EXCLUSIVE பத்தல பாட்டு வைத்த வேட்டு..; ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல.; கமலை எச்சரிக்கும் RTI ஆர்வலர்

EXCLUSIVE பத்தல பாட்டு வைத்த வேட்டு..; ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல.; கமலை எச்சரிக்கும் RTI ஆர்வலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், ஷிவானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

வருகிற மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது. ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மே 11 மாலை 7 மணிக்கு (சொன்ன நேரத்தில் ரிலீசாகல) ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடல் வரிகள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கமலஹாசன் நடித்து விரைவில் வெளியாக உள்ள ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் வரும் “பத்தலே பத்தலே” என்ற பாடலில் மத்திய அரசை தி௫டன் என்று கூறும் வகையில் அமைந்துள்ள “கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே…
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே”
மற்றும்
ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் அமைந்துள்ள
“குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு… ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே” என்ற பாடல் வாிகளை நீக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இணையதளம் மூலமாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 3ம் தேதி வெளிவரக்கூடிய விக்ரம் படத்திற்கு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கபட்டுள்ளது .

இதையும் பாருங்க | லோகேஷ் கனகராஜின் 36 வருட தவம்.; வரம் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

RTI activists warn Kamal Haasan for his Pathala Pathala song

பழி வாங்கும் அதிசய கார் உடன் இணையும் அமீர் – கோபிகா ஜோடி

பழி வாங்கும் அதிசய கார் உடன் இணையும் அமீர் – கோபிகா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’.

எவரிஒன் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிகா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தை இயக்குனர் ஜிஜேஷ் MV இயக்கி இருக்கிறார்.

கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலை சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன் தன்னிடம் அரிதான சக்திகளுடன் வந்து சேரும் ஒரு காரை வைத்துக் கொண்டு அந்த பெரிய தாதா கும்பலை பழிவாங்க புறப்படுகிறான் என்பதே படத்தின் மூலக்கதை.

முற்றிலும் புதிய கோணத்தில் பழி வாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓட விட்டு சுடலாமா’ என்று கூறுகிறார் இயக்குனர் ஜிஜேஷ் MV

கம்பம், குமுளி மற்றும் கேரளா பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரகாஷ் வேலாயுதன், படத்தொகுப்பாளர் ரதீஷ் மோகன், இசை அஷ்வின் சிவதாஸ், ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள்.

நகைச்சுவை கலந்து உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாக இருக்கிறது.

Aamir and Gopika pair up for revenge drama

உலகெங்கும் ‘டான்’ படத்தை சரியான டைமிங்கில் டான்னு ரிலீஸ் செய்ய ஐபிக்ஸ் ப்ளான்

உலகெங்கும் ‘டான்’ படத்தை சரியான டைமிங்கில் டான்னு ரிலீஸ் செய்ய ஐபிக்ஸ் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியப் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் எல்எல்சி யுஎஸ்ஏ, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் வெளியீட்டு உரிமையை இந்தியாவைத் தவிர உலகம் முழுவதற்கும் பெற்றுள்ளது.

அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், மே 13-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது.

குறித்த நேரத்தில் திரைப்படம் உலகெங்கும் வெளியாவதை உறுதி செய்யும் நோக்கில், பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளுக்கு கேடிஎம் குறியீட்டை ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் ஏற்கனவே அனுப்பி விட்டது.

அங்கெல்லாம் படம் சென்சார் உள்ளிட்ட நடைமுறைகளை நிறைவு செய்து வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. மே 12 அன்று இரவு சில பகுதிகளில் சிறப்பு காட்சிகள் இருக்கும் என்றும் ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.

பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) மற்றும் டிஎம்ஒய் (மலேசியா) ஆகியவற்றுடன் டான் வெளியீட்டுக்காக ஐபிக்ஸ் இணைந்துள்ளது.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான டானின் சர்வதேச விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கியதற்காக லைகா புரொடக்ஷன்ஸின் சுபாஸ்கரன், ஜிகேஎம் தமிழ் குமரன் ஆகியோருக்கு ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நன்றி தெரிவித்துள்ளது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கே எம் பாஸ்கரன் மற்றும் நாகூரன் கையாண்டுள்ளனர்.

Ipix Entertainment successfully issues KDM of Sivakarthikeyan-starrer Don all over the world film all set for release as planned

இதையும் பாருங்க | நீ படிச்ச காலேஜ்ல நான் பிரின்சிபால்.; சிவகார்த்திகேயன் Vs எஸ்.ஜே. சூர்யா

சிம்பு & கௌதம் இணையும் ’பத்து தல’ பட சூட்டிங் அப்டேட்

சிம்பு & கௌதம் இணையும் ’பத்து தல’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தை அடுத்து சிம்பு நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.

இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு முன்பே சிம்பு ஒப்புக் கொண்ட படம் ‘பத்து தல’.

இது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

’பத்து தல’ படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதில் சிம்பு டான் கேரக்டரிலும், கௌதம் போலீஸ் கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

’சில்லுனு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் கலையரசன், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சிம்பு கௌதம் இணைந்து நடிக்கும் காட்சிகளை மே 27ஆம் தேதி முதல் படமாக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

இதனையடுத்து கிட்டத்தட்ட 3 வாரங்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

STR’s Pathu Thala shooting update here

யஷின் ‘கேஜிஎஃப் 3’ படத்தில் இணையும் ‘பாகுபலி’ பட பிரபலம்

யஷின் ‘கேஜிஎஃப் 3’ படத்தில் இணையும் ‘பாகுபலி’ பட பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் வேற லெவலில் சூப்பர் ஹிட்டாகின.

முதல் பாகத்தின் வெற்றியால் 2ஆம் பாகத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவானது. எனவே கேஜிஎஃப் இரண்டாம் பாகம் 1,200 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.

படத்தின் க்ளைமாக்ஸில் 3ஆம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது.

எனவே கேஜிஎஃப் சாப்டர் 3 படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தை இயக்கி வருகிறார் கேஜிஎஃப் டைரக்டர் பிரசாந்த் நீல்.

இவர் அந்த படத்தை முடித்துவிட்டு கேஜிஎப்-3 பட பணிகளை தொடங்குவார் என தெரிகிறது.

இந்த நிலையில் தற்போதே கேஜிஎஃப் 3 படத்தின் வில்லன் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி 1, 2 படங்களில் வில்லனாக நடித்த ராணா இதில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

rana

Baahubali actor joins KGF 3?

தாத்தா தந்த தலைப்பு ‘நெஞ்சுக்கு நீதி’-யை அப்பாவிடம் கேட்டபோது….; உண்மையை உடைத்த உதயநிதி

தாத்தா தந்த தலைப்பு ‘நெஞ்சுக்கு நீதி’-யை அப்பாவிடம் கேட்டபோது….; உண்மையை உடைத்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயலர் வெளியீட்டு விழா மே 9ல் திரைபிரபலங்கள்,படக்குழுவினர் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்…

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் கூறியதாவது…

நெஞ்சுக்கு நீதி அனைவரும் பார்க்க வேண்டிய படம், இந்த படத்தில் வேலை பார்த்தது பெருமை. படத்தில் நான்கு பாடல்கள். யுகபாரதி ஆழமான வரிகளை கொடுத்துள்ளார், அதற்கு நன்றி.

இது எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படத்தில் பல விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம். என்னுடைய பாடல்களுக்கு நீங்கள் எப்போதும் வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த, அருண்ராஜாவிற்கு நன்றி.

தயாரிப்பாளர் போனிகபூர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உதயநிதி சார் அவர்களுக்கு நன்றி. ஆயிரம் பொறுப்புகள் இருந்தாலும் உதயநிதி கூலாக இருக்கிறார். படத்தின் பேக்ரவுண்ட் பணிகள் போய்கொண்டிருக்கிறது. படம் நன்றாக வந்துள்ளது. படத்தில் தொழில்நுட்ப குழு சிறப்பாக வேலை பார்த்துள்ளனர்.

எல்லோருக்கும் நன்றி. இது என்னுடைய 5 வது படம், எனக்கு மகிழ்ச்சி. எனது நண்பர் சிவாவிற்கு நன்றி. பாடல் பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள். நன்றி.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் B கூறியதாவது…

இந்த படத்தில் உதயநிதி சார் காவல்துறை அதிகாரியாக வந்திருக்கிறார், அது பார்ப்பதற்கு கம்பீரமாக உள்ளது. எல்லோருக்கும் நன்றி, எல்லோரும் ஆதரவு தர வேண்டும். “

கலை இயக்குனர் வினோத் ராஜ்குமார் கூறியதாவது…

இந்த படம் சமூகநீதி பற்றி பேசும் படம், இந்த படத்தில் வேலை பார்த்தது பெரிய அனுபவம். இந்த படத்தில் பாடல்கள் அருமையாக வந்துள்ளது.

இந்த படக்குழு அருமையான குழு. படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.

