‘கேஜிஎஃப்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்

‘கேஜிஎஃப்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectவிஜய் கிரகண்டுர் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட
‘கேஜிஎஃப்’ திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது.

1970ல் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, ஒரு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் சமூக சீர்கேடுகளையும், ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து முன்னேறும் காலப் பெட்டகத்தின் புரட்சிக்கரமான கதைகளத்தை கொண்ட இப்படம் மும்மொழி திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது.

இப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது.

இம்மகிழ்ச்சியான தருணத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்து கொள்கிறது.
இத்திரைப்பட குழு.

தினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “ நானும் சிங்கிள் தான் “

தினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “ நானும் சிங்கிள் தான் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “

இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்

இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

பாடல்கள் – கபிலன் வைரமுத்து

ஸ்டன்ட் – கனல் கண்ணன்

கலை – ஆண்டனி ஜோசப்

எடிட்டிங் – ஆதித்யன்

நடனம் – அபீப் உஷேன்

இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா

தாயாரிப்பு – THREE IS A COMPANY

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி. இவர் இயக்கும் முதல் படம் இது.

இது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் லண்டன், யூரோப் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

தனுஷுடன் நடித்த ராசி.; தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்

தனுஷுடன் நடித்த ராசி.; தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Here is the Reason behind How Keerthy Suresh got National Award இன்று அறிவிக்கப்பட்ட 66வது தேசிய விருதுகள் பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் என்பதும் இப்படத்தை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியிட்டதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

இப்படத்தில் கீர்த்தி எப்படி வாய்ப்பு பெற்றார்? என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

அவர் தனுஷ் உடன் இணைந்து நடித்த தொடரி படத்தை பார்த்த இயக்குனர் நாக் அஸ்வின் அவர்கள், கீர்த்தியின் அப்பாவித்தனமாக நடிப்பை கண்டு வியந்துதான் அந்த வாய்ப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் தன் இளம் வயதிலேயே தனுஷ்ம் ஆடுகளம் படத்தில் நடித்தற்காக தேசிய விருதை பெற்றார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Here is the Reason behind How Keerthy Suresh got National Award

66வது நேஷ்னல் அவார்ட்ஸ்: ‘மகாநடி’ கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது

66வது நேஷ்னல் அவார்ட்ஸ்: ‘மகாநடி’ கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National Film Awards 2019 Best actress Keerthi suresh for Mahanati இந்திய சினிமாவிற்கான 66வது தேசிய விருதுகள் இன்று ஆகஸ்ட் 9ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுகளை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

இந்த அறிவிப்பினை விருது கமிட்டி நடுவர்க்குழு தலைவர் ராகுல் ரவெய்ல் அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது…

இந்தாண்டில் மட்டும் 419 படங்கள் போட்டியிட்டன. இவற்றில் 31 பிரிவுகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டில் முதன்முறையாக, படப்பிடிப்பிற்கு ஏற்ற மாநிலம் என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த விருதினை, உத்தர்காண்ட் மாநிலம் வென்றுள்ளது. (சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் அவார்ட்)

மற்ற விருதுகள் விவரம்..

சிறந்த தமிழ்ப்படம் – பாரம்
சிறந்த நடிகர் : அந்தாதுண் படத்திற்காக ஆயுஷ்மான் குரானா, உரி படத்திற்காக விக்கி கவுசல்
சிறந்த நடிகை – நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி சுரேஷ்
சிறந்த ஆக்ஷன் திரைப்படம் : கேஜிஎஃப் சாப்டர் 1
சிறந்த நடனம் – பத்மாவத் படத்திற்காக கொமார்
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – கேஜிஎஃப்

சிறந்த சமூக படத்திற்கான விருது அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் வென்றது.

சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடை வடிமைப்பாளர் விருதும் இந்த படத்திற்கே வழங்க்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகை விருது ‘பதாய் ஹோ’ இந்தி படத்தில் நடித்த சுரேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த கோரியோகிராபர் விருது பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த பாடகருக்கான விருதை பத்மாவத் படத்தின் மிஸிரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்கிற்கு வழங்கப்பட்டது.

National Film Awards 2019 Best actress Keerthi suresh for Mahanati

‘கொலையுதிர் காலம்’ ரிலீஸ் இல்லை; பொறுப்பில்லாத நயன்தாரா டீம்

‘கொலையுதிர் காலம்’ ரிலீஸ் இல்லை; பொறுப்பில்லாத நயன்தாரா டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara fans disappointment in Kolaiyuthir Kaalam release issueகமல், மோகன்லால் இணைந்து நடித்த உன்னைப் போல் ஒருவன் பட இயக்குனர் சக்ரி டூலோட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொலையுதிர் காலம்.

இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் எப்போதோ உருவாகி எப்போதோ வந்திருக்க வேண்டும்.

ஆனால் பல பிரச்சினை மற்றும் தடைகளால் உருவாகியும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக் கொண்டே போனது.

இறுதியாக இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றும் வெளியாகவில்லை. தமிழகத்தில் காலை, மதியம், மாலை காட்சிகள் எதுவும் திரையிடப்படவில்லை.

ஆனால் பல தியேட்டர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் இருந்தன.

இதனால் ரசிகர்கள் பலர் தியேட்டருக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். (இந்த செய்தி வெளியாகும்வரை எங்கும் படம் வெளியாகவில்லை)

படம் வெளியாகவில்லை என்றால் படக்குழுவினர் ஒரு அறிக்கை வெளியிட வேண்டாமா?

தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அறிக்கை வெளியிடும் நயன்தாரா படம் ரிலீஸ் ஆகவில்லை என்ற தகவலை சொல்லியிருந்தால் நாங்கள் இப்படி ஏமாற்றத்துடன் திரும்பி இருக்க மாட்டோம் என ரசிகர்கள் நொந்தப்படி கூறி சென்றனர்.

தன் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களை சம்பந்தபட்டவர்கள் இப்படி ஏமாற்றுவது நியாயம்தானா..?

Nayanthara fans disappointment in Kolaiyuthir Kaalam release issue

யோகிபாபுவின் அடுத்த கலக்கல் காமெடியில் உருவாகும் “காதல் மோதல் 50/50”

யோகிபாபுவின் அடுத்த கலக்கல் காமெடியில் உருவாகும் “காதல் மோதல் 50/50”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போதுஉருவாகிக் கொண்டு இருக்கும் “காதல் மோதல் 50/50” எனும் ஆக்சன் கலந்த பேய் படத்தில் நடித்து வருகிறார்.

யோகிபாபுவின் தர்மபிரபு மற்றும் கூர்க்காவின் வெற்றியை தொடர்ந்து வெளிவரவிற்கும் படம்தான் “காதல் மோதல் 50 /50”. இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம் “த்ரயா” என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.

தற்போது மு.மாறன் அவர்களின் இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின் அவர்களை நாயகனாக வைத்து தயார் ஆகி கொண்டிருக்கும் “கண்ணைநம்பாதே ” என்ற படத்தின் தயாரிப்பாளர் திரு.வி.என்.ஆர் அவர்கள் இப்படத்தினை தன் நிறுவனம் லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் நிலையில் உள்ளது .

More Articles
Follows