கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம்

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம்

kamal shankarஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தை ஏஎம். ரத்னம் தயாரித்திருந்தார்.

தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை தில் ராஜு என்ற பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.

‘இந்தியன் 2’ என்ற பெயரில் உருவாகும் இப்படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதன் தலைப்பை ‘லீடர்’ என்று மாற்றம் செய்துள்ளனர்.

தெலுங்கில் பாரதியூடு 2 என பெயர் வைக்கவுள்ளதாக தெரிகிறது.

விரைவில் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவுள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழக அரசியல் நிகழ்வுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இதன் சூட்டிங் 2018 ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Kamal Shankar movie Indian2 title will be changed as Leader

bigg boss indian 2

அக். 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

அக். 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

vishal producer councilதமிழக படங்களுக்கு 10 சதவீதமும், மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதித்துள்ளது தமிழக அரசு.

சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி 28% வரி இதற்கு முன்பே அமலில் உள்ளது.

தற்போது உள்ளாட்சி அரசின் 10% வரிக்கும்  மத்திய அரசின் ஜிஎஸ்எஸ் வரி சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இந்த கேளிக்கை வரி தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கனவே Piracy முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% / 28% ஜிஸ்டி என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 27.09.2017 அன்று தமிழ்ப்படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம்.

இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களையும் மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்.

இது சம்பந்தமாக இன்று (அக்டோபர் 3) தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதனால், வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From 6th Oct 2017 new tamil movies will not be released Producer Council announced

ரஜினி அரசியல் கட்சி குறித்து லதா ரஜினி பேட்டி

ரஜினி அரசியல் கட்சி குறித்து லதா ரஜினி பேட்டி

latha rajinikanth with super starஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பாக கேர் பாஃர் சில்ட்ரன்ஸ் நிகழ்ச்சி லதா ரஜினி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

அப்போது குழந்தை கடத்தல், குழந்தை பாதுகாப்பு, குழந்தை தற்கொலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்கு லதா ரஜினி கூறியதாவது…

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை ஏற்படுத்துவார்.

மக்களுக்கான பல நல்ல திட்டங்களை வைத்துள்ளார்.

அவர் அரசியலுக்கு வருவதை அவரே அறிவிப்பார் என்றார் லதா ரஜினிகாந்த்.

அக்டோபர் 8-ல் நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம்

அக்டோபர் 8-ல் நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம்

nadigar sangamஅக்டோபர் 8-ம் தேதி 64-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக நடிகர் சங்க உறுப்பினர்களுகு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் சங்கம் சார்பாக 64-வது பொதுக்குழு கூட்டம் வருகிற அக். 8ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி ஞாயிறு, மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும்.

இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்க பட்டுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்கம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துவார்.

துணை தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு,செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார்.

பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை நிகழ்த்த, பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவார்.

அதனை தொடர்ந்து தலைவர் நாசர் தலைமை உரையாற்றுவார். துணை தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்து தவறாமல் பங்கேற்க வேண்டுமென்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் ரசிகை ஜுலி

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் ரசிகை ஜுலி

ajith and julieதமிழக மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்டு புகழ் அடைந்தவர் ஜுலி.

அதன்பின் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

தற்போது 100 நாட்கள் முடிந்துவிட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் ஜுலி தன் சமீபத்திய பேட்டியில் ஒரு கேள்விக்கும் பதிலளிக்கும்போது தன் சினிமா ஆசையை தெரிவித்துள்ளார்.
‘நான் தளபதியின் தீவிர ரசிகை, ஆனால், தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.

ஹிட் படங்களை நான் காப்பியடிக்கிறேனா..? அட்லி விளக்கம்

ஹிட் படங்களை நான் காப்பியடிக்கிறேனா..? அட்லி விளக்கம்

atleeஇயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி அவர்கள் ராஜா ராணி என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்.

இப்படம் மௌன ராகம் படத்தின் காப்பி என்று சிலர் கூறினர்.

இதனையடுத்து விஜய் நடித்த தெறி படத்தை எடுத்தார். இப்படமும் சத்ரியன் படத்தின் காப்பி என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டது.

தற்போது மெர்சல் படத்தை உருவாக்கியுள்ளார். இது அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தன் கருத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் அட்லி.

அவர் கூறியதாவது… ‘இசையில் 7 ஸ்வரங்கள்தான் இருக்கிறது.

அதற்குள்தான் மெட்டமைக்க முடியும்.
பல வருடம் கழித்து ஏதாவது ஒரு பாடலை கேட்டால் கூட அதில் ராஜா சார், ரகுமான் சாரின் சாயல் நிச்சயம் இருக்கும்.

காப்பி அடிக்கின்றேன் என்று ஈசியாக சொல்லிவிடுகிறார்கள்.

ஒரு படத்தை எடுக்கும் போது அதை இந்த ட்ரெண்டுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். அதற்கான கஷ்டம் எனக்குதான் தெரியும்.
நானும் ஒரு உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்’ என்று கூறினார் அட்லி.

More Articles
Follows