விமல்-ஆஷ்னா ஷாவேரி நடிக்கும் *இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு*

விமல்-ஆஷ்னா ஷாவேரி நடிக்கும் *இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vimal and Ashna Zaveri starring Ivanukku Engeyo Macham Irukku news updatesAR.முகேஷ் இயக்குகிறார் விமல் ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கும் படத்திற்கு “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை சாய் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சர்மிளா மாண்ரே கன்னட பட உலகின் பிரபல நடிகை.

கன்னடத்தில் உள்ள பிரபல நடிகர்கள் அனைவருடனும் சுமார் 40 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தயாரிப்பாளரான சர்மிளா மாண்ரேவை முதன் முதலாக கதா நாயகியாக கன்னடத்தில் அறிமுகப்படுத்தியவர் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் இயக்குனர் AR முகேஷ்.

இப்போது சர்மிளா மாண்ரே முதன் முதலாக தயாரிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பை தன்னை நடிகையாக அறிமுகப் படுத்திய இயக்குனருக்கு அளித்திருப்பது அவரது நன்றிக்கனின் வெளிப்பாடு.

விமல் கதா நாயகனாக நடிக்கிறார். ஆஷ்னா சவேரி நாயகியாக நடிக்கிறார்.

மற்றும் ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல்ராஜா ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – AR.முகேஷ்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது…

இது கிளாமர் மற்றும் ஹுயூமர் படமாக உருவாகி வருகிறது..முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் பற்று நாட்கள் நடை பெற்றது.

இப்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஜாலியான ஒரு பொழுது போக்கு அரங்குக்குள் நுழைந்த அனுபவத்தை உணர்வார்கள்.

எல்லா தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – கோபி / இசை – நட்ராஜ் சங்கரன்
பாடல்கள் – விவேகா / கலை – வைரபாலன்
நடனம் – கந்தாஸ்
சண்டை பயிற்சி – ரமேஷ்
எடிட்டிங் – தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி
தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, R.சாவண்ட்
திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – AR.முகேஷ்.

இவர் “இன்று முதல் ” ஆயுதம், கன்னடத்தில் சஜினி மற்றும் ஜோக்கர் என்கிற ஹாலிவுட் படங்களை இயக்கியவர்.

Vimal and Ashna Zaveri starring Ivanukku Engeyo Macham Irukku news updates

Ivanukku Engeyo Macham Irukku

 

கடைக்குட்டி சிங்கம் மாபெரும் வெற்றி: கார்த்தியை வாழ்த்திய சக்திவேல்

கடைக்குட்டி சிங்கம் மாபெரும் வெற்றி: கார்த்தியை வாழ்த்திய சக்திவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sakthivel Overjoyed Gesture To Karthi For Kadaikutty Singam Success2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சூர்யா வழங்கும், கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ”கடைக்குட்டி சிங்கம்“.

இப்படம் கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வெளியாகி குடும்பங்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவோடு அனைத்து சென்டர்களிலும் வெற்றிநடை போட்டுவருகிறது.

வெகுநாட்களுக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக இப்படம் வந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று ஓடி வருகிறது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் விநியோகஸ்தகர் “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல் வெற்றியை தந்துள்ள நாயகன் கார்த்தியை சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளிவருவது குறிப்பிடத்தக்கது.

Sakthivel Overjoyed Gesture To Karthi For Kadaikutty Singam Success

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ ட்ரைலர்; விமானத்தை டூவிலரில் தோற்கடித்த எம்ஜிஆர்

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ ட்ரைலர்; விமானத்தை டூவிலரில் தோற்கடித்த எம்ஜிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabu devaஎம்.ஜி.ஆர், லதா, மஞ்சுளா, நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் 1972ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’உலகம் சுற்றும் வாலிபன்’.

இதன் இரண்டாம் பாகமாக ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்கிற படத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார் எம்.ஜி.ஆர்.

ஆனால் எம்.ஜி.ஆர், அரசியலில் தீவிரமாக இறங்கி முதலமைச்சராக ஆனதால் அந்த படம் கை விடப்பட்டது!

தற்போது எம்.ஜிஆரின் கனவை நிறைவேற்றும் விதத்தில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் படமாக உருவாகி உள்ளது.

இதில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை அருள் மூர்த்தி இயக்கியிருக்கிறார், பிரபு தேவா – ஐசரி கணேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் உலக எம்.ஜி.ஆர் பேரவை சார்பில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்த மிகப் பெரிய மாநாட்டில், ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடந்தது.

