கோடை விடுமுறையில் கமல்-விக்ரம் வைக்கும் மெகா விருந்து

கோடை விடுமுறையில் கமல்-விக்ரம் வைக்கும் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and vikramதமிழகத்தில் பரமக்குடி என்ற கிராமத்தில் பிறந்த கமல்ஹாசன் மற்றும் விக்ரம் இருவரும் தமிழ் சினிமாவை பெருமைப்பட வைத்த கலைஞர்களில் மிக முக்கியமானவர்கள்.

இவர்கள் இருவரும் தற்போது ‘கடாரம் கொண்டான்’ என்ற படத்திற்காக இணைந்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமும், கமலின் மகள் அக்ஷராஹாசனும், இணைந்து நடித்து வருகின்றனர்.

நாசரின் மகன் அபி மெய்தி ஹாசன், ‘8 தோட்டாக்கள்’ பட நாயகி மீரா மிதுன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

ராஜேஷ் எம் செல்வா இயக்கி வரும் இப்பட சூட்டிங்கை 2019 ஜனவரிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

எனவே 2019 கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிடும் முடிவில் இருக்கிறார்களாம்.

விஜய்யால் நஷ்டம்; தனுஷ் படத்தை நிறுத்திய பிரபல நிறுவனம்

விஜய்யால் நஷ்டம்; தனுஷ் படத்தை நிறுத்திய பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vijayவிஜய் நடித்த மெர்சல் படத்தை தங்களது 100வது படைப்பாக பிரம்மாண்டமாக தயாரித்தது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

‘மெர்சல்’ படம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டாலும் அது தயாரிப்பு நிறுவனமாக தேனாண்டாள் பிலிம்சுக்கு லாபமாக அமையவில்லை என்பதே உண்மை.

எனவே இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் படத்தை வாங்கி வெளியிட்டனர்.

அதுவும் அவர்களுக்கு லாபமாக அமையவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையில் நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்தை தாங்கள் தயாரிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க, இதை சரித்திர காலப் படமாக தனுஷ் இயக்கவிருந்தார்.

செப்டம்பரில் சூட்டிங்கை ஆரம்பித்து சில நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தினார்.

ஆனால் சில நாட்களாக சூட்டிங் நடக்கவில்லை.

ஏனென்றால் தற்போது நிதிப் பிரச்சினை காரணமாக சூட்டிங்கை நிறுத்திவிட்டதாம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.

தனுஷின் பட பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் அந்த படத்தை கைவிடும் அளவுக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தனுஷ் அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அசுரன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவரானது ஏன்..? பார்த்திபன் விளக்கம்

தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவரானது ஏன்..? பார்த்திபன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthibanதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு போட்ட விவகாரத்தால் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய துணை தலைவராக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு முன் துணை தலைவராக இருந்த கவுதம் மேனன் பதவி விலகியதை அடுத்து பார்த்திபன் புதிய துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி போன்ற அரசியல் நமக்குள் வேண்டாம் என்றும், துணை தலைவராக தேர்ந்தெடுத்த போது, முதலில் மறுத்து, பின் தற்போது சூழ்நிலை மதித்து சம்மதித்ததாகவும் பார்த்திபன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க அங்கத்தினர்கள் அனைவருக்கும்…

நான் தயாரிப்பாளர் ஆனது என் படைப்பின் சுதந்திரத்திற்கே! உறுப்பினரானது கடமை. செயற்குழு உறுப்பினரானது இருந்ததை காட்டிலும் சிறந்ததை செய்ய நம் உழைப்பையும் நேரத்தையும் கூடுதலாக தரலாம் என்ற தர்ம சிந்தனையின்றி லாப நோக்கமல்ல.

இச்சங்கத்தில் இதுவரை நான் கண்டதெல்லாம், சிறிய பலனுக்கு கூட சீரிய முயற்சி எடுக்கப்பட்டதென்னவோ உண்மை. காணாதது, ஊழல் மற்றும் உபத்தொழிலாய் பதவிகளை பயன்படுத்தி யாரும் லஞ்ச லாபம் அடைவது. அதை நான் என்றாவது அறிந்திருந்தால் அன்றே பதவி விலகிருப்பேன். நேர்முக மறைமுக கலெக்‌ஷன் என்று ஒன்று இருந்தால் மட்டுமே எலெக்‌ஷன் சூடு பிடிக்குமோ என்னவோ?

