மீண்டும் SR பிரபு தயாரிப்பில் இணைந்த ஜீவா.; டைரக்டர் & ஹீரோயின் யார்.?

மீண்டும் SR பிரபு தயாரிப்பில் இணைந்த ஜீவா.; டைரக்டர் & ஹீரோயின் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’ என ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைகளைக் கொடுப்பதில் முன்னணியாக இருப்பது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தயாரித்து வருகிறது.

தங்களது அடுத்தப் படத்தின் பூஜையை இன்று விமரிசையாக நடத்தியுள்ளது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம். வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகும் இதில் நாயகனாக ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனை டைரக்டர் செல்வராகவன் உதவியாளர் மணிகண்டன் இயக்கவுள்ளார்.

மேலும், நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக சித்தார்த், ஸ்டண்ட் காட்சிகளின் இயக்குநராக மெட்ரோ மகேஷ், ஆடை வடிவமைப்பாளராக சத்யா பணிபுரியவுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது.

இன்று சென்னையில் நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

முன்னதாக பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். இதில் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது.

விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ஜீவா

Jeeva & Potential Studios Join hands again for new project

விஷாலுக்கு வீரவாள்.. பெண்களுக்கு தையல் மெஷின்.; வித்தியாசமான ‘லத்தி’ புரோமோசன்

விஷாலுக்கு வீரவாள்.. பெண்களுக்கு தையல் மெஷின்.; வித்தியாசமான ‘லத்தி’ புரோமோசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘லத்தி’ படத்தை வினோத்குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை நடிகர்களும் விஷாலின் நெருங்கிய நண்பர்களுமான ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர்.

சுனைனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஷால்

வருகிற டிசம்பர் 22ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் சென்னையில் பத்திரியாளர்களை சந்தித்த விஷால் & படக்குழுவினர் தற்போது தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றுள்ளனர்.

விஷால்

சேலத்தில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் விஷால் பங்கேற்று பேசினார்.

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்கு நடுவே விஷால் மக்கள் நல இயக்கத்தினர் ஏழைகளுக்கு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இதில் விஷால் பங்கேற்று ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் & வேஷ்டி சேலைகளை உள்ளிட்டவைகளை வழங்கினார்.

விஷால் மக்கள் நல இயக்கத்தினர் அவருக்கு வெள்ளியிலான வீரவாள் ஒன்றை பரிசாக வழங்கினர்.

விஷால்

Vishals Laththi team doing promotions in different way

—-

.@VishalKOfficial to meet the students in the salem sakthi kailash women’s college 4 #LaththiPromotion

#LaththiFromDec22nd
#Vishalsalemvisit

@RanaProduction0 @nandaa_actor #Ramanaa @U1Records @JprFilms @balasubramaniem @adityamusic @dir_vinothkumar @TheSunainaa @PeterHeinOffl https://t.co/P5LhVm9CGu

———–

.@VishalKOfficial today provided welfare program assistance to the public in Salem district on behalf of #Vishal_Makkal_Nala_iyakkam Fans club.

@HariKr_official @VffVishal @GKReddy @johnsoncinepro @ajay_64403 https://t.co/MwVmbC01lW

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி – கமல் வாழ்த்து

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி – கமல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று கொண்டதற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவில்,

“தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில்,

“வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

rajini kamal wishes for minister udhayanidhi

அரசியலுக்கு வருவேன்..; லெஜெண்ட் சரவணனின் அடுத்த அதிரடி

அரசியலுக்கு வருவேன்..; லெஜெண்ட் சரவணனின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சமீபத்தில் வெளியான ‘லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானது அனைவரும் அறிந்ததே.

பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் ஸ்டூடியோவை திறந்து வைத்த லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்குண்டான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்.

லெஜெண்ட் சரவணன்

இந்த நிகழ்வில் லெஜெண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது…

சினிமாவில் வந்த பிறகு, கதாநாயகர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை அரசியல் தான், உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றும், அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதா? என்றும் கேட்டனர்.

இக்கேள்விக்கு பதில் அளித்த அவர், “மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய லெஜெண்ட் சரவணன், “சென்னையை போலவே கோயம்புத்தூரும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேற்பட்ட ஒருத்தர் தான் பிரைடல் ஸ்டுடியோ நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டு தான் இங்கு வந்தேன்,” என்று கூறினார்.

நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்றும், நூர் முகமது மிகவும் திறமையான கலைஞர் என்றும் லெஜெண்ட் சரவணன் கூறினார்.

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

லெஜெண்ட் சரவணன்

Legend Saravanans Political Entry updates

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவினர் மூன்று பேர் கைது…!

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவினர் மூன்று பேர் கைது…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகியது.

இப்படம் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

படக்குழுவை சேர்ந்த நவீன் குமார், சுபேஸ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தற்போது மூவரையும் ஜாமினில் விடுவித்துள்ளனர்.

Police arrested pichaikkaran 2 movie members

EXCLUSIVE கதாநாயகனாக களமிறங்கும் காமெடி நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி

EXCLUSIVE கதாநாயகனாக களமிறங்கும் காமெடி நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பெயர் பெற்றவர் இயக்குனர் சரவணசக்தி.

இவர் தற்போது மீண்டும் இயக்குனராக தன் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

சரவணா சக்தி இயக்கியுள்ள ‘குலசாமி’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் ஒரு சீரியஸ் கதை எனவும் இதில் விமல் நாயகனாக நடித்துள்ளார் எனவும் நம்மிடம் தெரிவித்தார்.

மேலும் மற்றொரு படத்தில் தானே கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கி இருக்கிறார் சரவணன் சக்தி.

இந்த படத்திற்கு கிளாஸ்மேட் (GLASSMATE) என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் தற்போது சில காட்சிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மயில்சாமி நடிக்கும் காட்சிகளை படமாக்கியவுடன் இந்த படப்பிடிப்பு நிறைவுபெறும் என சரவணா சக்தி நம்மிடம் FILMISTREET தெரிவித்தார்.

Director Saravana shakti is playing hero role

More Articles
Follows