தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரள மாநிலத்தில் திருச்சூர் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பூரம் திருவிழா. மேலும் திருச்சூரில் விஷ்ணு மாயா என்ற கோயில் பிரபலமானது. இந்த கோயிலில் வருடாவருடம் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து கோயில் நிர்வாகம் சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம் நடிகை குஷ்புவை கோயில் நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது.
விஷ்ணுமாயா கோயிலின் சிறப்பு பூஜைக்காக சென்றுள்ளார். அவரை கோயில் நிர்வாகம் அழைத்து சிறப்பு செய்துள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
’திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் நடைபெற்ற நாரிபூஜை செய்ய நான் அழைக்கப்பட்டதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கு அழைப்பார்கள்.
தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக மக்கள் நம்புகிறார்கள். இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.
தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புபவர்களுக்கும் இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்’ என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் குஷ்பூ.
Divine blessing from the God at Naari Pooja Khushboo emotion
Divine blessing from the God!
Feel so lucky to have been invited by #VishnumayaTemple in Thrissur to do #NaariPooja .
Only chosen ones are invited. They believe the Goddess herself chooses the person. My humble gratitude to everyone at the temple for blessing me with such an honor.
I am sure this will bring many more good things to all those who pray everyday and believe there is a super power to protect us.. Prayed for my loved ones and the world to be a better, happier & a peaceful place.
#OmShivayaNamaha
#naarishakti