கல்வியாளர் மற்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம் இருவரும் இசைத்தகட்டினை வெளியிட, பிரபுதேவாவும், இயக்குநர் விஜய்யும் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசும்போது படத்தை பற்றியும், எம்.ஜி.ஆர். அவர்களை பற்றியும் பேசினார்கள்.

“இந்த படம் உருவாக மிக முக்கிய காரணம் இரண்டு பேர்தான். ஒன்று எம்.ஜி.ஆர். அவர்தான் இப்படி ஒரு சிறப்பான தலைப்பை கொடுத்தவர். இன்னொருவர் எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ்.

அவர் கொடுத்த முழு சுதந்திரம்தான் இந்த படம் இந்த அளவுக்கு வர காரணம். எந்த தலையீடும் இல்லாமல் அவர் அளித்த சுதந்திரமும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானது.

வைரமுத்து சாரின் வரிகளும், இமானின் இசையும் படத்துக்கு பெரிய பலம். படம் மிக சிறப்பாக வரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்றார் இயக்குநர் அருள் மூர்த்தி.

Animation MGR Jayalalitha starring Kizhakku Africavil Raju Teaser launch event

விழாவில் பிரபுதேவா பேசுகையில்..

“எம்ஜிஆரின் ஸ்டைல், அவருடைய ட்ரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் என் அம்மாவுடன் அவர் படத்தை ரசித்து பார்த்த நினைவுகள் வருகின்றன.

என் அப்பா, எம்.ஜி.ஆருக்கு 4 படங்களில் நடனம் அமைத்திருக்கிறார். பள்ளி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்து மெய் மறந்தேன்” என்றார்.

விழாவில் ஐசரி கணேஷ், சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் கொல்லங்குடி கருப்பாயி பாடல் பாடிய இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. ஆர்.ஜே. விஜய் இசை விழாவை தொகுத்து வழங்கினார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ பட ட்ரைலர் இதோ…

Animation MGR Jayalalitha starring Kizhakku Africavil Raju Teaser launch event

நடிச்சு சாகடிக்காதீங்க.; திறமையான இயக்குனர்களிடம் கெஞ்சும் சித்தார்த்

நடிச்சு சாகடிக்காதீங்க.; திறமையான இயக்குனர்களிடம் கெஞ்சும் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dont Kill us by your acting Siddharth request to Tamil Directorsராம் இயக்கத்தில், மம்மூட்டி, அஞ்சலி, சாதனா நடித்துள்ள படம் பேரன்பு.

இப்படத்தை பி.எல். தேனப்பன் தயாரிக்க, யுவன் இசையமைத்துள்ளார்.

இப்பட இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

விழாவில் நடிகர் சித்தார்த் பங்கேற்றார். அவர் பேசியதவாது…

இந்த நிகழ்ச்சிக்கு மிஷ்கின், அமீர், சமுத்திரகனி உள்ளிட்ட பல இயக்குநர்கள் வந்துள்ளனர்.

இவர்களிடம் 10 ஆண்டுக்கு முன்னரே நான் நடிக்க வாய்ப்பு கேட்டிருப்பேன். ஆனால் இப்போது அவர்கள் எல்லோரும் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள்.

எங்களுக்கு வாய்ப்பு வருவதில்லை. இந்தநேரத்தில் ஒன்றை கூற நினைக்கிறேன்.

திறமைவாய்ந்த் இயக்குநர்கள் எல்லாம் இனி நடிக்க வராமல் படங்கள் மட்டும் இயக்குங்கள்.” என பேசினார்.

Dont Kill us by your acting Siddharth request to Tamil Directors

சர்கார் பட செட்டில் லேடியாக யோகி பாபு; வைரலாகும் வீடியோ

சர்கார் பட செட்டில் லேடியாக யோகி பாபு; வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Yogi Babus Sarkar getup video goes viral

விஜய் நடித்து வரும் `சர்கார்’ பட சூட்டிங் சென்னை, ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது.

முருகதாஸ் இயக்கிவரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோவை வரலட்சுமி வெளியிட்டுள்ளார்.

அதில் யோகி பாபு லேடி கெட் அப்பில் இருக்கிறார். ஒரு கை அவரது கன்னத்தை கிள்ளுகிறது.

கிள்ளும் அந்த நபர் யார் என்று கண்டுபிடிங்கள் என்று அந்த பதிவில் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comedy Actor Yogi Babus Sarkar getup video goes viral

கோச்சடையான் விவகாரத்தில் லதா ரஜினிக்கு சம்பந்தமில்லை; தயாரிப்பு நிறுவனம் தகவல்

கோச்சடையான் விவகாரத்தில் லதா ரஜினிக்கு சம்பந்தமில்லை; தயாரிப்பு நிறுவனம் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Global Media clarifies there is no connection for Latha Rajini in Kochadaiyaan issueரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டயின்ட்மென்ட் நிறுவனம், ஆட் ப்யூரோ என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றது.

