கேரள லாட்டரி சீட்டை மையப்படுத்தி தமிழில் உருவாகும் ‘பம்பர்’

கேரள லாட்டரி சீட்டை மையப்படுத்தி தமிழில் உருவாகும் ‘பம்பர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வகுமார் இயக்குகிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வகுமார்,…

“கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கவுள்ளனர்.

இந்த திரைப்படத்தை தூத்துக்குடி மற்றும் கேரளாவில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது,” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

தயாரிப்பு: சு. தியாகராஜா, இயக்கம்: எம். செல்வகுமார்.

*‘8 Thottakkal’ fame Vetri to act in ‘Bumper’, a Tamil film based on Kerala lottery produced by S. Thiagaraja, directed by M. Selvakumar*

‘வீரமே வாகை சூடும்’ : அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் விஷால்

‘வீரமே வாகை சூடும்’ : அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும்“.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் முழுப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிட்டது.

தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் முடிக்கப்பட்டு, இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டதை விட விரைவாக பணிகள் முடிக்கப்பட்டதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.

ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார்.

யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார்.

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.

S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர்.

விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

விரைவில் இப்படத்தின் டீசர், இசை குறித்த அறிவிப்புகளை, தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

It is a wrap for the dubbing of Veerame VaagaiSoodum

மரணித்த தாயை பார்க்க ஆசைப்பட்ட இயக்குனர்.; கனவை நிறைவேற்றிய தயாரிப்பாளர் பிரபு

மரணித்த தாயை பார்க்க ஆசைப்பட்ட இயக்குனர்.; கனவை நிறைவேற்றிய தயாரிப்பாளர் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dream warrior Pictures சார்பில் SR பிரபு தயாரிக்கும் “கணம்”. அம்மாவின் பாசத்தை வைத்து உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் SRபிரபு அவர்களின் Dream warrior Pictures விளங்கி வருகிறது.

“அருவி, என் ஜி கே, கைதி” இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம் பெரும் பாரட்டுக்களை குவித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.

இந்த திரைப்படம் உருவான விதமே ஒரு அழகு கதை!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டிக்கொண்டிருந்த ஶ்ரீகார்த்திக் Happy to be single எனும் வெப் சீரிஸை இயக்க அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, தனது சொந்த அனுபவங்களிலிருந்து ஒரு கதையை உருவாக்கி, தயாரிப்பாளர் SR பிரபுவை அணுகியுள்ளார்.

ஒரு சிறு பட்ஜெட் படமாக புதுமுகத்தை வைத்தே, இக்கதையை முதலில் சொல்லியுள்ளார் இயக்குநர்.

“ எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்து விட அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அந்த ‘கணம்’ உருவான கதை தான் இந்த “கணம்”.

இந்த திரைக்கதையை தாய் மகன் உறவு, சயின்ஸ் பிக்சன் என பல தளங்களில் பயணிக்கும் வித்தியாசமான படைப்பாக இப்படம் உருவாக்கினேன்.

இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்து, வித்தியாசமான் கதைகளை தயாரிக்கும் தயாரிப்பாளர் SR பிரபு விடம் சொன்னேன்.

கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது…” என்றார் டைரக்டர் ஶ்ரீகார்த்திக்.

கதையும் அதன் உணர்வுகள் பயணிக்கும் விதத்தையும் கேட்டு வியந்த அவர் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் இதை பெரிய அளவில் உருவாக்குவோம் என்று, படத்தை பிரமாண்டமாக வடிவமைக்க தொடங்கினார்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கலாம் என திட்டமிட்ட பிறகு தனது நண்பரான எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்தை அணுகி அவரை நாயகனாகவும் ஆக்கியுள்ளார்.

இப்படம் மூலம் சர்வானந்த் 10 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்தின் மிக முக்கியமான அம்மா வேடத்தில்,
தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத கனவுக்கன்னியாக விளங்கிய அமலாவை நடிக்க வைத்துள்ளது படக்குழு.

