ஜோதிகாவுக்கு பைக் ஓட்டக் கற்றுத்தரும் சூர்யா; கணவன்டா..!

ஜோதிகாவுக்கு பைக் ஓட்டக் கற்றுத்தரும் சூர்யா; கணவன்டா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and jyothikaவசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதன்முறையாக இணைந்து ஜோடியாக நடித்தனர் சூர்யா-ஜோதிகா.

இதனைத் தொடர்ந்து காக்க காக்க உள்ளிட்ட படங்களில் நடித்து, தங்களின் காதலை வளர்த்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தில் ரீ-எண்ட்ரி ஆன ஜோதிகா, தற்போது குற்றம் கடிதம் படப்புகழ் பிரம்மா இயக்கும் புதுப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்றுத் தருகிறார் சூர்யா.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

‘என்னையும் நீக்கீடுங்க…’ விஷால்-கார்த்தி மீது ராதிகா சாடல்

‘என்னையும் நீக்கீடுங்க…’ விஷால்-கார்த்தி மீது ராதிகா சாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

radhika sarathkumarநடிகர் சங்க செயற்குழு கூட்டம் அண்மையில் நாசர் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் நிர்வாகிகளான தலைவர் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் சொத்து முறைகேடுகளுக்கு உரிய பதில் தராததால் அவர்கள் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“நடிகர் சங்கத்தில் சூனியக்கார வேட்டை தொடங்கி விட்டது. முதலில் 100 கோடி ஊழல் என்றார்கள்.

தற்போது வேறு தொகையை பற்றி சொல்கிறார்கள். எந்த விளக்கமும் கேட்கப்படமால், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள்.

இப்படியெல்லாம் நான் கேள்வி கேட்பதால் என்னையும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குங்கள்” என விஷால்-கார்த்தியிடம் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு பயந்து ஒதுங்கி கொள்கிறாரா சூர்யா?

பிரச்சினைகளுக்கு பயந்து ஒதுங்கி கொள்கிறாரா சூர்யா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaபுதுப்படங்கள் ரிலீஸ் இல்லாமல் தீபாவளி இனிக்குமா?

எனவே ரசிகர்களுக்கு விருந்தளிக்க தற்போதே அரை டஜன் படங்கள் தயாராக இருக்கின்றன.

சூர்யா நடித்த எஸ் 3 (சிங்கம் 3), கார்த்தி நடித்த காஷ்மோரா, விஷால் நடித்த கத்தி சண்டை, தனுஷ் நடித்த கொடி, ஜிவி. பிரகாஷ் நடித்த கடவுள் இருக்கான் குமாரு மற்றும் விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் ஆகிய படங்கள்தான் அவை.

இதில் சூர்யாவும் கார்த்தியும் அண்ணன்-தம்பி என்பதால் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டால் சரி வருமா? என சூர்யா தரப்பு தயங்குகிறதாம்.

ஒருவேளை ஒரு படத்தின் வெற்றி, மற்ற படத்தை பாதித்தால், அதை ரசிகர்களும் விமர்சகர்களும் வேறு மாதிரியாக ஒப்பிட்டு பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும்.

எனவே, தீபாவளிக்கு பிறகு, நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியிட்டுக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ரஜினி-அஜித்துக்கு பதில் கமல் முந்திக் கொண்டாரோ?

ரஜினி-அஜித்துக்கு பதில் கமல் முந்திக் கொண்டாரோ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassanபிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ஒப்பம் திரைப்படம் அண்மையில் வெளியானது.

சைக்கோ த்ரில்லர் படமான இதில் கண் பார்வையற்றவராக மிக அருமையாக நடித்திருக்கிறார் மோகன்லால்.

எனவே இப்படம் வெளியாகும் முன்னரே ரஜினிக்கு சிறப்பு காட்சியாக இடப்பட்டது.

மேலும் அஜித்துக்கும் இதன் சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து கமலும் இப்படத்தை பார்த்துவிட்டாராம்.

எனவே இயக்குனரையும் நடிகரையும் அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

மேலும் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினியும் அஜித்தும் மௌனம் காத்த நிலையில், கமல் முந்திக் கொண்டார் என்றே தெரிகிறது.

இதன் அதிகாரப்பூர்வ தகவலுக்கு இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்.

வெங்கட் பிரபு தயாரிப்பில் படம் இயக்கும் மிர்ச்சி சிவா

வெங்கட் பிரபு தயாரிப்பில் படம் இயக்கும் மிர்ச்சி சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabu mirchi shivaவெங்கட் பிரபு இயக்கத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ‘சென்னை 28′ படத்தின் 2ஆம் பாகம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது என சற்றுமுன் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜேஷின் கதை ஒன்றை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறாராம்.

இதனை அம்மா க்ரியேஷன்ஸ் சார்பாக டி. சிவா தயாரிக்கிறார்.

இதன்பின்னர் வெங்கட்பிரபு தயாரிப்பில், நடிகர் ‘மிர்ச்சி’ சிவா ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் பிரஸ்மீட்டில் தெரிவித்தனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார்.

இது நல்ல கருத்துள்ள படமாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாகுபலி தேவசேனாவுடன் கனெக்ஷன் ஆன சுந்தர்.சி

பாகுபலி தேவசேனாவுடன் கனெக்ஷன் ஆன சுந்தர்.சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundar cஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர் சி.

இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் மகேஷ் பாபு இருவரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, நான்கு மொழிகளில் தயாராகவுள்ள ஒரு சீரியல் ஒன்றை தயாரிக்கவிருக்கிறாராம் சுந்தர் சி.

மேலும் யுகே செந்தில்குமார், ராஜ்கபூர் மற்றும் செல்வா ஆகியோர் இந்த சீரியலில் பணிபுரிய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த மெகா சீரியலுக்கு தேவசேனா என பெயரிட்டுள்ளனர்.

பாகுபலி படத்தில் அனுஷ்கா கேரக்டரின் பெயர் தேவசேனா என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows