மனைவி கர்ப்பம்.. ஒரே மாதிரியான கேரக்டர் போர் – இந்துஜா

மனைவி கர்ப்பம்.. ஒரே மாதிரியான கேரக்டர் போர் – இந்துஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்டையில் நடந்தது.

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ்…

“நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவருக்கு நன்றி.

நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க ஊக்குவித்தார்கள். அதன் பிறகு என்னை நம்பி யாருமே பணம் தரவில்லை. கேஜேஆர் சாரிடம் போய் படம் செய்யலாம் என்று சொன்னதும் அவர் உடனே சரி என்றார்.

அந்தப் படம்தான் ‘டிக்கிலோனா’. ஞானவேல் சாருக்கும் நன்றி. சந்தீப் கிஷன், அஞ்சலிக்கும் நன்றி. என் நண்பர்கள், குடும்பம், மனைவிக்கும் நன்றி. ‘டிக்கிலோனா’ முடித்தப் பிறகு எனது அசிஸ்டெண்ட் ராம் வைத்து படம் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஹரிஷ் இந்தப் படத்திற்குள் வந்த பிறகுதான் இது பெரிய படமாக மாறியது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

“இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள்.

‘மாநகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர்…

“இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்ட இயக்குநர் ராம், சுதன் சார், ஸ்ரீனிஸ் அனைவருக்கும் நன்றி.

இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்சினைகள்தான் படம். அதை ரசிக்கும் விதமாக சொல்லியிருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டுகிறேன். படத்தின் நாயகன் ஹரிஷ், இந்துஜா, பிரார்த்தனா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்”.

இயக்குநர் அருண்ராஜ் காமராஜ்…

“படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதையும் தாண்டி நண்பர்கள் ரீ யூனியன் போல இது உள்ளது. புது திறமைகளை கொண்டு வரும் ஸ்ரீனிஸூக்கு நன்றி. இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். இரண்டு பேருக்கும் இடையிலான ஈகோ கிளாஷ்தான் படம். எம்.எஸ். பாஸ்கர் சார் படத்தில் ஈவிலாக இருப்பார். ஹரிஷ் கல்யாண் வயலண்ட்டாக நடித்துள்ளார். எல்லோருக்கும் முன்பு இந்தப் படம் பார்த்ததில் மகிழ்ச்சி. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். வாழ்த்துகள்”.

இயக்குநர் ரத்னகுமார்…

“தயாரிப்பாளரின் ஸ்ரீனிஸின் பிறந்தநாள் இன்று கிடையாது. டிசம்பர் 1தான். இயக்குநர் ராமும் நன்றாக செய்துள்ளார். இந்த படத்தின் டீமோடு எனக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஹரிஷ், பிரார்த்தனா, இந்துஜா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழியிலும் இந்தப் படம் ரீமேக் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. படம் வெளியான பின்பே உங்களுக்கேத் தெரியும்”.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “பக்கத்துவீட்டுக்காரர்களுக்குள் நடக்கும் சண்டைதான் இந்தப் படம். ரொம்ப எளிமையான கதை என்பதை விட சாமானியர்களின் பிரச்சினையைப் பேசும் படம்.

‘குட்நைட்’ படத்தைப் போல எளிய கதையாக இருக்கும். ஹரிஷ், இந்துஜா என அனைவருமே சின்சியரான திறமையான நடிகர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்”.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்….

“இந்தப் பிரச்சினைக்களுக்காக எல்லாம் படம் எடுப்பீர்களா என நிறைய கமெண்ட்ஸ் இதன் டீசரில் பார்த்தேன். ஈகோதான் இங்கு பெரிய பிரச்சினை. படத்தில் வில்லன் பெரிதாக இருந்தால் படம் ஹிட்டாகும். அதுபோல, இந்தப் படத்தில் வில்லன் பெரிதாக இருக்கும்.

எளிய கதையை படம் முழுக்கக் கொண்டு போயிருக்கிறார்கள். இந்தப் படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநருக்கு முதல் படத்தை விட இரண்டாவது படம் முக்கியமானது. அதனால், இயக்குநர் ராம் இரண்டாவது படத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஹரிஷ், எம்.எஸ். பாஸ்கர் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். உங்களை படம் ஏமாற்றாது” என்றார்.

நடிகை இந்துஜா…

“இந்த அழகான படத்தைக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எல்லோருடைய கதாபாத்திரங்களும் படம் பார்க்கும் உங்களுக்கு நிச்சயம் கனெக்ட் ஆகும். கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ற போது ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்தது.