25 வருடங்களாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை அமலா இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாடும் பாத்திரமாக அவரது பாத்திரம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் தனது தாயின் நினைவாகவே இத்திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

அமலா, சர்வானந்த் முதன்மை பாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார்.

சதீஷ் ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசர் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நீண்ட நாளுக்கு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஃபேமிலி டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

Director Shree Karthick talks about his film Kanam

ஆஸ்கர் விருதுக்கு யோகிபாபு படம் பரிந்துரை.? ‘நாயாட்டு’ உள்ளிட்ட 14 படங்கள் தேர்வு

ஆஸ்கர் விருதுக்கு யோகிபாபு படம் பரிந்துரை.? ‘நாயாட்டு’ உள்ளிட்ட 14 படங்கள் தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆஸ்கர் விருதுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடு மொழிகளில் இருந்து பல படங்கள் இந்த விருதுக்கு போட்டியிடுகின்றன.

எனவே இந்தியாவிலிருந்தும் படங்கள் அனுப்பி வைக்கப்படும்.

அதன்படி அடுத்தாண்டு 2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள விழாவுக்கு இந்தியா சார்பில் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழில் யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படமும் தேர்வாகி உள்ளது.

மடோனா அஸ்வின் இயக்கிய இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை.

நேரடியாக டிவியில் வெளியாகி பின்னர் ஓடிடியிலும் வெளியானது.

‘‘என் அன்பை வாங்கிக்கோங்க..; யோகி பாபுவுக்கு பிரியா பவானி சங்கர் கோரிக்கை’’

இத்துடன் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ஷெர்னி, மலையாளத்தில் நாயாட்டு உள்ளிட்ட 14 படங்கள் தேர்வாகி உள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்த 14 படங்களில் இருந்து ஒரு படத்தை 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்வார்கள்.

எனவே இந்த 14 படங்களில் எந்த படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி செல்ல போகிறது என்பது விரைவில் தெரியவரும்.

Yogi babu’s Mandela is shortlisted for India’s entry to the Academy Awards

கொரோனாவினால் வீர மரணமடைந்த காவலர்களுக்கு இசையஞ்சலி.; ஜிப்ரான் இசையில் பார்வையற்ற திருமூர்த்தியின் ‘வீரவணக்கம் ஆன்தம்’

கொரோனாவினால் வீர மரணமடைந்த காவலர்களுக்கு இசையஞ்சலி.; ஜிப்ரான் இசையில் பார்வையற்ற திருமூர்த்தியின் ‘வீரவணக்கம் ஆன்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவல்துறை உங்கள் நண்பன் என்பது தமிழ்நாடு காவல் துறையின் தாரக மந்திரம். இது வார்த்தையாக மட்டும் நின்றுவிடாமல் செயல் வடிவமாக கொரோனா சமயத்தில் வெளிப்படுத்தியவர்கள் நம்முடைய காவல் துறையினர்.

கொரோனா சமயத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு காவல் துறையினர் இரவும் பகலும் மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்து சேவை செய்து வந்தனர்.

கொரோனா கோரப் பிடியில் பல காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் பலியானார்கள்.

அவர்களுடைய தன்னலமற்ற தியாகத்தை நினைவுக்கூறும் வகையில் தற்போது ‘வீர வணக்கம் அந்தம்’ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் இறந்த போலீஸ் வாரியர்ஸை கெளரவிக்கும் விதமாக இந்த ஆல்பத்தை உருவாக்கியவர் திருவள்ளுர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்புக்குரிய திரு வருண்குமார் ஐ,பி.எஸ். அவர்கள். இந்த ஆல்பத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

‘தேசத்துக்காக’ என்ற இந்தப் பாடலை ‘செவ்வந்தியே மதுவந்தியே’ புகழ் மாற்றுத்திறனாளி திருமூர்த்தியும், தலைமை காவலர் சசிகலாவும் இணைந்து பாடியுள்ளனர்.

