பாண்டிராஜ்-கார்த்தி இணையும் கடைக்குட்டி சிங்கம்; சூர்யா தயாரிக்கிறார்

Karthi starrer Kadaikutty Singam first look launched by Suriyaபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இப்படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா வெளியிட்டார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்கு தெலுங்கில் சின்ன பாபு என பெயரிட்டுள்ளனர்.

இதில் கார்த்திக்குடன் சாயிஷா, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது.

இந்த பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற வாசகம் சமூகவலைத்தளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Karthi starrer Kadaikutty Singam first look launched by Suriya

Overall Rating : Not available

Related News

புதிய தலைமுறை டிவியில் செய்தி தொகுப்பாளராக…
...Read More
சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில்…
...Read More
நடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர்.…
...Read More
அட.. இந்த காலத்துல பேமிலி செண்டிமென்ட்…
...Read More

Latest Post