நடன இயக்குனர் லீலாவதி கூறியதாவது…

இது எனது முதல் படம். ராகுல் சாருக்கும், அருண் சாருக்கும் நன்றி. புது நடன இயக்குனருக்கு வாய்ப்பளிப்பது பெரிய விஷயம். அவர் வேலை பார்க்கும் போது முழு சுதந்திரம் கொடுப்பார். உதயநிதி அவர்களுக்கு நன்றி. அவருடன் பல படம் அசிஸ்டண்டாக வேலை பார்த்திருக்கிறேன்.

காவல் உடையில் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தார், அவர் அருகில் போவதற்கே ஒரு தயக்கம் இருந்தது. படத்தில் ஒரு கூத்து கலை வருகிறது. தமிழகத்தின் கூத்து கலைஞர்களை படத்தில் பயன்படுத்தியுள்ளோம். அவர்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். படம் ஒரு கூட்டு முயற்சி. படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

வசனகர்த்தா தமிழரசன் கூறியதாவது…

இது எனது முதல் மேடை. இயக்குனருக்கு நன்றி. நான் சினிமா கனவை விடலாம் என்று இருந்த போது, எனக்கு மீண்டும் வாய்ப்பளித்தது அருண் சார் தான். சென்னையில் எனக்கு அடையாளம் அவர் தான். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். படக்குழு அனைவருக்கும் நன்றி. உதயநிதி சாருக்கு நன்றி. படத்தை நீங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள், ஆதரவு தாருங்கள், நன்றி”

சண்டை இயக்குனர் ஸ்டன்னர் சாம் கூறியதாவது…

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த, இயக்குனர், தயாரிப்பாளர், உதயநிதி சாருக்கு, மற்றும் படக்குழுக்கு நன்றி. இந்த படத்தில் அனைவரும் சமம் என்று மிகப்பெரிய விசயத்தை பேசியுள்ளோம். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.”

பாடலாசிரியர் யுகபாரதி கூறியதாவது,

இந்த படம் முழுக்க முழுக்க உதயநிதி நடித்த முதல் முழு அரசியல் திரைப்படம். ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக். அது அனைவரும் சமம் என்ற சட்ட பிரிவு, இது அம்பேத்கர் எழுதிய சட்டம்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பல பாடல்களை எழுதியுள்ளார், என்னை அவர் கூப்பிட்டது எனக்கு ஆச்சர்யம். ஹிந்தி படத்தில் இருக்கும் அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு, அதற்காக பல மாற்றங்களை செய்துள்ளனர், அதற்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டும். படத்தில் நாட்டுபுற பாடல் ஒன்று வருகிறது. அதற்காக பெரும் உழைப்பை போட்டுள்ளனர், படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்.

நடிகை ஷிவானி ராஜசேகர் கூறியதாவது….

எல்லோருக்கும் வணக்கம். ஆர்ட்டிகள் 15 ரீமேக் பண்ண போகிறார்கள் என்றவுடன், நானே விருப்பபட்டு கேட்டு வாய்ப்பு வாங்கினேன். தயாரிப்பாளர் ராகுலுக்கு நன்றி. உதயநிதி சார் எல்லோரையும் மரியாதையுடன் நடத்துவார். மொத்த குழுவுக்கும் நன்றி. நான் மிஸ் இந்தியா போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிடுகிறேன், உங்களது ஆதரவை தாருங்கள்”

இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதாவது…

இந்த படம் முடிந்து, எனது படத்திற்கு வரும்போதெல்லாம் உற்சாகமாக இருப்பார் உதயநிதி. ஆர்டிகள் 15 ரீமேக் பண்ண போகிறேன் என உதய் சார் சொன்ன போது, அது சரியான தேர்வு என்று நான் நினைத்தேன். அது ஆழமான அரசியல் பேசக்கூடிய படம்.

உதய் சார் பணிவான நபர், தன்னை அடுத்தவர் இடத்தில் வைத்து பார்ப்பவர். மிக இயல்பாக இந்த கதாபத்திரத்தில் இவர் பொருந்துவார். அருண் இயக்கபோகிறார் என்றவுடன் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. வசனங்கள் ஆழமாக இருந்தது.

நடுநிலை என்பது உண்மையின் பக்கம் நிற்பது, வசனகர்த்தா தமிழரசனுக்கு தலை வணங்குகிறேன். யுகபாரதி, இசையமைப்பாளார், ஒளிப்பதிவாளர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். “

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது…

இந்த படம் சரியான தேர்வு, இயக்குனருடைய முதல் படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவர் இந்த ரீமேக்கை ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்துள்ளார். படத்தின் பாடல்கள் சிறப்பாக உள்ளது. படக்குழு மொத்த பேருக்கும் வாழ்த்துக்கள். உதயநிதி படங்கள் எதார்த்தமான ஒன்றாக இருக்கும். இந்த படத்தில் காவலாளி ரோல் சிறப்பாக செய்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்”

நடிகர் RJ பாலாஜி கூறியதாவது

“ நானும், உதயநிதியும் போனிகபூருக்கு படம் செய்துள்ளோம். எனக்கு உதயநிதியை 12 வருஷமாக தெரியும். அவருடன் பழகுவதற்கு எப்போதும் பயமாக இருந்ததில்லை. அவரை மிக எளிமையாக அணுகலாம். அவர் நிறைய உதவிகளை செய்பவர் மிக நல்ல மனிதர்.