ஆனால், கதை கேட்டதும் இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். இதில் ஹரிஷ்- எம்.எஸ். பாஸ்கருடைய ஈகோ பிரச்சினை மட்டுமல்ல. பெண்களின் பார்வையிலும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். படம் வெளிவருவதற்கு முன்பே படம் குறித்தான பாசிடிவ் டாக் ஆரம்பித்து விட்டது.

ஹரிஷ் எப்போதும் பாசிட்டிவான நபர். இந்த நல்ல குணத்திற்காகவே அவர் பெரிய இடத்திற்குப் போக வேண்டும். அதற்கான ஆரம்பமாக ‘பார்க்கிங்’ அமைய வேண்டும். எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்ட். அவருடன் நடிப்பது எனக்குப் பெருமை. நிறைய விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். செட்டில் கதைகள் எல்லாம் சொன்னார். பிரார்த்தனா, ரமா அம்மா என எல்லோருமே இயல்பாக நடித்துள்ளனர்.

பிலோமின்ராஜ், சாம் சி.எஸ். என அனைவருமே சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். இந்த நேர்த்தியான படத்தைக் காண்பிக்க ராமின் எழுத்து உதவியது. இந்த லைனை வைத்து ஒரு முழுநீளப் படம் கொடுத்ததற்கு நன்றி ராம். அவருடைய தெளிவினால்தான் நாங்களும் நம்பிக்கையோடு நடித்தோம். நல்ல படம் நடித்த நிறைவு உள்ளது. நன்றி”.

இயக்குநர் ராம்,…

“எனது குடும்பத்திற்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீனிஸ் சாருக்கும் என் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. அவர் எனது அண்ணன் போல. முதலில் இந்தப் படத்தின் கதை கேட்டதும் சுதன் சாருக்குப் பிடித்திருந்தது.

இந்தப் படத்திற்காக என்னுடன் ஆரம்பத்தில் இருந்தே பயணித்த அனைவருக்கும் நன்றி. நம் எல்லோருக்கும் எதாவது ஒரு பேஷன் இருக்கும். அதை நோக்கிதான் பயணித்துக் கொண்டிருப்போம். அதையும் நம் குடும்பத்தையும் உடைக்கும்படி ஒரு பிரச்சினை வரும்போது நிச்சயம் நாம் கோபப்படுவோம். முதல் படத்தில் முடிந்தளவு பார்வையாளர்களுடன் இணைந்து இருக்கும்படியான கதை வேண்டும் என்பதால்தான் இதை எடுத்தேன்.

ஹீரோவாக இந்தக் கதையில் இருக்கும் முக்கியத்துவம் இன்னொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும். அதை அப்படியே ஒத்துக் கொண்ட ஹரிஷ் அண்ணாவுக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர் போன்ற லெஜெண்ட்ரி நடிகரோடு வேலைப் பார்த்தது பெருமை. நிறைய விஷயங்களை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்.

இந்துஜா, பிரார்த்தனா, ரமா என அனைவரும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர். பிலோமின், சாம் சி.எஸ். என இந்தப் படத்தில் அமைந்த தொழில்நுட்ப அணி எனக்கு மிகப்பெரிய பலம். குடும்பத்தோடு பாருங்கள். பார்க்கிங் என்ற விஷயத்தில் இருந்து ஈகோ எப்படி வெடிக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள்” என்றார்.

இந்துஜா

Same character role boring says Indhuja

3 ஹீரோயின்ஸ் உடன் நான்… கீர்த்தி கண்டுக்கல.; புது மாப்பிள்ளை அசோக் செல்வன்

3 ஹீரோயின்ஸ் உடன் நான்… கீர்த்தி கண்டுக்கல.; புது மாப்பிள்ளை அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சபா நாயகன்’. நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் பேசும்போது…

” சபாநாயகன் திரைப்படம் நம் பள்ளிகால மற்றும் கல்லூரி கால மலரும் நினைவுகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒருவித நாஸ்டால்ஜியா வகை திரைப்படம் ஆகும். நம் எல்லோருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஏதோவொரு பெண்ணின் மீது ஒருவித க்ரஸ் இருந்திருக்கும். இப்படி பள்ளி கால வாழ்க்கை, கல்லூரி கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை என்று வாழ்க்கையின் மூன்றுவித காலகட்டங்களைப் பற்றி இப்படத்தில் பேசி இருக்கிறோம்.

இப்படம் அனைத்து ரசிகர்களும் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும்படியான திரைப்படம். என் மீது நம்பிக்கை வைத்து முதல்படம் இயக்குவதற்கு வாய்ப்பளித்த ஐ சினிமாஸ் அய்யப்பன் ஞானவேல் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி” என்றார்.

