தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் நள்ளிரவு 1 மணி காட்சி அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சியின் போது நடந்த அசம்பாவிதங்கள் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே எந்த புது படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை.
தற்போது இதே நடைமுறை தான் ‘ஜெயிலர்’ படத்திற்கும் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் காட்சிகள் 8 மணி 9 மணி அளவில் தான் தொடங்குகின்றன.
ஆனால் கேரளா கர்நாடகா ஆந்திராவில் அதிகாலை 6:00 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெய்லர் ரிலீஸ் அன்று 345 காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
இதனிடையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி புதன்கிழமை ‘ஜெயிலர்’ ரிலீஸ்க்கு முன் ஒரு நாள் முன்னதாக ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Jailer First day all shows full Rajini visits Himalayas













