‘தனுஷ் உதவி; சௌந்தர்யா ரஜினி உத்தரவு…’ கஜோலின் அனுபவங்கள்

‘தனுஷ் உதவி; சௌந்தர்யா ரஜினி உத்தரவு…’ கஜோலின் அனுபவங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajol working experience with Dhanush and Soundarya Rajini in VIP 2செளந்தர்யா ரஜினி இயக்கும் ‘விஐபி 2’ படத்தில் தனுஷ் உடன் அமலாபால், இந்தி நடிகை கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இதன் சூட்டிங் முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ள கஜோல், ஒரு பிரபல
ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறிருப்பதாகவது…

தனுஷ் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் என்னை இப்படத்திற்காக அனுகிய போது முதலில் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால் என்னுடைய வசனங்களில் பாதி இங்கிலீஷில் இருந்தது. எனவே ஓகே சொல்லிவிட்டேன்.

மீதி தமிழ் வசனங்கள் பேச தனுஷ் எனக்கு உதவி செய்தார்.

இப்படத்தில் என்னுடைய கேரக்டர் என்ன? என்று சொல்ல முடியாது. எதையும் வெளியில் சொல்லக்கூடாது என டைரக்டர் சௌந்தர்யா ரஜினி ஆர்டர் போட்டுள்ளார்.

ஆனால் இந்த கேரக்டர் எனக்கு நல்ல பேர் வாங்கி தரும்.

சௌந்தர்யா ஒரு சிறந்த பெண். அவருடன் ஒர்க் செய்தது இனிய அனுபவம்.” என்று தெரித்துள்ளார்.

ஷான் ரோல்டான் இசையமைக்க, தனுஷ் உடள் இணைந்து இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kajol working experience with Dhanush and Soundarya Rajini in VIP 2

‘சூடுதான்… ஆனா விஜய்யோடு நடிப்பது சூப்பரூ…’ – நித்யாமேனன்

‘சூடுதான்… ஆனா விஜய்யோடு நடிப்பது சூப்பரூ…’ – நித்யாமேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nithyamenon experience working with Vijay in Atlee movieஅட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் சூட்டிங்கை முடித்துவிட்டு, தற்போது ராஜஸ்தான் சென்றுள்ள இப்படக்குழுவினர்.

அப்போது அங்குள்ள ஜெய்சல்மர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் படத்தின் நாயகி நித்யாமேனன்.

ஒரு பாடல், டயலாக் சீன் மற்றும் பைட் சீன்ஸ் இங்கு படமாக்கப்பட உள்ளது. எனவே இங்கு வந்துள்ளோம்.

இந்த பகுதி மிகவும் சூடாக உள்ளது. ஆனால் விஜய்யுடன் நடிக்கவிருப்பதால், அந்த நினைவே சூப்பராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Nithyamenon experience working with Vijay in Atlee movie

அஜித் புகைப்படத்தில் சிவா சொன்ன கேரக்டர் சீக்ரெட்ஸ்

அஜித் புகைப்படத்தில் சிவா சொன்ன கேரக்டர் சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nunchaku bruce leeஅஜித் நடித்து வரும் விவேகம் படத்தை சிவா இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தினம் தினம் அதிகரித்து வருகிறது.

எனவே அஜித் ரசிகர்களை கவரும் வகையில் மாதம் ஒருமுறையாவது ஒரு படத்தை வெளியிட்டு அவர்களை ஆறுதல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு, விவேகம் படத்தில் இடம் பெற்றுள்ள அஜித்தின் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அஜித் கையில் ஒரு ஆயுதத்தை வைத்துள்ளார்.

அது கராத்தே பயிலுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுதமான NUNCHAKU என்பதாகும்.

அதாவது இரண்டு பக்கமும் இரும்பு அல்லது மரக்கட்டை இருக்கும். அந்த இரண்டையும் இரும்பு செயின் அல்லது கயிறு இணைக்கும்.

இதை நாம் அடிக்கடி உலகப் புகழ்பெற்ற பிரபல நடிகர் புரூஸ்லீ படங்களில் அதிகம் பார்த்து இருப்போம்.

இந்த போட்டோ மூலம் அப்படத்தில் அஜித் கராத்தே பயின்று உள்ளது போலவும் அது தொடர்பான சண்டைக் காட்சி நிச்சயம் இருக்கும் என தெரிகிறது.