படத்தின் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் பேசும் போது…

”ஓ மை கடவுளே திரைப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நானும் நண்பர் அசோக்செல்வனும் இந்த சபாநாயகன் திரைப்படத்தில் இணைந்து இருக்கிறோம்.

இத்திரைப்படம் நாம் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து திரையரங்கிற்கு ஒன்றாக சென்று குதூகலிப்பதற்கான திரைப்படம்., படம் மற்றும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் அனைவருக்கும் ரொம்பவே பிடிக்கும் என்று நம்புகிறோம்.

பாடல்களுக்கான காட்சி தொகுப்புகள் மிகவும் சிறப்பாக அழகான முறையில் எடுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற ஜாலியான திரைப்படத்திற்கு இசையமைத்தது ஒரு நல்ல அனுபவம். படம் பார்க்கும் அனைவருக்குமே ஒரு நாஸ்டால்ஜியா டிரிப் சென்று வந்த அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பாலசுப்ரமணியம் பேசும் போது…

”எல்லோருக்கும் வணக்கம். இப்படத்தின் தயாரிப்பாளர் என் நண்பர். அவர் தான் இயக்குநர் கார்த்திகேயனை எனக்கு அறிமுகப்படுத்தினார். கார்த்திகேயன் கதை சொல்லும் போது எனக்கு கதை மிகவும் பிடித்தது. இது போன்ற கதைகள் இப்பொழுதெல்லாம் வருவதில்லை என்று எனக்குத் தோன்றியது.

மூன்றுவித காலகட்டங்கள் படத்தில் இருக்கிறது. இதில் கல்லூரி கால வாழ்க்கையை முதலாவது ஷெட்யூலில் படப்பிடிப்பு செய்தோம். அதில் நான் ஒளிப்பதிவு செய்தேன். பிறகு என் சீடர் தினேஷ் இரண்டாம் ஷெட்யூல் அதாவது பள்ளிகால வாழ்க்கையை ஒளிப்பதிவு செய்தான்… பிரபு ராகவ் கல்லூரி காலத்திற்குப் பின்னர் வரும் வாழ்க்கைப் பகுதியை ஒளிப்பதிவு செய்தார். படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் ”என்று பேசினார்.

படத்தின் மற்றொரு ஒளிப்பதிவாளரான தினேஷ் புருஷோத்தமன் பேசும் போது…

”ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் என் குரு. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த என் குருநாதருக்கும், அதை ஏற்றுக் கொண்டு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன், நாயகன் அசோக் செல்வன் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி ”என்று பேசினார்.

மூன்றாவது ஒளிப்பதிவாளரான பிரபு ராகவ் பேசும் போது…

”எல்லோருக்கும் வணக்கம். வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. நாயகன் அசோக் செல்வன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு பத்திரிக்கை நண்பர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். ”என்று பேசினார்.

நக்சலைட் யூடியூப் புகழ் நடிகர் அருண் பேசும் போது…

”இந்த சபாநாயகன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. என் திரைப்பயணத்தில் இப்படி ஒரு முக்கியமான வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் அவர்களுக்கு என் முதல் நன்றி. என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்த இயக்குநரின் நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த சக யூடியூபர்ஸ் ஆன ஜெய்சீலன் ஸ்ரீராம் போன்றோருக்கு என் வாழ்த்துக்கள். அவர்களோடு இணைந்து நடித்தது மறக்க முடியாத மிகச்சிறந்த அனுபவம். அது போல் மைக்கேல் அண்ணன் உடன் நடித்ததும் மறக்கமுடியாத அனுபவம். அவருடனான காட்சிகள் இல்லை என்றாலும் கூட, எங்களுக்கு பின்னாலிருந்து பெரும் ஊக்கம் கொடுத்தார். பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவில் நடித்ததை கெளரவமாக கருதுகிறேன். அவருக்கும் மற்ற கேமராமேன்களுக்கும் என் நன்றி, பாடல்கள் மிகவும் சென்சேஷனாக உள்ளது. சிறப்பான பாடல்களை இப்படத்திற்கு கொடுத்த இசையமைப்பாளருக்கு நன்றி. அசோக் சாருக்கு நன்றி.

