‘8 தோட்டாக்கள்’ & ‘குருதி ஆட்டம்’ பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் திருமணம்

‘8 தோட்டாக்கள்’ & ‘குருதி ஆட்டம்’ பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாயகன் வெற்றி நடித்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

அண்மையில் அதர்வா நடித்து வெளியான ‘குருதி ஆட்டம்’ படத்தையும் இயக்கியவர் ஸ்ரீகணேஷ் தான்.

இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் தோழியான சுஹாசினி என்பவரை நேற்று செப்டம்பர் 7ல் திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களின் திருமணம் சென்னை மருதீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது.

ஸ்ரீகணேஷ்

Director Sriganesh got married with Suhashini

பான் இந்தியா மியூசிக் டைரக்டர் ஆகிறார் சாம் சி.எஸ்

பான் இந்தியா மியூசிக் டைரக்டர் ஆகிறார் சாம் சி.எஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார்.

விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. விக்ரம் வேதா மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

சாம் CS

அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் மொழி தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசை பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது.

இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். கண்ணம்மா மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது.

மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். கைதி, அடங்க மறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சுழல் போன்ற தொடர் வெற்றிகளை அடுத்து, சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

ராக்கெட்ரி வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தின் இந்திப் பதிப்பு டிரெய்லர் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

படத்தின் இசைக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இசையமைப்பாளர் சாம் CS க்கு பாலிவுட்டிலிருந்து பல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் சாம் CS.

Sam C.S. becomes Pan India Music Director

அழகிய AUNTY-களுடன் அரசர்கள் ஆட்டம்.; இணையத்தில் பட்டையை கிளப்பும் ‘பவுடர்’ பட பாடல்

அழகிய AUNTY-களுடன் அரசர்கள் ஆட்டம்.; இணையத்தில் பட்டையை கிளப்பும் ‘பவுடர்’ பட பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்ஸ்ரீ ஜீ கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்துள்ள படம் ‘பவுடர்’.

இவரே ஜீ மீடியா சார்பாக படத்தை தயாரித்துள்ளார்.

இவருடன் பிஆர்ஓ நிகில் முருகன், வித்யா ப்ரதீப், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, ஆதவன், சில்மிஷம் சிவா, சிங்கம் புலி, தர்மா, ராமராஜன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

லியாண்டர் லீமார்ட்டி இசையமைக்க ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ரத்த தெறி தெறி… சாயம் போன வெண்ணிலவே.. நோ சூடு நோ சொரனை.. ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் ‘நோ சூடு நோ சொரனை..’ என்ற பாடல் வீடியோவை ஆகஸ்ட் 31ல் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட்டனர்.

இந்தப் பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு கானா பாலா பாட விஜய் ஸ்ரீ எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு மட்டும் பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் பாடலை வித்தியாசமாக படமாக்கி ஆடி இருந்தார் விஜய் ஸ்ரீ. அரசர் காலத்து உடைகளில் அரசர்கள் ஆட இந்த காலத்து உடையில் அழகிய ஆண்டிகள் நடனமாடி இருந்தனர். எனவே இது இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடலை யூடியூபில் 10 லட்சம் பார்வையாளர்கள் மேல் கண்டு ரசித்துள்ளனர்.

விரைவில் பவுடர் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இசை லியாண்டர் லீ மார்ட்டி,
நடனம் சுரேஷ் சிது, ஒளிப்பதிவு பிரகத் முனுசாமி. படத்தொகுப்பு குணா.

தயாரிப்பு: கோவை எஸ் பி மோகன்ராஜ், ஜெயஸ்ரீ விஜய்.

முழுக்க முழுக்க ஒரே இரவில் சென்னை பகுதிகளில் படத்தை படமாக்கியுள்ளார் விஜய்ஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.