அருண்ராஜா பெரிய இழப்பிற்கு பிறகு இப்படி ஒரு படம் எடுத்தது பெரிய விஷயம். சமூகத்திற்கு இந்த அரசியல் படம் மிக அவசியமான ஒன்று. இந்தியாவில் இன்னும் ஜாதி இருக்கிறது இந்த நிலையில், இப்படி ஒரு படம் அவசியமான ஒன்று, இப்படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள். படத்தை நீங்கள் தியேட்டரில் பார்த்து ஆதரவு தர வேண்டும்.

தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாவது…

நான் ஆர்டிகள் 15 படத்தை அதிகமுறை பார்த்துள்ளேன். அருண்ராஜா இந்த படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்துள்ளார். தமிழகத்தின் வாழ்வியல் நுணுக்கங்களை அவர் படத்தில் பதிவு செய்துள்ளார். ராகுலுக்கு நன்றி கூற வேண்டும். மொத்த குழுவிற்கும் பெரிய நன்றி

நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது……

“உதயநிதி சார் பல வேலைகளை பார்க்கிறார், அது அவரது குடும்ப இரத்ததிலேயே இருக்கிறது. உண்மையான டான் உதயநிதி சார் தான்.

இத்தனை வருட பழக்கத்தில் அவர் எனக்கு பாசிடிவிட்டியை மட்டுமே தந்துள்ளார். நெஞ்சுக்கு நீதி பவர்வுல் டைட்டில். எனக்கு ரீமேக் எடுக்க பயம், ஆனால் அருண்ராஜா இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். அருண்ராஜா எனது நண்பன் என்பது பெருமை. கனா போன்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கொடுத்துள்ளார்.

அருண் பெரிய இழப்பில் இருந்த போது அவனுக்கு உறுதுணையாக இருந்தது உதயநிதி சார் தான். இந்த நெஞ்சுக்கு நீதி பெரிய வெற்றியடையும். யுகபாரதி, வசனகர்த்தா தமிழ், ஒளிப்பதிவாளர் தினேஷ், இசையமைப்பாளர் திபு மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போனி கபூர் சாருக்கு நன்றி.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது….

படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி. படம் பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…

முதல் நன்றி தாத்தா கலைஞருக்கு.  அவர் தந்தது தான் இந்த டைட்டில். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம்.

போனிகபூர் என்னை அழைத்து ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது., இப்படத்திற்கு யாரை இயக்குனராக வைத்து பண்ணலாம் என சந்தேகம் இருந்தது. யாரும் முன்வரவில்லை.

கனா படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்ட போது, அருண் ஒத்துகொண்டார். நான் நெஞ்சுக்கு நீதி டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, பார்த்து பண்ணுங்க.. அவப்பெயர் வந்துவிடக் கூடாது” என கூறினார். படம் எடுக்கும் போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது.

அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சமர்பணம். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். நடன இயக்குனர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் தினேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் ஒத்துகொண்ட போது பயமாக இருந்தது, எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது. நான் போலீஸாக திரையில் சிறப்பாக வந்ததற்கு பெரிய காரணம் தினேஷ். ஷிவானி ராஜசேகர், குறிஞ்சி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.

பாடல்வரிகள் பவர்புல்லாக இருக்கும். இந்த படத்திற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெரிய பலம். எல்லோருக்கும் நன்றி. படம் சமூகநீதி பேசும் படம், இந்த சமயத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கு. நன்றி.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். B செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் ரூபன், கலை இயக்கம் வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம் ஸ்டண்ட், C H பாலு ஸ்டில்ஸ், பாடல்கள் யுகபாரதி, அருண்ராஜா காமராஜ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி நடன இயக்குனர் , அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தயாரிப்பு நிர்வாகி S.P. சொக்கலிங்கம், காஸ்ட்யூமர் K.செல்வம், ஹேர் மற்றும் மேக்கப் சக்திவேல், விளம்பர வடிவமைப்புகள் கோபி பிரசன்னா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இதையும் பாருங்க  |   Nenjuku Needhi Official Trailer

Nenjukku Needhi audio launch highlights

More Articles
Follows