முதல் நாள் காட்சி சூட் செய்யும் போது எனக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. நான் அந்த குழப்பத்திலும் அசோக்செல்வன் சாருடன் இணைந்து நடிக்கிறோம் என்கின்ற பதட்டத்திலும் ஏதோ நடித்தேன். அதை புரிந்து கொண்டு அசோக்செல்வன் சார் என்னிடம் வந்து பேசினார். நீ என்ன யோசிக்கிறாய்.. உனக்கு என்ன பயம் என்று எனக்குத் தெரியும்… இது நம்ம படம்.. இப்படத்தின் வெற்றிக்கு நாம் உழைக்கிறோம். கேசுவலாக இரு.. கோயம்புத்தூரில் உன் நண்பர்களுடன் நடிக்கும் போது எப்படி இருப்பாயோ அப்படியே இரு.. நான் ஒரு ஹீரோ என்பதை எல்லாம் மறந்துவிடு என்று என் தயக்கங்களை போக்கினார். அவருக்கு மிக்க நன்றி அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனக்கு பின்நாளிலும் கண்டிப்பாக உதவும் என்று தோன்றுகிறது.. சபாநாயகன் திரைப்படத்தை அனைவரும் குடும்பத்தோடு பாருங்கள். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

சபா நாயகன்

நடிகை விவியா பேசும் போது…

“எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு மிக்க நன்றி. என்னுடைய தாய்மொழி மலையாளம் என்பதால் என்னுடைய தமிழ் சிறப்பாக இருக்காது. மன்னிக்கவும். இது என் முதல் தமிழ்ப்படம் எல்லோரும் படத்திற்கு ஆதரவு தந்து இதை ஒரு ப்ளாக் பஸ்டர் ஆக்க கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.” என்று பேசினார்.

எருமை சாணி யூடியூப் புகழ் நடிகர் ஜெய்சீலன் பேசும் போது…

“இது என் திரைபயணத்தில் ஒரு முக்கியமான இலக்கு என்று சொல்லுவேன். யூடியூப் சேனல் மூலமாக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயனை சென்று அடைந்து, இன்று அவர் இயக்கிய திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இந்த மேடை மீது நின்று கொண்டிருக்கிறேன். இயக்குநரின் பெயர் சி.எஸ்.கார்த்திகேயன். அதாவது சுருக்கமாக சி.எஸ்.கே. சி.எஸ்.கேவின் ரிசல்ட் நாம் அனைவருமே அறிவோம். இயக்குநரின் ரிசல்ட்டும் அது போன்ற வெற்றியாகத் தான் இருக்கப் போகிறது. சபாநாயகன் திரைப்படத்தின் டீம் பெரிய டீம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வசன உச்சரிப்புகளில் மிகவும் கவனமாக இருப்பார். நாங்களும் சிறப்பாக மனப்பாடம் செய்துவிட்டு ஸ்பாட்டில் ஏதோ உளறிக் கொண்டு இருப்போம். டங்க் ட்விஸ்டர் போல இருக்கும். ஜாலியாக வேலை வாங்கக் கூடிய நல்ல இயக்குநர். இரண்டாவது ஷெட்யூல் சூட்டிங் செய்யும் போது காலில் அடிபட்டுவிட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல் படப்பிடிப்புத் தளத்தில் படுத்துக் கொண்டே டைரக்ட் செய்தார். அருண் அண்ணா சொல்லியது போல் அசோக் செல்வன் சார் மிகச் சிறந்த ஐஸ் ப்ரேக்கர்.

நம்மிடம் இருக்கும் தயக்கங்களை அவரே புரிந்து கொண்டு அவைகளை உடைத்து எறிவார். அவர் அழும் காட்சியின் போது அவரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லி நடிக்க வேண்டும். அவரின் தலைமுடி கலைந்துவிடுமோ என்கின்ற தயக்கத்தில் பட்டும் படாமல் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லி நடித்தேன். அதை புரிந்து கொண்டவர், இந்த டேக் நன்றாக வர வேண்டும் என்றால், நீ உன் நண்பனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வது போல் இயல்பாக செய், முடி கலைந்தால் சரி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறி தைரியம் கொடுத்தார். சபா என்கின்ற வார்த்தையை திருப்பிப் போட்டால் பாசம் என்று வரும், அவர் ஒரு பாச நாயகன். அவருக்கு இப்படத்தில் எல்லாமே மூணு தான், அஸிஸ்டெண்ட் மூணு பேர், ஹீரோயின் மூன்று பேர், நண்பர்கள் மூன்று பேர், நித்தம் ஒரு வானம், போர் தொழில், அதைத் தொடர்ந்து மூன்றாவது வெற்றியாக இந்த சபா நாயகன் இருக்கும்.

