மீண்டும் காதல் மன்னனாக அஜித்… தல ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் காதல் மன்னனாக அஜித்… தல ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam stillsசிவா இயக்கத்தில் அஜித் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் விவேகம்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில் நாளை வெளியாகவிருக்கும் ‘காதலடா’ என்ற மூன்றாவது சிங்கிள் வெளியாகிறது.

இது, அருமையான க்ளாசிக் பாடலாக இருக்கும் என்று அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள் மீண்டும் ஒரு காதல் மன்னன் என டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்

ட்விட்டரில் இருந்து குஷ்பூ விலக இதான் காரணம்..

ட்விட்டரில் இருந்து குஷ்பூ விலக இதான் காரணம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress khushbooநடிகை குஷ்பூ தற்போது காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

இதனிடையில் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

மேலும் ட்விட்டரில் அவ்வப்போது நாட்பு நடப்புகளை பதிவிட்டு தன் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ட்விட்டருக்கு தான் அடிமையாகிவிட்டதாகவும், சில காலம் ஒதுங்கிவிட்டு, பின்னர் வந்து இணைவதாகவும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

khushbusundar‏Verified account @khushsundar
Ok friends..hve decided 2 go off Twitter 4 sumtime..want 2 do start reading again..dis platform is like addiction..promise 3 cme back soon.

khushbusundar‏Verified account @khushsundar
Bye friends..happy twèeting..use tjis platform to build this nation n not 2 divide..keep hate n vengeance out..spread love,joy n peace.

முதுகெலும்பு இல்லாத கோழை கமல்… எச். ராஜா கடும் தாக்கு

முதுகெலும்பு இல்லாத கோழை கமல்… எச். ராஜா கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasan and H Rajaகமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளால், தமிழக அரசியல் களம் பயங்கர சூடுபிடித்துள்ளது.

மக்கள் பிரச்சினைகள் பல இருந்தாலும், அரசியல்வாதிகள் பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் பதிலடிகளை கொடுத்து வருகின்றனர்.

கமலை ஸ்டாலின், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்கள் ஆதரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜ கட்சியை சேர்ந்த எச். ராஜா கடுமையாக சாடியுள்ளார்.

முடிவெடுத்தால் நான் முதல்வர் என்று கமல் ட்விட்டர் போட்டு இருப்பதாக அறிந்தேன்.

எல்லாருக்கும் கனவு காண உரிமை உள்ளது. அதுபோல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஆனால் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் அச்சமில்லாதவர்களாக இருக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்தின் பிரச்சினையின் போது, அழுது புலம்பி கதறியவர் கமல்.

பிரச்சினையை சந்திக்க தைரியமில்லாமல் இந்த நாட்டை விட்டே ஓடி விடுவேன் என கூறியிருந்தார்.

முதுகெலும்பில்லாத கோழை கமல். அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள். என பேட்டியளித்துள்ளார் எச் ராஜா.

அஜித்தை இயக்க ஆசை; நடிக்கவும் ஆசை… – சௌந்தர்யா ரஜினி

அஜித்தை இயக்க ஆசை; நடிக்கவும் ஆசை… – சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Wish to Direct Ajith and wish to act in movies Says Soundarya Rajiniகோச்சடையானை தொடர்ந்து தனுஷ் தயாரித்து நடித்துள்ள விஐபி2 படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற ஜீலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“விஐபி2 அதிரடி கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ளது.

பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற வலுவான கேரக்டரில் கஜோல் நடித்துள்ளார்.

இயக்கம் மட்டுமில்லாமல் இசை, ஒளிப்பதிவு போன்ற துறைகளிலும் பெண்கள் வரவேண்டும்.

சிரஞ்சீவி மற்றும் அஜித் படங்களை இயக்க ஆசை உள்ளது.

சினிமாவில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. கதையும் கேரக்டரும் பிடித்திருந்தால் நிச்சயம் நடிப்பேன்.” என தெரிவித்தார்.

Wish to Direct Ajith and wish to act in movies Says Soundarya Rajini

இழந்த பெயரை மீட்டெடுக்க ரஜினி-அஜித் படத்தில் சிம்பு

இழந்த பெயரை மீட்டெடுக்க ரஜினி-அஜித் படத்தில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sources says Simbu may choose Billa3 scriptசிம்பு 3 வேடங்களில் நடித்து அண்மையில் வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

சிம்பு எப்படி இதுபோன்ற மொக்கையான படத்தில் நடித்தார்? என கடுமையான விமர்சனங்களை இப்படம் சந்தித்தது.

எனவே இழந்த பெயரை, மீட்டெடுக்க பாதியில் கைவிடப்பட்ட கெட்டவன் படத்தை எடுக்கும் முடிவில் சிம்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அதை விட அதிரடியான ஒரு ஹிட் படம் தற்போது வேண்டும் என்பதால், பில்லா3 படத்தை எடுக்கவிருக்கிறாராம்.

பில்லா படத்தில் ரஜினி நடித்திருந்தார். அதன்பின்னர் அதன் ரீமேக்கில் அஜித் நடித்தார்.

தற்போது அதன் தொடர்ச்சியில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை விஷ்ணுவர்தன் அல்லது வெங்கட்பிரபு இயக்கக்கூடும் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Sources says Simbu may choose Billa3 script

கமல்ஹாசனை சந்தித்த முதல்வரின் நெருங்கிய நண்பர்

கமல்ஹாசனை சந்தித்த முதல்வரின் நெருங்கிய நண்பர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal aam adhmi vasigaranதமிழக அரசியல் சிஸ்டம் சரியில்லை என சில நாட்களுக்கு முன் ரஜினி பேசியதால் தமிழக அரசியல் வட்டாராம் பரபரப்பானது.

தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என கமல் அண்மையில் கூறியதால், தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பரும், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவருமான வசீகரன், கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என வழக்கம் போல கூறப்பட்டுள்ளது.

ஆனால் டெல்லி முதல்வரின் ஆலோசனைப் படிதான் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Aam Aadmi TN Party leader met Kamalhassan

More Articles
Follows