ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadaram kondan stillsஇப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

“தீச்சுடர் குனியுமா?
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா?
எரிவா மேலே மேலே”

என ஆரமிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

“கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் சார் பாடிய பாடல் புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்” என ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை கிராமத்து பெண்களுடன் கொண்டாடிய கௌதமி !

மகளிர் தினத்தை கிராமத்து பெண்களுடன் கொண்டாடிய கௌதமி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautamiதன் வாழ்க்கையின் ஒவ்வாெரு நிலையிலும்
ஒரு தாயாகவாே, மனைவியாகவாே, மகளாகவாே, சகோதரியாகவாே, நண்பியாகவாே, தன்னை சுற்றியிருப்பவர் களின் நலனுக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் எந்த ஒரு எதிர்பார்ப்பு-மில்லாமல் செய்பவள் தான் பெண்…

எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய பாேர்க்களமானாலும் தன்னால் அன்பு பாராட்டப்படுபவர்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும் எந்த ஒரு முகச்சுளிப்புமின்றி செய்பவள் தான் பெண்ணெனும் அந்த உண்மையான ஹீரோ.

இந்த சர்வதேச மகளிர் தினத்தை முள்ளி, வளர்பிறை, முன்னுதிகுப்பம், கத்ரிச்சேரி, உளுத்தமங்கலம் பாேன்ற இடங்களின் அந்த அழகான ஹீரோக்களுடன் கொண்டாடுவது எனக்கு பெருமையளிக்கிறது.

தங்களின் ஆற்றலையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் எனக்கு உத்வேகம் அளித்ததற்கு நன்றி.
-கௌதமி

காஞ்சனா 3 படத்தை 2 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடும் லாரன்ஸ்

காஞ்சனா 3 படத்தை 2 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanchana 3எத்தனையோ பேய் படங்கள் ரிலீஸ் ஆனாலும் லாரன்சின் பேய் படங்களுக்கு மவுசு அதிகம் தான்.

முனி படத்தைத் தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா-2 என படங்களை இயக்கி நடித்தார்.

தற்போது காஞ்சனா 3 படத்தையும் இயக்கி நடித்துள்ளார். இதில் வேதிகா மற்றும் ஓவியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் லாரன்ஸ்க்கு நல்ல மார்கெட் உள்ளது.

எனவே காஞ்சனா 3 படத்தை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

மே 1ந்தேதி இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

பிக்பாஸ் ரைசா இருந்தும் ஜிவி. பிரகாஷுக்கு ‘காதலிக்க யாருமில்லை’-யாம்

பிக்பாஸ் ரைசா இருந்தும் ஜிவி. பிரகாஷுக்கு ‘காதலிக்க யாருமில்லை’-யாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (14)தனுஷ் நடிக்கும் அசுரன் படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

ஒரு பக்கம் இசையமைப்பாளராக பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் படங்களில் நாயகனாக அதைவிட பிஸியாகவே வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் காதல் 100 சதவிகிதம், அயங்கரன், அடங்காதே, குப்பத்துராஜா, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி, காதலை தேடி நித்யானந்தா, ரெட்டை கொம்பு உள்ளிட்ட படங்கள் உள்ளன.

தற்போது மற்றொரு படத்திற்கு காதலிக்க யாருமில்லை என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்படதை கமல் பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்க பிக்பாஸ் புகழ் ரைசா நாயகியாக நடிக்கிறார்.

BREAKING ரஜினி-விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனை செலக்ட் செய்த சன் பிக்சர்ஸ்

BREAKING ரஜினி-விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனை செலக்ட் செய்த சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (13)ரஜினிகாந்த் நடித்த எந்திரன், பேட்ட, விஜய் நடித்த சர்கார் ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது. அதன் விவரம் வருமாறு…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படம் மே 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதற்கு அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயனை நாயகனாக சினிமாவில் (மெரினா படத்தில்) அறிமுகப்படுத்தியவரே இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமாக வராதீங்க; பத்திரமாக போங்க.. ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்

வேகமாக வராதீங்க; பத்திரமாக போங்க.. ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayஅட்லி இயக்கத்தில் உருவாகும் தளபதி 63 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏஆர். ரஹ்மான் இசையைமத்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இப்படத்தை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் இதன் சூட்டிங் நடந்து வருகிறது.

விஜய் அங்கு இருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் தினம் தோறும் ஏரளாகமாக கூடி வருகின்றனர்.

அடிக்கடி விஜய்யும் அவர்களை சந்தித்து வருகிறார்.

விஜய் சூட்டிங் முடிந்து செல்லும்போது அவரின் காரை பைக்கில் துரத்தி அவரை கண்டு வருகின்றனர்.

இவர்களை பார்த்து இப்படி வேகமாக வராதீங்க… பத்திரமாக வீட்டுக்கு போங்க என்று கூறி வருகிறாராம்.

More Articles
Follows