படப்பிடிப்பு தளத்தில் அசோக் செல்வன் சாரை மச்சான் மச்சான் என்று கூப்பிடுவோம். பிறகு சார் என்று சொல்லுவோம். ஆனால் படத்தில் அவரின் அக்காவாக நடித்தவரைப் பார்த்தவுடன் அவரை எப்பொழுதுமே மச்சான் என்று கூப்பிடத் துவங்கிவிட்டேன். லியோன் ஜேம்ஸ் அவர்கள் இசையில் நடித்ததும், பாலசுப்ரமனியம் சார் ஒளிப்பதிவில் நடித்ததும் மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன். செடி வளர மண் முக்கியம் தயாரிப்பாளர் அய்யப்பன் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த சபாநாயகன் என்னும் செடி வளர அரும்பாடுபட்டு இருக்கிறார்கள் என்றார்.

படத்தின் நாயகிகளில் ஒருவரான கார்த்திகா முரளிதரன் பேசும் போது…

”தமிழில் பேசுவது கடினம், அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். இது தமிழில் என் முதல் படம். தமிழ் இந்த இண்டெஸ்ட்ரியில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது, மதன் சார், அய்யப்பன் சார் என என் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அசோக்செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நிறையவே சப்போர்ட்டிவ்வாக இருந்தார். எனக்கு ஆடிஷன் பாலசுப்ரமணியன் சார் கேமராவில் தான் நடந்தது. அதை நான் பெருமையாக கருதுகிறேன்.

பிரபு சார் என்னை மிகவும் அழகாக காட்டி இருக்கிறார். அவருக்கு நன்றி. இது ஒருவகை நாஸ்டால்ஜியா ப்லிம், எல்லாவித வயதினருக்குமான காட்சிகள் படத்தில் இருக்கும். பள்ளி கால, கல்லூரி கால, மணவாழ்க்கை கால கட்டங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. குடும்பத்தோடு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் இப்படத்தை ரசிக்கலாம். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என எல்லோருமே இந்தக் கதையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்யப்பன் ஞானவேல் அவர்கள் பேசும் போது…

”இப்படத்திற்கு என்னையும் சேர்த்து மூன்று தயாரிப்பாளர்கள். அரவிந்தன், மேகவாணன் என இன்னும் இருவரிருக்கிறார்கள். அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் சார்பாகவும் நான் உங்களிடம் பேசுகிறேன்.

இது ஒரு ஜாலியான படம். மூன்று புதுமுக யூடியூபர்ஸ், அருண் ஸ்ரீராம், ஜெயசீலன், இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மூன்று கேமராமேன்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொண்டு எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்றே சொல்லுவேன். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. அவருக்கும் எங்கள் நன்றி., பிரபு ராகவ் ஆரம்பத்தில் இப்படத்தில் பணியாற்ற மிகவும் பயந்தார். அவரின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. இயக்குநர் எங்களின் நண்பர்.

ஒரு விசயம் வேண்டும் என்றால் கண்டிப்பாக அது அவருக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். நல்ல நேர்மறையான சிந்தனைகள் எண்ணங்கள் கொண்ட இயக்குநர், அவருக்கு வாழ்த்துக்கள். இரண்டாவது செட்யூலில் கால் உடைந்த போதும் படப்பிடிப்பை எந்தவித தாமதமும் இன்றி முடித்துக் கொடுத்தார்.

பாலிவுட்டில் புகழ்பெற்ற பி.கே. 3 இடியட்ஸ் போன்ற படங்களின் கேமராமேன் ஆன முரளிதரனின் மகள் தான் கார்த்திகா, அவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். எடிட்டர் கணேஷ் என் நண்பர் தான். அயலி, விலங்கு போன்றவற்றில் சிறப்பாக எடிட்டிங் செய்து இருந்தார்.

இப்படத்திலும் அவரின் எடிட்டிங் பணி சிறப்பாக இருந்தது. என் நண்பரின் நண்பர். லியோன் ஜேம்ஸ் மியூசிக்கில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

எங்களின் வெல் விஷ்சர்ஸ். முதலில் ஜேம்ஸ் அவர் தான் இந்த பிராஜெக்ட் துவங்க காரணம், அடுத்து குமார் அண்ணன் அவரும் தயாரிப்பாளர் தான், என்கரேஜ் செய்து பல ஆலோசனைகள் கொடுத்தார், அடுத்து மதன் சார் அவருக்கு நன்றி. அவர் எங்களுக்கு மெண்டார் போல செயல்பட்டு வருகிறார்.

