*இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு* படத்துடன் மோதும் *சீமத்துரை*

*இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு* படத்துடன் மோதும் *சீமத்துரை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ivanukku Engeyo Macham Irukku movie clash with Seemathuraiரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் ரிலீஸ் இந்த வாரம் இருந்ததால், மற்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது வருகிற டிசம்பர் 7ஆம் தேதி இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு மற்றும் சீமத்துரை ஆகிய 2 படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் இதோ….

சாய் புரொடக்சன் நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சரவணன் தயாரித்துள்ள படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“.

இதில் விமல், ஆஷ்னா சாவேரி, ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடித்துள்ளனர்.

ஆங்கில நடிகை “மியா ராய்“ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தை முகேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

சீமத்துரை படத்தில் கீதன் நாயகனாகவும், வர்ஷா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார்.

’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர்.

ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன், தயாரிப்பு புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா, இணை தயாரிப்பு ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்

Ivanukku Engeyo Macham Irukku movie clash with Seemathurai

ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்சம் செலவில் வீடு கட்டும் லாரன்ஸ்

ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்சம் செலவில் வீடு கட்டும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழை குடிமகனாக வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி கணேசன்.

அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை. ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர் இந்த கணேசன்.

இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவர் கணேசன்..

கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்தவர் இவர்.

இந்த இரக்கமுள்ளவரின் வீட்டையும் இரக்கமில்லாமல் கஜா காவு வாங்கி விட. அதையும் பொருட்படுத்தாமல் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய் விட்டார்.

இதை கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ் அந்த வீட்டை நேரில் போய் பார்த்து உடனடியாக புதிய வீட்டை கட்டிக் கொடுக்க முடிவெடுத்து அதற்கான பூமி பூஜையை இன்று துவக்கி வைத்துள்ளார்.

சாதாரண வீடு மாதிரி இல்லாமல் எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும்…வீட்டுக்கு அவர் போனால் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பாத்திரங்கள் கட்டில் பீரோ மின் விசிறி ஏ.சி.என்று வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. வீடு கட்ட சுமார் 7.50 லட்ச ரூபாய்க்கு மேலே ஆகும் மற்ற செலவுகளுக்கு 2.50 லடசம் செலவு ஆகும் மொத்தம் பத்து லட்சம் ஆகலாம் என்றாலும் பரவாயில்லை…..

எனென்றால் அவரை என் அப்பா ஸ்தானத்தில் பார்க்கிறேன்” என்கிறார் ராகவா லாரன்ஸ்

தேவ் படத்தை தொடர்ந்து மாநகரம் இயக்குனருடன் இணையும் கார்த்தி

தேவ் படத்தை தொடர்ந்து மாநகரம் இயக்குனருடன் இணையும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Dev movie Karthi team up with Maanagaram directorலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டான படம் ‘மாநகரம்’.

இதில் சந்தீப் கி‌ஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

‘மாநகரம்’ படத்தை அடுத்து அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.

After Dev movie Karthi team up with Maanagaram director

After Dev movie Karthi team up with Maanagaram director

அரசியல்வாதிகளே நாட்டின் பேரிடர்.; கஜா பகுதியில் கடுப்பான கமல்

அரசியல்வாதிகளே நாட்டின் பேரிடர்.; கஜா பகுதியில் கடுப்பான கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MNM Party leader Actor Kamal slams TN Govt in Gaja Cyclone relief workஇரண்டு வாரங்களுக்கு முன்பு நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

15 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் நிவாரணப் பணிகள் முடிந்தபாடில்லை.

இந்நிலையில் 2வது முறையாக கஜா பாதித்த பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன்பின்னர் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள 7 பதிவுகள் இதோ….

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு “நல்ல சோறு” போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் “புழுத்துப்போன அரிசியை” சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும். (2/6)

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் “கிராம நிர்வாக அதிகாரிகள்” கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும் அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது”. (3/6)

வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. (4/6)

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம். (5/6)

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும். (6/6)

கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

MNM Party leader Actor Kamal slams TN Govt in Gaja Cyclone relief work

MNM Party leader Actor Kamal slams TN Govt in Gaja Cyclone relief work

மேகா ஆகாஷை தடவி எடுக்கும் சிம்பு.; கட் சொல்லாத சுந்தர்.சி

மேகா ஆகாஷை தடவி எடுக்கும் சிம்பு.; கட் சொல்லாத சுந்தர்.சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus Vantha Rajava Than Varuven Teaser goes viralலைகா தயாரிப்பில் சிம்பு நடித்து வரும் படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை 2019 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

இதில் சிம்பு உடன் மஹத், மேஹா ஆகாஷ், கேத்ரின் தெரசா, நாசர், ரம்யா கிருஷ்ணன், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 2 நிமிடம் 9 நொடிகள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசரை சற்றுமுன் வெளியிட்டனர்.

என்னை நம்பி கெட்டவங்க யாருமில்ல. ஆனா, நம்பாம கெட்டவங்க நிறைய பேர்” என்ற டயலாக்குடன் ஆரம்பிக்கிறது.

இதில் செம ஸ்டைலிசான கெட்டப்பில் இருக்கிறார் சிம்பு. மேலும் டைரக்டர் சுந்தர் சி படத்திற்கு உரிய குடும்ப காலாட்டாக்களுடன் டீசர் உள்ளது.

சிம்பு ரசிகர்களை கவரும் வகையில் காதல் பற்றிய டயலாக்குகளும் உள்ளன. எனக்குத் தான் காதலி யாருமே இல்லையே என்கிறார்.

இறுதியாக டீசர் முடிந்தவுடன் சில நொடிகள் நாயகி மேகா ஆகாஷை கட்டித் தடவி கொண்டே இருக்கிறார். டைரக்டர் கட் சொல்ல மாட்டாரா.? என சிம்புவே கேட்பது போல முடிவடைகிறது.

Simbus Vantha Rajava Than Varuven Teaser goes viral

 

மரண மாஸ்; தலைவர் குத்து… டிரெண்ட்டாகும் *பேட்ட* ரஜினி

மரண மாஸ்; தலைவர் குத்து… டிரெண்ட்டாகும் *பேட்ட* ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marana Mass Thalaivar Kuthu Rajinis Petta poster goes viralரஜினிகாந்த் நடித்த 2.0 படம் நேற்று முன் தினம் வெளியானது.

அந்த பரபரப்பு அடங்கவே இன்னும் சில நாட்கள் ஆகும் என்ற நிலையில் ரஜினி ரசிகர்களை இன்னும் குஷியாக்க பேட்ட பட போஸ்டர் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள பேட்ட படத்தின் முதல் பாடலை டிசம்பர் 3ஆம் தேதியும் 2ஆம் பாடலை 7ஆம் தேதியும் வெளியிட உள்ளனர்.

மற்ற பாடல்கள் அனைத்தையும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான பேட்ட போஸ்டரில் சிங்கிள் ட்ராக் குறித்த விஷயம் வெளியாகியுள்ளது.

அதில் மரண மாஸ் என்பது பாடல் வரிகளாகும். இது தலைவரின் குத்து என்று விளக்கம் அளித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிள்ளார்.

இதில் ரஜினியுடன் சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Marana Mass Thalaivar Kuthu Rajinis Petta poster goes viral

More Articles
Follows