இந்தியன் 2 அப்டேட்ஸ்; ஊழலை தோலுரிக்கும் உலகநாயகன்

Kamals Indian 2 story based on Corruption and Bank Loanகமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார் ஷங்கர்.

தற்போது கமல் அரசியல் களத்தில் வந்துள்ளதால் தன் ரசிகர்களை தொண்டர்களையும் கவரும் வகையில் பல அம்சங்களை சேர்க்க இருக்கிறாராம்.

1996-ல் வெளியான முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி காட்சிகளை வைத்திருந்தனர்.

தற்போது இரண்டாம் பாகத்தில் இன்றைய அரசியல்வாதிகளின் ஊழல் பற்றியும் வங்கிகளில் லோன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பணக்காரர்களை பற்றியும் சொல்லப் போகிறார்களாம்.

மேலும் மக்கள் ஆதரவை பெற பன்ச் வசனங்களை வைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

கமல் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். மேலும் இந்தி நடிகர் அஜய்தேவ்கானும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Kamals Indian 2 story based on Corruption and Bank Loan

Overall Rating : Not available

Related News

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாகி விட்டதால்…
...Read More
கமல்ஹாசன்-ஷங்கர்-லைகா-அனிருத் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகவுள்ள…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்…
...Read More
லைகா, கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில்…
...Read More

Latest Post