அசோக் செல்வனுக்கு நன்றி, ஜாலியாக பழகக்கூடியவர். எதையும் வெளிப்படையாக பேசுவார், பந்தா இல்லாதவர், சமீபத்தில் தான் கல்யாணம் ஆகி இருக்கிறது. அதற்கும் சேர்த்து அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

நாயகன் அசோக் செல்வன் பேசும் போது…

”எல்லோருக்கும் வணக்கம். எப்பொழுதுமே பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியான தருணம். என்னுடைய எல்லாப் படங்களையுமே மக்களிடம் கொண்டு சேர்த்து நான் இந்த இடத்தில் இன்று இருப்பதற்கு நீங்கள் தான் முழுமுதற்காரணம்.

சபாநாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இந்த இரண்டுமே எனக்கு இப்படத்தில் புதியதாக இருந்தது.

இயக்குநர்கள் இது போன்ற புதிய வாய்ப்பை கொண்டு வரும் போது தான் என்னைப் போன்ற நடிகர்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறோம். நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார். முன்பே எனக்கு நக்கலைட்ஸ் சேனல் மிகவும் பிடிக்கும். ஸ்ரீராம் ஜெய்சீலன், அருண் போன்றோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் அவர்களிடம் பல ரசிக ரசிகைகள் மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். அப்பொழுது தான் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களின் வீடியோக்களை அதிகமாக பார்த்தேன். அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஜெய்சீலனை ஜூனியர் சிவகார்த்திகேயன் என்றே சொல்லுவேன். தயாரிப்பாளர் அய்யப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும். லியோன் ஓ மை கடவுளே படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார்.

இப்படத்திலும் கேட்டதும் பிடிக்கும்படியான பாடல்கள் உள்ளன. பாலசுப்ரமனியம் சார், தினேஷ், பிரபு ராகவ் அனைவருக்கும் நன்றி. மதன் சார் ஆபிஸில் பலமுறை காத்து இருந்திருக்கிறேன்.

இன்று அவர் வழிநடத்தி செல்லும் தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்தது பற்றி கேட்கிறீர்கள். நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும் சார். என் மனைவி கீர்த்தி அந்த மாதிரி எதுவும் தவறாக நினைக்கமாட்டார். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும்.

மேலும் உங்களின் மனச்சோர்வுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் அரும் மருந்தாக சபாநாயகன் திரைப்படம் இருப்பதோடு, ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாஸ்டால்ஜியா பயணம் சென்றுவந்த உணர்வைக் கொடுக்கும். பத்திரிக்கை நண்பர்கள் என் பிற படங்களுக்குக் கொடுத்த அதே ஆதரவை இப்படத்திற்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

சபா நாயகன்

Ashok Selvan speaks about Sabanayagan and movie

2023ல் முத்தம் பெரிய விஷயமல்ல.; காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னாலே ஆக்ஷன் த்ரில்லர்.. – நானி

2023ல் முத்தம் பெரிய விஷயமல்ல.; காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னாலே ஆக்ஷன் த்ரில்லர்.. – நானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘hi நான்னா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற‌து.

இப்படத்தின் நாயகன் நானி சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாள‌ர்களை சந்தித்தார்.

இந்நிகழ்வினில் நடிகர் நானி பேசியதாவது…

‘நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை ‘நான்னா’ என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம்.

இது ஒரு மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என‌ கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும்.

தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நானி பதிலளிக்கையில்…

அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன‌, இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன‌. அது நல்லது எனறே நினைக்கிறேன்.

எனக்கு தமிழ்ப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன்.

ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

பின்னர் ‘பாகுபலி’, ‘காந்தாரா’ போன்ற‌ படங்கள் வந்த பிறகு தமிழ் நடிக‌ர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது, எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன்.

hi நான்னா

தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும்.

நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார்.

ஒரு மிகச்சிறந்த தமிழ் இயக்குநர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொன்னார், விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும்.

காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னால் அதை விட பெரிய ஆக்சன் திரில்லர் எல்லாம் கிடையாது. அது பயங்கரமாக இருக்கும். அதை இந்தப்படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.

எனக்கு இந்தப்படத்தில் சவாலாக இருந்தது என்னவெனில், நான் ஏற்கனவே ‘ஜெர்ஸி’யில் அப்பாவாக நடித்துவிட்டேன் அது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர், மீண்டும் அதே போல் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நடிப்பது தான் சவாலாக இருந்தது.

முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023ல் முத்தம் பெரிய விசயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது, முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.

நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி.

இந்தப்படம் ஆண் பெண் உறவை மிகச்சிறப்பாக பேசும் படமாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் சிறப்பான படைப்பாக இருக்கும்.

இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.

படக்குழுவினர்:

நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கண்ணா

இயக்கம்: ஷௌர்யுவ்
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் – சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

hi நான்னா

Nani Mrunal Thakur starrer Hi Nanna Chennai event updates

பர்ஸ்ட் படத்திலேயே டபுள் ஹீரோயின்ஸ் உடன் இணைந்த விஜய்சேதுபதி மகன்

பர்ஸ்ட் படத்திலேயே டபுள் ஹீரோயின்ஸ் உடன் இணைந்த விஜய்சேதுபதி மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார்.

அவர் இப்போது இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளார்.

ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பீனிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர்…

இயக்குனராக தனது முதல் திரைப்படம் சிறந்த படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

கதாநாயகன் தேர்வு குறித்து அவரிடம் கேட்டபோது…

“நாங்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமானவராக என்பதை உணர்ந்தேன்.

இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது, சூர்யா இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதால் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும்
இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

செய்தியாளர்களிடம் நாயகன் சூர்யா பேசும்பொழுது…

நீண்ட நாட்களாக சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்புவதாகவும், அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது, அதை சரியாகப் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறினார். மேலும் இந்த படத்திற்காக 6 மாதம் பயிற்சி எடுத்ததாகவும், இந்த படத்தில் நடித்து தந்தையின் ஆதரவு இல்லாமல் தானே தனக்கான பெயரைத் தானே உருவாக்குவேன்.. தனது தந்தையின் நடை வேறு, அவரது நடை வேறு.

திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

நடிகர்கள்:
சூர்யா
விக்னேஷ்
வர்ஷா விஸ்வநாத்
அபி நக்ஷத்ரா
சத்யா NJ
சம்பத்
ஹரீஷ் உத்தமன்
திலீபன்
‘அட்டி’ ரிஷி
பூவையார்

தொழில்நுட்ப குழு:
எழுத்து மற்றும் இயக்கம் : ‘அனல்’ அரசு
தயாரிப்பு : ராஜலட்சுமி அரசகுமார்
இசை : சாம் CS
ஒளிப்பதிவு: R. வேல்ராஜ்
படத்தொகுப்பு : பிரவீன் KL
தயாரிப்பு வடிவமைப்பு: K.மதன்
சண்டைப் பயிற்சி: அனல் அரசு
ஆடை வடிவமைப்பு: சத்யா NJ
நிர்வாக தயாரிப்பு: MS முருகராஜ்
மக்கள் தொடர்பு: ரியாஸ்.K.அஹமத்

Vijay Sethupathi son Surya debut movie updates

‘அனிமல்’ படத்தில் எந்த சுகர்கோட்டும் இல்லாத ஒரிஜினல் கேரக்டர்.. – ராஷ்மிகா

‘அனிமல்’ படத்தில் எந்த சுகர்கோட்டும் இல்லாத ஒரிஜினல் கேரக்டர்.. – ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் ‘அனிமல்’ திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.

இந்த நிகழ்வினில்…

தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது..
இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோம். அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது.

அவரது திரை உருவாக்கம் பற்றி தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் பிரனய் ரெட்டி வங்கா கூறியதாவது…

சந்தீப் மிக இண்டென்ஸான பெர்ஸன் என்பதால் அவருக்கு இண்டென்ஸான படம் செய்யவே பிடிக்கும். அர்ஜூன் ரெட்டி படம் போலவே இப்படத்திலும் கடுமையாக வேலை பார்த்திருக்கிறார். ரன்பீரை இப்படத்தில் புதுமையாகப் பார்ப்பீர்கள். இப்படத்தில் இண்டர்வெல் சீன் 18 நிமிட சண்டைக்காட்சி உள்ளது. தமிழ் டெக்னீசியன்சன் தான் இதில் வேலைப்பார்த்துள்ளார்கள். கண்டிப்பாக ரசிகர்கள் அந்தக்காட்சியைக் கொண்டாடுவார்கள். இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்

சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் கூறியதாவது…

இது என்னோட முதல் இந்திப்படம் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. பூஷன் சார் அவருக்கு நன்றி.

ரன்பீர் சார், பாபி சார் உடன் வேலைப்பார்த்தது சவாலாக இருந்தது. அர்ஜுன் ரெட்டி பார்த்த போதே இயக்குநருடன் வேலைப் பார்க்கும் ஆசை வந்தது. தள்ளுமாலா மலையாளப் படம் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். கதையைக் கேட்ட பிறகு ரன்பீர் சார் வைத்து டிரெயினிங் எடுக்க வேண்டும் என்றேன். ஒத்துக்கொண்டு வந்தார்கள் ரன்பீர் அவர்களுக்கு நன்றி.