இந்த கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆட் பியூரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடனை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் உத்தரவாத கையெழுத்திட்ட லதா ரஜினி திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் அந்த நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்…

மீடியாஒன் குளோபல் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனம், திருமதி. லதா ரஜினிகாந்த் மற்றும் அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான சர்ச்சைகள் பற்றி ஊடகங்களில் பல தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகள் வெளியாவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த சர்ச்சைகள் அனைத்தும் மீடியாஒன் குளோபல் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் (MOU) மூலம் தொடங்கியது.

அந்த உடன்படிக்கைகளின் படி அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திடமிருந்து கடன் தொகையாக ரூ. 20 கோடி மீடியாஒன் நிறுவனம் பெற்று கொண்டது.

சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் நடித்த, ‘கோச்சடையான்’ திரைப்படத்திற்கான Post-production பணிகளுக்காக அத்தொகை கடனாக வாங்கியது மீடியாஒன் நிறுவனம். மேலே கூறப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் கீழ் திருமதி. லதா ரஜினிகாந்த் உறுப்பினர் இல்லை.

மேலும் இந்த உடன்படிக்கைகளின் படி அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கு ’கோச்சடையான்’ திரைப்படத்தை தமிழ் நாட்டில் மட்டும் விநியோகிப்பதற்கான முழு உரிமையும், உடன் குறைந்தபட்ச உத்திரவாத லாபத்தை கடன் தொகைக்கு ஈடாக எடுத்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

உடன்படிக்கைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட ரூ. 20 கோடியில் ரூ.10 கோடி மட்டுமே முன்பணமாக கொடுத்தது அட்-ப்யூரோ நிறுவனம். இதன் காரணமாக ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியாவதில் பல வாரங்கள் தாமதமானது.

இன்றைய தேதிபடி மீடியாஒன் நிறுவனம் ரூ. 10 கோடி கடன் தொகையில், ரூ.9.2 கோடி உடன்படிக்கைகளின் படி சரிவர கட்டியுள்ளது. மேலும் ரூ. 80 லட்சத்தை உடன்படிக்கைகளின் படி கட்ட முடிக்கவும் உறுதியாய் உள்ளது.

உடன்படிக்கைகளின் ஒப்பந்த மீறலாய், அட்-ப்யூரோ நிறுவனம் கடிதம் வழி கடந்த 11.11.2014 அன்று கோரியது. மீடியாஒன் நிறுவனம் மொத்த தொகையாக ரூ. 10 கோடியும், வட்டியாக ரூ.4.30 கோடியும், 6 மாத கால கணக்கின்படி, ஓராண்டிற்க்கான 80% வட்டி விகிதத்தை கட்டுமாறு கோரப்பட்டது.

இது உடன்படிக்கைகளின் கீழ் ஒவ்வாத கோரிக்கை மட்டுமின்றி Tamilnadu state law against prohibition of collecting exorbitant interests படி விதிமீறலாகும். இது தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை FIR No.: 1743185 விசாரணையில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அட்-ப்யூரோ நிறுவனம், மீடியாஒன் நிறுவனம் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளது.

மேலும் அட்-ப்யூரோ நிறுவனம் பொது வழக்குகளை தொடர்ந்துள்ளது. மேலும் மீடியாஒன் நிறுவனம் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் மீது பொய்யாய் புனையப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் புகார் கொடுத்துள்ளது.

திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் மீடியாஒன் குளோபல் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரரோ நிர்வாக இயக்குனரோ இல்லை.

மேலும் அட்-ப்யூரோ நிறுவனத்தின் கோரிக்கைக்கு மீடியாஒன் நிறுவனம் மட்டுமே பொறுப்பாகும் என்பது தெளிவுப்படுத்தபடுகிறது. மீடியாஒன் நிறுவனம் விவகாரங்களில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லை.

மேலும் அட்-ப்யூரோ நிறுவனத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேல் குறிப்பிட்டுள்ளபடி, மீடியாஒன் நிறுவனம் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களின் நற்பெயருக்கு அவதூறு விளைவிக்கவும், பணம் பறிக்கவும் அட்-ப்யூரோ நிறுவனம் இத்தகைய செயல்களில் ஈடுப்பட்டு வருவது தெளிவாகிறது..” என தெரிவித்துள்ளனர்.

Global Media clarifies there is no connection for Latha Rajini in Kochadaiyaan issue

More Articles
Follows