ஆப்பரேசன் சக்ஸஸ்.. நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்

Kamal Haasanசில மாதங்களுக்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.

அப்போதே அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பின்னர் அரசியல் கட்சிப் பணி, இந்தியன் 2 சூட்டிங், மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் கமல்.

இதன்பின்னர் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார் கமல்ஹாசன்.

இதன்படி காலில் நேற்று முன்தினம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இதனையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் கமல்.

இந்த நிலையில் நாளை ஜனவரி 22ஆம் தேதி கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

இதன் பின்னர் வீட்டில் சில நாட்கள் கமல்ஹாசன் ஓய்வெடுக்க உள்ளார் என கூறப்படுகிறது.

Kamal Haasan will be discharged tomorrow

Overall Rating : Not available

Latest Post