தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அரசியல் களத்தில் இறங்கிவிட்டனர். ரஜினிகாந்த் இன்னும் அரசியல் இறங்காமல் தயங்கியே நிற்கிறார்.
விஜயகாந்த கட்சி தொடங்குவதற்கு முன்பும் சரி கட்சி தொடங்கிய பின்பும் சரி தன் படங்களில் தன் தேமுதிக கட்சி சின்னம் கொடி ஆகியவற்றை சில காட்சிகளில் வைத்திருப்பார்.
அரசியலில் நுழையும் சமயத்தில் கட்சி தொடர்பான வசனங்களையும் வைத்திருந்தார்.
என்னதான் ரஜினியுடன் 25 ஆண்டு காலம் அரசியலை தொடர்புபடுத்தி பேசப்பட்டு வந்தாலும் அவர் கட்சி தொடர்பான சின்னங்களையே காட்சிகளையோ வைக்கவில்லை.
பாபா படத்தில் மட்டும் பாபா முத்திரையை பயன்படுத்தினார். (அதுதான் அவரது கட்சி சின்னமா?)
இந்த நிலையில் விஜயகாந்த் பாணியில் அரசியல் கட்சி பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார் கமல்.
தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் கட்சி சின்னத்தை மறைமுகமாக வைத்து பப்ளிசிட்டியை தொடங்கியுள்ளார் கமல்.
நேற்று நவம்பர் 1ல் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கோட் அணிந்திருந்தார். அந்த கோட்டின் கை பகுதியில் அவருடைய ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் சின்னம் தைக்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டிருந்தது.
ஒரு கட்சி சார்பற்ற நிகழ்ச்சியில் கமல் இப்படி செய்வது நியாயமா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
ஆனால் கமல் அது குறித்து கவலைப்பட மாட்டார் என்றே தெரிகிறது.
இதை விஜய் டிவி நிர்வாகத்தினர் எப்படி அனுமதித்தார்கள்-? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
Kamal Haasan hosts Bigg Boss with MNM symbol