Ajith has Nunchaku in his hand for Vivegam movie new still

 

 

அஜித் ரசிகர்களை அசத்திய விவேகம் பட புதிய ஸ்டில்

அஜித் ரசிகர்களை அசத்திய விவேகம் பட புதிய ஸ்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegamஅஜித் நடித்து வரும் விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

சிவா இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து கிட்டதட்ட 4 ஸ்டில்கள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில் தற்போது புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில் அஜித் ஆக்ஷனில் இறங்குவதும் போன்றும் அதே சமயம்,  நிதானமாக எதையோ யோசிப்பது போல உள்ளார்.

கைகள் நல்ல முறுக்கேறிய நிலையில் எதிரிகளை தாக்க தயாராகி நிற்பதாக உள்ளது.

அஜித் ரசிகர்களை அசத்திய இந்த ஸ்டில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

siva released new look of ajith from vivegam movie

ஏஆர். முருகதாஸ் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா.?

ஏஆர். முருகதாஸ் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rakul Preet singhஅட்லி படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை பிரபல நிறுவனமாக லைகா தயாரிக்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் பீரித்தி சிங் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் தடையற தாக்க படம் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

பின்னர் என்னமே ஏதோ என்ற படத்தி நடித்தார். தற்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படத்தை சதுரங்க வேட்டை வினோத் இயக்குகிறார் என்பது நாம் அறிந்ததே.

Rakul Preet Singh may teams up with Vijay AR Murugadoss Project

எங்க மகன் இல்லேன்னு தனுஷால சொல்ல முடியுமா.? – ‘திடீர்’ பெற்றோர்

எங்க மகன் இல்லேன்னு தனுஷால சொல்ல முடியுமா.? – ‘திடீர்’ பெற்றோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Dhanush sudden Madurai parents interviewநடிகர் தனுஷ் தங்கள் மகன் என மதுரையை சேர்ந்த கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஒரு பிரபல இதழுக்கு இவர்கள் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…

ஐஞ்சு வயசு வரைக்கும் கலைச்செல்வனுக்கு (தனுஷ்) பேச்சுவராம இருந்துச்சு.

மேலூர் உள்ள அரசுப்பள்ளில் பத்தாவது வரை படிச்சான்.

மேற்படிப்புக்காக திருப்பத்தூர்ல படிக்க வச்சோம். ஆனால் கொஞ்சநாள்லவ காணாம போய்ட்டான்.
தேடி தேடி பார்த்து பின்பு அமைதியாகிட்டோம்.

பொல்லாதவன் பட விளம்பரத்த டிவி பேட்டி பாத்தோம்.

‘ஏய் நம்ம கலைச்செல்வன் மாதிரியே இருக்கான்லனு அப்போ பேசிட்டு இருந்தோம்.

நான் மதுரைக்காரன். பிளஸ் ஒன் பாதி வரைக்கும்தான் படிச்சிருக்கேனு அந்த பேட்டியில சொன்னார்.

அதுவரைக்கும் சந்தேகத்தோட இருந்தோம். ஆனா அவரோட நடை, உடை, பாவனை எல்லாம் எங்க மகன் செய்வதை போல இருந்துச்சு.

அதன்பின்னர் அவர்கிட்ட பலமுறை பேச முயற்சி செய்தோம். ஒரு முறை நேரிலும் பார்த்தோம். ஆனா எங்களை தவிர்த்துட்டார்.

நாங்க நிறைய பேருகிட்ட சொல்லி பாத்தோம். ஆனா யாரும் நம்பல. அதான் வழக்கு போட்டோம்.

இப்ப வரைக்கு அவர் எங்ககிட்ட வந்து பேசலையே அது ஏன்.?

உங்க மகன் நான் இல்ல. ஏன் தொல்லை பண்றீங்கனு ஒரு வார்த்தை கூட கேட்கலை.

நான் உங்க மகன் இல்ல. நீங்க என்னோட அப்பா அம்மா இல்லைனு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.

அவரால முடியாது. அவருக்கு மனசாட்சினு ஒண்ணு இருக்குது.

என்று அப்பேட்டியில் தெரிவித்துள்ளனர் அந்த தம்பதியினர்.

Actor Dhanush sudden Madurai parents interview

dhanush old photo by madurai parents

More Articles
Follows