பவுடர்

Powder film No Soodu No Soranai song goes viral with 1M views

#POWDER #பவுடர்

#NoSooduNoSoranai Full Video song

@vijaysrig Make up

@leanderleemarty Musical

#VidyaPradeep @onlynikil @im_rajendran @catchAnithra #Vaiyapuri @catchguna @agscinemas @divomovies #SPMohanraj @onlygmedia

#POWDER #பவுடர்

#NoSooduNoSoranai Full Video song out now

https://t.co/LzYZmpKDI8

#நோசூடுநோசொரனை கோழையின் முகவரி

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு வரி விலக்கு கேட்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு வரி விலக்கு கேட்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா நேற்று நள்ளிரவு வரை நடந்தது.

இதில் கமல், ரஜினி உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி கலந்து கொண்டு பேசியதாவது…

“பொன்னியின் செல்வன் அருமையான படைப்பு. மணி சாருக்கு நன்றி.
இப்படியொரு பிரமாண்டமான படைப்பை கொடுத்த லைகா சுபாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள்.

நமது வரலாற்றை, மக்கள் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு. இந்த மாதிரி படங்களை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க சார்பில் கோரிக்கை வைக்கிறோம். இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.”

இவ்வாறு பேசினார்.

Thenandal Murali has requested Chief Minister Stalin

மிச்சம் வைச்ச கமலுக்கு நன்றி.; நீங்களே செஞ்சீட்டீங்கன்னா நாங்கள் என்ன செய்ய? – கார்த்தி

மிச்சம் வைச்ச கமலுக்கு நன்றி.; நீங்களே செஞ்சீட்டீங்கன்னா நாங்கள் என்ன செய்ய? – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது..

“நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. இந்த படம் சாதாரண படமல்ல 70 வருட கனவு.

வரலாற்று புனை கதை என்றால் என்ன? இரண்டு உண்மை சம்பவங்களுக்கு இடையில் இருப்பதை புனையப்பட்டு எழுதுவதுதான் வரலாற்று புனை கதை. உதாரணமாக, மிகப் பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன்.

இது உண்மை. ஆனால், அதை கட்டுவதற்கு எப்படி கட்டினார் என்பதே அவரை அதில் பொறித்து வைத்திருக்கிறார். ஆனால், நாம் கற்பனையாக கூறும்போது, அடிமைகளை வைத்துக் கட்டினார்கள், ஏலியன்களை வைத்துக் கட்டினார்கள் என்று நம் கற்பனைக்குத் தகுந்தவாறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

அப்படித்தான் கல்கியும் இந்த கதையை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். இப்படம் வீரம், துரோகம், அன்பு, ஆன்மீகம், அரசியல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அந்தந்த கதாபாத்திரங்களுடன் வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அது உயர் மின்னழுத்த கம்பி போன்றது. தொட்டால் ஷாக் அடிக்கும். பயந்து பயந்து தான் தொட வேண்டும்.

ஆனால், அது தொடுவதற்கான ஆற்றலும், தைரியமும் தமிழ் பற்று வரும் போது, சினிமா மீது காதல் வரும் போது வருகிறது.

40 வருடங்களாக மணி இப்படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். 80களில் உள்ள கமல் சாரின் பேட்டி ஒன்று இப்போது கிடைத்தது. எண்பதுகளில் நான் இந்த படத்தை தயாரிக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

நீங்கள் மிச்சம் வைத்ததற்கு நன்றி. இந்த படத்தையும் நீங்களே செய்திருந்தால் நாங்கள் என்ன செய்வது?

40 வருடங்களில் பல முறை மணி சார் முயற்சி எடுத்தும் இப்படம் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. ஆனால், இப்போது அனைத்தையும் வரிசைப்படுத்தினால் நாங்களும் மலேசியா சென்றோம். கமல் சார் கூறியதைப்போல எங்களை மொத்தமாக புல்டோசர் வைத்து ஏற்றிவிட்டார். இந்தப் படம் எடுத்ததே ஒரு விஸ்வரூப வெற்றி. அதற்கே முதலில் மணி சாரை பாராட்ட வேண்டும். இந்த மூன்று தலைமுறை கதைகளை கூறுவதற்கும் அவ்வளவு பொறுமை தேவைப்படும். அத்தனை கலைஞர்கள் தேவைப்படுவார்கள். மணி சார் பணியாற்றுவதை பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது. அவர் கூட இருந்தாலே போதும் என்று தோன்றுகிறது.