ஒளிப்பதிவை FIVETH ANGLE STUDIOS நிறுவனம் செய்துள்ளது.

இந்த ஆல்பம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் சமீபத்தில் இந்த ஆல்பத்தை உருவாக்கிய மதிப்புக்குரிய திரு வருண்குமார் ஐ.பி.எஸ். மற்றும் அவருடைய குழுவினரை பாராட்டும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய சமூக வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா சமயத்தில் பொது மக்களுக்காக காவல் துறையினர் அர்ப்பணித்த காட்சிகள் நெகிழவைக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இந்த ஆல்பத்தை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் காவல்துறைக்கு ராயல் சல்யூட் அடிக்கத் தோன்றும்.

தொழில் நுட்ப கலைஞர்கள் :

ஆக்கம்: வருண்குமார் ஐ. பி. எஸ்

இசை : ஜிப்ரான்

ஒளிப்பதிவு : மனோஜ் நாகராஜன் (Fifth Angle Studios)

பாடகர்கள் : திருமூர்த்தி, சசிகலா (தலைமை காவலர்)

Here is a tribute song made in memory of the police officers who lost their lives in this Covid situation. The music was composed by #Ghibran and made by Thiruvallur District SP #Varun Kumar.

@VarunKumarIPSTN @GhibranOfficial

Link : https://t.co/Pv5JBN9Uzt

தமிழ்நாட்டில் தியேட்டர்களை பிடிப்பதில் ‘அண்ணாத்த’ அடாவடி..? ஏக்கத்தில் ‘எனிமி’ தயாரிப்பாளர்

தமிழ்நாட்டில் தியேட்டர்களை பிடிப்பதில் ‘அண்ணாத்த’ அடாவடி..? ஏக்கத்தில் ‘எனிமி’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருனாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள படம் ‘எனிமி’.

இந்த படம் நவம்பர் 4ல் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்தனர்.

ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வர இருப்பதால், எனிமி படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் சிலர் தடுக்கிறார்கள் என அப்பட தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில்…

“எனிமி படத்தை தயாரித்துள்ள வினோத் நான். எங்க படத்தை நவ.,4ல் ரிலீஸ் செய்ய உள்ளோம்.

ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய படம் (அண்ணாத்த) வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல்.

‘‘இறங்கி விடலாம்தான். ஆனால்..; ‘அண்ணாத்த’ உடன் மோதலில் இருந்து விலகியது ‘மாநாடு’’

அது உண்மையாக இருந்தால் என் சங்கத்திடம் நான் ஆதரவு கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 900 தியேட்டர்களிலும் ஒரே படத்தையே (அண்ணாத்த) திரையிட்டால் எப்படி?.

அப்படியே எல்லா தியேட்டர்களிலும் ஒரு படத்தை வெளியிட்டாலும் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை.

என் படம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கேட்பது வெறும் 250 தியேட்டர்கள் தான். அது கிடைத்தாலே போதும்.

நல்ல விலைக்கு ஓடிடி நிறுவனங்கள் ஆபர் தந்தும் நாங்கள் தான் தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை.

எனவே தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்டவைகள் ரிலீஸில் எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

‘எனிமி’ படம் தீபாவளிக்கு வெளிவராமல் போனால் நீதி கிடைக்க என்ன போராட்டம் வேண்டுமானாலும் செய்ய தயார்.

இவ்வாறு வினோத் அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.

(ஆனால் இது உண்மையா? என தெரியவில்லை என்றே தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.)

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தை தயாரித்துள்ள நிறுவனம் சன் பிக்சர்ஸ்.

இந்த நிறுவனம் திமுக அரசுக்கு உறவினர் முறை.

மேலும் ‘அண்ணாத்த’ படத்தை முதல்வரின் மகனும், நடிகருமான உதயநிதி MLAவின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது படத்திற்கு போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால்தான் சிம்புவின் ‘மாநாடு’ ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Enemy producer requests TFPC to help him get 250 screens!

More Articles
Follows