விஜய்-ஜெயம் ரவி கூட்டணியில் சாயீஷா சாய்கல்

விஜய்-ஜெயம் ரவி கூட்டணியில் சாயீஷா சாய்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam ravi vijay movie poojaஇன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் திரையுலகை சேர்ந்த பலரும் தங்கள் படம் தொடர்பான ஏதாவது ஒன்றை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முறையாக ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்தை இயக்குனர் விஜய் இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இதில் நாயகியாக அறிமுகமாகிறார் சாயீஷா சாய்கல்.

அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் இன்று ஆரம்பமானது.

‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் ஐந்தாம் படைப்பாக இப்படம் உருவாகிறது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு), இயக்குனர் மோகன் ராஜா, படத்தின் கதாநாயகி சாயீஷா சாய்கல் (அறிமுகம்), எடிட்டர் மோகன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் ஏ எல் அழகப்பன் மற்றும் குடும்பத்தினர், தம்பி ராமையா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, மாநில விருது பெற்ற புரொடக்ஷன் டிசைனர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தல-தளபதிக்கு விட்டுக் கொடுத்து தன் தலைப்பை மாற்றிய லாரன்ஸ்

தல-தளபதிக்கு விட்டுக் கொடுத்து தன் தலைப்பை மாற்றிய லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrenceஇணையத்தில் வெளியானால் என்ன? எப்படி வந்தால் என்ன? தங்களுக்கு மகிழ்ச்சிதான், என பைரவா படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தலைப்பை தன் படத்திற்கு ராகவா லாரன்ஸ் ரிஜிஸ்ட்டர் செய்து வைத்திருந்தாராம்.

ஆனால் விஜய் படக்குழுவினர் கேட்கவும் மறுப்பு சொல்லாமல் தலைப்பை தற்போது விட்டுக் கொடுத்துள்ளார்.

மேலும் தன் படத்தலைப்பை கால பைரவா என மாற்றம் செய்யப் போகிறாராம்.

தற்போது நடித்துவரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தையடுத்து கால பைரவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இதற்கு முன்பு, அஜித்தின் வேதாளம் படத்தின் தலைப்பையும் ராகவா லாரன்ஸ் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பைரவா பர்ஸ்ட் லுக்கை தியேட்டரில் ஃப்ரீயா பார்க்கனுமா?

பைரவா பர்ஸ்ட் லுக்கை தியேட்டரில் ஃப்ரீயா பார்க்கனுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bairavaaஎவரும் எதிர்பாராத வகையில் சற்றுமுன் விஜய் 60வது படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக்கானது.

பைரவா என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ராம் சினிமாஸ் நிறுவனம் இந்த பர்ஸ்ட் லுக்குடன் விஜய்யின் வீடியோ பதிவு ஒன்றையும் திரையிட உள்ளனர்.

இன்று இரவு 9 மணிக்கு இதை இலவசமாக தியேட்டரில் கண்டுகளிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு முன்பு இரவு 12 மணிக்கு இதை திரையிடவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தளபதி 60’ பர்ஸ்ட் லுக் தலைப்புடன் வெளியானது

‘தளபதி 60’ பர்ஸ்ட் லுக் தலைப்புடன் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaaபரதன் இயக்கத்தில் நாகிரெட்டி நிறுவனத்தின்ர் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கும் நிமிடத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்தனர்.

ஆனால் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக்காகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றாலும், தற்போது இதுவே டிரெண்டாகி விட்டது.

இப் படத்திற்கு பைரவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த வருடம் 2017ஆல் ஜனவரியில் வெளியாக உள்ளது.

போஸ்டர்கள் பிரிண்ட் செய்யும் அச்சகத்தில் இருந்து இவை கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த புலி படத்தின் டீசரும் சொன்ன தேதிக்கு முன்பாகவே ஆன்லைனில் லீக்கானது குறிப்பிடத்தக்கது.

bairavaa 1st look

விநாயகர் சதுர்த்தியன்று டபுள் ட்ரீட் தரும் ரெமோ

விநாயகர் சதுர்த்தியன்று டபுள் ட்ரீட் தரும் ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo stills sivakarthikeyan keerthyசிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழக சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படமாக உருவெடுத்துள்ளது ரெமோ.

இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்துள்ளதாலும்.. 24 ஏஎம் ஸ்டூடியோஸின் வித்தியாசமான விளம்பரங்களாலும் அனைவருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்களை வருகிற 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட இருப்பதை முன்பே படித்தோம்.

மிகச்சரியாக செப்டம்பர் 5ஆம் தேதி பிறக்கும் 12.00 மணிக்கு இணையத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

மேலும் அன்றைய தினமே மாலை 5 மணிக்கு Come Closer என்ற ஆங்கில பாடலின் வீடியோவும் மற்றும் மற்ற பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட உள்ளதாக சோனி மியூசிக் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஒரு நிமிடத்தில் ‘தளபதி’யை முந்தும் ‘ரெமோ’

ஒரு நிமிடத்தில் ‘தளபதி’யை முந்தும் ‘ரெமோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sivakarthikeyanவிநாயகர் சதுர்த்தி மிகவும் விசேஷமான நாள் என்பதால், அன்றைய தினம் திரையுலகில் நிறைய நல்ல காரியங்களை தொடங்கவுள்ளனர்.

அன்றைய நாள் தொடங்கும் நிமிடத்தில் (12.01 மணிக்கு) விஜய் நடித்துள்ள 60வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட இருக்கின்றனர்.

இதே நாளில்தான் ரெமோ படத்தின் பாடல்களையும் வெளியிட இருப்பதை முன்பே அறிவித்தனர்.

இந்நிலையில் இப்பாடல்களை மிகச்சரியாக 12.00 மணிக்கு வெளியிட இருப்பதாக சற்றுமுன் சோனி மியூசிக் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.

More Articles
Follows