தோட்டாதரணி மாதிரி அனுபவம் வாய்ந்த, விஷயமறிந்த ஆட்கள் கிடைப்பார்களா என்பது தெரியவில்லை. இந்த தலைமுறையில் பிறந்ததற்கு பெருமைபடுகிறோம். அதை விட இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகப் பெருமையாக இருக்கிறது.

என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி அவர் ஒவ்வொன்றாக விவரித்த விதம் ரொம்ப அழகாக இருந்தது. வந்திய தேவன் ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவான், அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், ஒவ்வொரு காட்சிகளையும் தெளிவாக குறித்து வைத்திருப்பார். நான் என்னதான் புத்தகதை பலமுறை படித்தாலும் அங்கு போய் நிற்கும் போது மணி சார் அதை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்றுதான் பார்க்க தோன்றும். மேக்கப் கலைஞர்கள் இப்படத்திற்காக பிரத்யேகமாகவும் திறமையாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

Àசரத்குமார் சாரை அடையாளமே தெரியவில்லை. ஆயிரம் பேர் இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டார். அவர் கதாபாத்திரத்திற்கு அவர் குண்டாக வேண்டும் தொப்பை வயிறு வேண்டும் என்பதற்காக தினமும் அதிக அளவில் உணவு உண்டு எடையைக் கூட்டினார்.

இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி எதிர்காலத்தைப் பற்றி பேசக்கூடிய சிறந்த நண்பனாக கிடைத்திருக்கிறார்.

தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த இப்படம் இன்று சாத்தியமாக முக்கிய காரணமாக இருந்தது லைகா சுபாஸ்கரன் சார் தான். அவருக்கு ரொம்ப நன்றி.

மேலும், பெண்களைப் பற்றி சொல்லியாக வேண்டும். இப்படத்தில் நடித்த அனைத்து பெண்களும் கடின உழைப்பாளிகள். என்னுடைய ஜீனியூஸ் மனிதரைப் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இங்குதான் நான் நேரில் பார்த்தேன். பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் செய்வது போல ஆளுக்கு ஒரு நோட்டை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். நான் உதவி இயக்குனராக இருந்த போது திரிஷாவிற்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்.

இந்த படத்தில் அவருடன் முதல் முதலில் பணியாற்றுவதில் சந்தோஷமாக இருக்கிறது. ஷோபிதா உடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த மேடைகளில் நிறைய பேசுகிறேன்” என்றார்.

Karthi speech at PS1 trailer Launch

சமந்தாவுடன் என் பயணம் ஓவர்.. இனிமே வாய்ப்பில்ல.. – சிங்கர் சின்மயி

சமந்தாவுடன் என் பயணம் ஓவர்.. இனிமே வாய்ப்பில்ல.. – சிங்கர் சின்மயி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகி & டப்பிங் கலைஞர் என பெயர் பெற்றவர் சின்மயி.

கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. பெண் குழந்தைக்கு த்ரிப்தா மற்றும் ஆண் குழந்தைக்கு ஷர்வாஸ் என பெயரிட்டு இருந்தார்.

இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பார். அதுபோல எதையும் தைரியமாக பேசக் கூடியவர். இதனால் பல சர்ச்சைகளும் அடிக்கடி எழும்.

இவர் நடிகை சமந்தாவுக்கு தெலுங்கில் டப்பிங் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சின்மயி இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது…

“தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன்.

என் பெஸ்ட் ப்ரெண்ட் சமந்தா தனது கேரக்டர்களுக்கு தற்போது அவரே டப்பிங் பேசி வருகிறார்.

எனவே, இனிமே அவருக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது.

இதனால் அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது.” என சின்மயி தெரிவித்துள்ளார்.

சமந்தா

My journey end with Samantha says Singer Chinmayi

More Articles
Follows