித் மட்டும்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், ஷிவானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலின் ‘விக்ரம்’ பட இசை வெளியீடு

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

மே 11 மாலை 7 மணிக்கு (சொன்ன நேரத்தில் ரிலீசாகல) ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பத்தல பாட்டு வைத்த வேட்டு..; ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல.; கமலை எச்சரிக்கும் RTI ஆர்வலர்

இந்த நிலையில் வருகிற மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது.

இந்த விழாவில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நடிகர் அஜித் அழைத்தாலும் எதிலும் கலந்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவரை அழைக்க வாய்ப்பில்லை.

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் படத்தின் இசை வெளியீடு நடைபெற இருப்பதால் விக்ரம் படத்தின் பாடல்கள் & படம் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kollywood top celebrities to attend Vikram audio launch function

ஜீன் 10ல் தியேட்டர்களில் ரிலீசாகும் சிலம்பரசனின் அடுத்த படம்

ஜீன் 10ல் தியேட்டர்களில் ரிலீசாகும் சிலம்பரசனின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஹன்சிகா நடிப்பில் 50வது படமாக உருவான திரைப்படம் ‘மஹா’. இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்க யு.ஆர்.ஜலீல் என்கிற உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கினார்.

இதில் சிம்பு முதலில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டார். பின்னர் அவருக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டது.

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

நீண்ட ஆண்டுகளாக இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது ஒருவழியாக வருகிற ஜீன் மாதம் 10ஆம் தேதி தியேட்டர்களில் மஹா திரைப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த முறையாவது தள்ளிப் போகாமல் ரிலீஸ் ஆனால் சந்தோஷமே.

கூடுதல் தகவல்…

கடந்தாண்டு 2021ல் இந்த படம் தொடர்பாக இயக்குனர் யு.ஆர்.ஜலீல் சார்பில் வழக்கு போடப்பட்டது.

தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகக்கூறி, படத்தை வெளியிட தடைகோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரின் மனுவில், “ நான் இயக்கிய மஹா திரைப்படத்தின் கதைப்படி விமான பணிப்பெண்ணாக இருக்கும் நாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார்.

இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. அதை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை. இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமல் எனது உதவி இயக்குனரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக படத்தயாரிப்பு கூறியது. ஆனால் தற்போது வரை 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளது.

ஆகையால் மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் என் கதைக்கருவை வேறு சிலரை வைத்து படத்தை முடித்ததற்காக எனக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.என மனுவில் கோரியிருந்தார். அந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mahaa

Silambarasan’s next film to be released in theaters in June 10

இளையராஜா பிறந்தநாளில் மக்கள் முன்னிலையில் இசை விருந்து

இளையராஜா பிறந்தநாளில் மக்கள் முன்னிலையில் இசை விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா இசைக்கு மயங்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இந்திய மக்களை தன் இசையால் தாலாட்டி வருபவர்.

தற்போது பல இளம் இசையமைப்பாளர்கள் உருவாகி வந்தாலும் இன்றும் எல்லோர் இல்லங்களிலும் இரவில் ஒலிக்கும் இசை இளையராஜாவின் இசையாகத்தான் இருக்கும்.

எனவே இளையராஜாவும் தன் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சிகளை அவ்வப்போது பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்.

அண்மையில் துபாய் நாட்டில் தன் இசை கச்சேரியை நடத்தினார். அதன்பின்னர் அங்குள்ள ஏஆர். ரஹ்மான் ஸ்டூடியோவுக்கும் சென்று வந்தார்.

இதன்பின்னர் தமிழக சுற்றலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார் இசைஞானி.

இந்த நிலையில் அடுத்ததாக கோவை மாநகரில் தன் இசை விருந்தை தன் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதியில் வழங்கவுள்ளார்.

கோவையில் உள்ள கொடீசியா வளாகத்தில் இந்த இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Music concert in the presence of the people on Ilayaraja’s birthday

மக்கள் நலனுக்காக ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்

மக்கள் நலனுக்காக ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தற்போது பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை வளர்த்து மக்களின் மனம் கவர்ந்த நடிகரானார்.

மேலும் பேரிடர் காலங்களில் மக்கள் பிரச்சினைக்காக நன்கொடைகளை வழங்கி வருகிறார்.

இத்துடன் தன் சொந்த செலவில் சில ஏழை மாணவ மாணவிகளை படிக்க வைத்தும் வருகிறார்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடந்த விழாவில் இந்த ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இது சுமார் 20 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan provided the ambulance for the benefit of the Sivaganga people

‘குற்றப்பரம்பரை’-யில் சசிகுமாருடன் இணையும் விஜயகாந்த் மகன்

‘குற்றப்பரம்பரை’-யில் சசிகுமாருடன் இணையும் விஜயகாந்த் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விளையாட்டு போட்டிகளில் கேப்டன் என்ற வார்த்தை கேட்டு பார்த்திருப்போம். ஆனால் தமிழ் சினிமாவில் கேப்டனாக வாழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த்.

பின்னர் தன் கவனத்தை அரசியல் பக்கம் திருப்பியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 2015ம் ஆண்டில் சகாப்தம் படத்தில் நடித்தார். இதில் விஜயகாந்தும் நடித்திருத்தார்.

இதன்பிறகு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார் சண்முக பாண்டியன். தற்போது ஓரிரு படங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சண்முக பாண்டியனுக்கு சொல்லிக் கொள்கிற அளவுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் சண்முக பாண்டியன்.

இதை சசிகுமார் இயக்க ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்கிறார்.

இந்த தொடர் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற நாவலைத் தழுவி உருவாகவுள்து.

சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றப்பரம்பரை பட கதையை பாரதிராஜா இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது வெறும் பேச்சுடன் நிறைவானது.

ஏற்கனவே சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கியவர் சசிகுமார். அதன்பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்க முடிவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijaykanth’s son joins Sasikumar in ‘Kuttrapparamparai’

மீண்டும் கமலுடன் இணைந்த சூர்யா.; ‘மாஸ்டர்’ டைரக்டரின் ‘மாஸ்டர்’ ப்ளான்

மீண்டும் கமலுடன் இணைந்த சூர்யா.; ‘மாஸ்டர்’ டைரக்டரின் ‘மாஸ்டர்’ ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் 232வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’.

இந்த படத்தை கமல்ஹாசனே தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பகத்பாசில், காளிதாஸ், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

நேற்று மே 11ல் இந்த படத்தில் இடம் பெற்ற ‘பத்தல… பத்தல…’ என்ற சிங்கிள் ட்ராக் பாடல் வெளியானது. இந்தப் பாடலை கமலே எழுதி பாடியுள்ளார்.

வருகிற மே 15ம் தேதி இப்படத்தின் இசை விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இதில் கெஸ்ட் ரோலில் நடிகர் சூர்யா நடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் கே.எஸ். ரவிக்குமார் இயக்கி கமல் நடித்த ‘மன்மதன் அம்பு’ என்ற படத்திலும் சூர்யா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Surya reunites with Kamal; ‘Master’ Plan of the ‘Master’ Director

More Articles
Follows