முதல் ஃபைட் 18 நிமிடம் வரும். மிக வித்தியாசமானதாக இருக்கும். இங்கிருந்து (தமிழ்நாட்டில்) பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள். புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் மிகவும் உதவியாக இருந்தார் அவரின் பணி பெரிதாகப் பேசப்படும். சந்தீப் இந்தப்படத்தை மிக வித்தியாசமானதாக எடுத்துள்ளார் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் கூறியதாவது…

முதன் முதலில் கதை கேட்கும்போது எனக்கு நிறையச் சவால்கள் இருந்தது. கதையோடு சேர்ந்து மிகவும் உணர்வுப்பூர்வமான ஆக்சன் இருந்தது.

படத்தில் வரும் மிஷுன்கன் 4 மாதங்கள் உழைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கினோம். டிரெய்லர் பார்த்து சிஜியா என நண்பர்களே கேட்டார்கள், முடியாததைத் தான் சிஜி செய்வார்கள், அதனால் அந்த கேள்வி சந்தோஷமாக இருந்தது. இப்படத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் வித்தியாசமான ரன்பீர் இருப்பார். படம் தீ மாதிரி பறக்கும். கண்டிப்பாக ரசிப்பீர்கள் நன்றி.

திரைப்பட விநியோகஸ்தர் திரு முகேஷ் மேத்தா கூறியதாவது…

அர்ஜூன் ரெட்டி படம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தீப் ரெட்டி நல்ல கதையுடன் படம் எடுப்பவர், இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த போதே, இந்தப்படத்தை நான் தான் தமிழில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். புஷ்பா படத்தை முன்பு இது போல் மலையாளத்தில் ரிலீஸ் செய்தோம்.

அர்ஜூன் ரெட்டி இங்கு தமிழில் நாங்கள் தான் தயாரித்தோம். இந்தப்படத்தின் தமிழ் டப்பிங் சூப்பராக இருக்கிறது. இந்தப்படத்தைக் கண்டிப்பாக இங்குள்ள ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.

நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது…

இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம். நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான், இந்தப்படம் மிகவும் இண்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய வித்தியாசம் இல்லை.

இந்தப்படம் பொறுத்தவரை நான் செய்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர் இந்தப்படம் தான். எந்த சுகர்கோட்டும் இல்லாத மிக ஒரிஜினலான கேரக்டர் இது. நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரன்பீருடன் வேலை பார்த்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருக்கு நன்றி.

நடிகர் பாபி தியோல் பேசியதாவது..

நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரன்பீர்கபூர்.அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எப்போதாவது தான் வாழ்க்கை முழுதும் மனதில் நிற்கும் படம் கிடைக்கும். அந்த வகையான படம் இது. இந்தப்படத்தில் சந்தீப் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இப்படத்தில் கதை தான் மிக முக்கியமான ஹீரோ. நல்லவன் கெட்டவன் எல்லாம் இல்லை கதை மிக உணர்வுப்பூர்வமாக இருக்கும், திரையில் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள்.

இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும். சிஜி இல்லை எல்லாமே ஒரிஜினல் ஃபைட். மிக கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம். இரண்டு அனிமல்கள் சண்டைபோட்டுக்கொள்வது போல் இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

Rashmika speaks about her character in Animal movie

‘ஜெயிலர் – லியோ – விக்ரம்’ படங்கள் குறித்து பேசிய பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்

‘ஜெயிலர் – லியோ – விக்ரம்’ படங்கள் குறித்து பேசிய பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் ‘அனிமல்’.

இந்த படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது…

மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷீட் செய்திருக்கிறேன். எனக்குச் சென்னை ரொம்பப் பிடிக்கும்.

இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல் ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன்.

இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது,

ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும் இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர் லியோ விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்யத் தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 தியேட்டரில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி.

பூஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பங்காற்றும் இத்திரைப்படம் டிசம்பர் 1 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல்.

தொழில்நுட்பக் குழு:
இயக்குநர்: சந்தீப் ரெட்டி வங்கா
தயாரிப்பாளர்கள்: பூஷன் குமார் கிரிஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா
தயாரிப்பு நிறுவனம் : டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ், பத்ரகாளி பிக்சர்ஸ்,
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Ranbir Kapoor speaks about Jailer Leo Vikram

More Articles
Follows