அதிரடி அறிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் காண்கையில் பொதுமக்களுக்கும் அதுவே தோன்றுகிறது. நியாயம் கேட்க நீதிமன்றத்தில் பல வாசல்கள் உண்டு. முடிவாய் உரிமையை நன்முறையில் நிலைநாட்ட தேர்தல் என்ற ஒன்று மிக அருகில் இருக்கையில் பூட்டு போட்டு வன்முறையில் ஈடுபடுவது அநாகரீகமானது என்பதை நான் மட்டுமல்ல, நீதிமன்றமும் வன்மையாக கண்டித்துள்ளது.

சகலரிடமும் சுமூகமாக நேசக்கரம் நீட்டுபவன் நான். வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவன். சங்க பதவி மூலம் அந்த நட்பில் சிறு பிளவு ஏற்படுவதையும் விரும்பாதவன்.

எனவே ஆளுங்கட்சி, எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் இருந்தால், அதை களைந்து ஒற்றுமை மேம்பட முயற்சிப்போம். நேற்று திடீரென தலைமையும், செயற்குழு உறுப்பினர்களும் என்னை துணை தலைவராக தேர்ந்தெடுத்த போது, முதலில் மறுத்து, பின் சூழ்நிலை மதித்து சம்மதித்தேன். (தேர்தலின் போதே விஷால் என்னை உயர் பொறுப்புகளுக்கு நிற்க சொல்லியும் மறுத்தவன் நான்)

இந்த அமைப்பின் பதவிக்காலம் முடியும் வரை, என்னால் இயன்ற ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று முடிவெடுத்தே EC உறுப்பினராக ஆனேன்.

இந்த பதவியில் எந்த சுகமும் இல்லை, பணிச்சுமை மட்டுமே. மிச்சமுள்ள குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சமான ஒரு இசைக்கலைஞனுக்கு உரிய மரியாதையை கெளரவமாக செய்து, அந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவிடும் வகையில் செய்யும், ஒரே ஒரு பொறுப்பை மட்டுமாவது பொறுப்பாய் செய்திட இடையூன்றி அனைவரும் இணைந்திட வேண்டுகிறேன்.

இவ்வாறு பார்த்திபன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் பாராட்டைப் பெற்ற தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

சிம்புவின் பாராட்டைப் பெற்ற தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and sivakarthikeyanசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘கனா’.

இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் சிம்புவும் அருண்ராஜா காமராஜை தொலைபேசியில் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

உங்கள் பாராட்டுக்கு மிகப்பெரிய நன்றி எஸ்டிஆர் சார்.

ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் நீங்கள் விலாவரியாக சொன்னது உங்கள் நேர்மறை சிந்தனையும் ஆழமாக இருந்தது.

மீண்டும் ஒரு முறை நன்றி” என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எழுத்தார் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான *இயல் விருது*

எழுத்தார் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான *இயல் விருது*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director cum Politician Seeman starrer Munthirikaadu newsகனடாவில் இயங்கிவரும் ”தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை” சார்பாக ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக இயங்கிவரும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில், ”இயல் விருது” வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதி ஆணவக்கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று.

பெத்தவன் நெடுங்கதை தான்,இயக்குனர் மு.களஞ்சியம் தயாரிப்பு , இயக்கத்தில்,புதுமுகங்களோடு, இயக்குனர் சீமான் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ”முந்திரிக்காடு” திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

ஆகவே, எழுத்தார் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான ”இயல் விருது”அறிவிக்கப்பட்டதில் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Director cum Politician Seeman starrer Munthirikaadu news

சூர்யா 37 பட தலைப்பை ரசிகர்களே முடிவு செய்ய சூப்பர் சான்ஸ்

சூர்யா 37 பட தலைப்பை ரசிகர்களே முடிவு செய்ய சூப்பர் சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KV Anand Asks Fans Suggestion with a Poll of 3 Tentative Titles for Suriya 37தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்தில் நடிக்கத் துவங்கினார் சூர்யா.

இப்படத்தின் சூட்டிங் தாமதமானதால், கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி உள்ளிட்டோர் நடிக்க நாயகியாக சாயிஷா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சிரக் ஜனியும் நடித்துள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு வைக்க வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது படக்குழு.

மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ரசிகர்களிடையே வாக்கு கேட்டிருக்கிறார் டைரக்டர்.

இதில் ‘உயிர்கா’ என்ற தலைப்பிற்கே அதிக வாக்குகள் கிடைத்து வருகிறது.

எனவே ‘உயிர்கா’ என்ற தலைப்பே இறுதியாகும் எனத் தெரிகிறது.

KV Anand Asks Fans Suggestion with a Poll of 3 Tentative Titles for Suriya 37

More Articles
Follows