தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் வந்து ரஜினியைப் போல் சாதிப்பவர் அஜித்.
மேலும் இவர்களிடையே எளிமை, அமைதி, ஓபன் டாக், வெளித்தோற்ற நம்பிக்கையின்மை என பல விஷயங்கள் ஒற்றுமையாகவே உள்ளன.
இந்நிலையில் இவர்களின் சமீபத்திய படங்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கபாலி படத்தில் இளமையான ரஜினி, வயதான தாடி வைத்த கேங்ஸ்டர் ரஜினி, தாடியில்லாத ரஜினி என பல தோற்றங்களில் அசத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இவை அனைத்துக்கும் காரணம் டிசைனர் அனுவர்தன் என்பவர்தான்.
இவர்தான் அஜித்தின் தல 57 படத்திற்கும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.
அஜித்தின் பில்லா, ஆரம்பம், வேதாளம் ஆகிய படங்களுக்கும் இவரே டிசைனராக பணிபுரிந்து இருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.