BREAKING கத்தி-லுங்கியுடன் விஜய்; பிகில் ரிலீஸ் பற்றி முக்கிய அறிவிப்பு

BREAKING கத்தி-லுங்கியுடன் விஜய்; பிகில் ரிலீஸ் பற்றி முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Important announcement about Bigil release and Censor updatesஅட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் பிகில்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

வருகிற செப். 19ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில்… பிகில் படம் சென்சாருக்கு சென்ற பிறகு ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

அதுவரை இப்படம் குறித்து வெளியாகும் ரிலீஸ் தேதி மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு புதிய போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதில் கையில் கத்தி பிடித்தப்படி லுங்கி அணிந்தபடி உள்ளார் தளபதி.

Important announcement about Bigil release and Censor updates

‘தளபதி 64’ படத்தில் விஜய்யுடன் இணையும் ரஜினி தங்கை?

‘தளபதி 64’ படத்தில் விஜய்யுடன் இணையும் ரஜினி தங்கை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malavika Mohanan likely to join with Vijay in Thalapathy 64விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் வெளியாகிறது.

இந்தாண்டு தீபாவளி விருந்தாக படத்தை வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இதன் முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த அக்டோபரில் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் நாயகி யார்? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் படத்தின் முக்கிய கேரக்டரில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர் பேட்ட படத்தில் ரஜினியின் தங்கை (அதாவது சசிகுமாரின் மனைவி) ஆக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan likely to join with Vijay in Thalapathy 64

மாபியா கும்பலை பிடிக்க ஆக்சனில் இறங்கிய மீனா

மாபியா கும்பலை பிடிக்க ஆக்சனில் இறங்கிய மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஹீரோ/ஹீரோயினாக ஜொலித்திருக்கிறார்கள்.

கமல், ஸ்ரீதேவி, மீனா இவர்களைப் போன்றவர்களை தவிர்த்துவிட்டு அந்த பட்டியலை இட முடியாது.

இதில் ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்தியாவின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் மீனா.

தற்போது இவரின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் ஹாலிவுட் பாணியில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார் மீனா.

கரோலின் காமாட்சி என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த வெப் சீரிசை பாலாவின் உதவியாளர் விவேக்குமார் கண்ணன் இயக்கியுள்ளார்.

ஒரு பயங்கரமான மாபியா கும்பலை பிடிக்கும் இரண்டு அதிரடி பெண் கமாண்டோக்களின் கதையாம் இது.

இதில் மீனாவும், இத்தாலி மாடல் அழகி ஜியோர்ஜியா ஆண்ட்ரியானியும் நடிக்கிறார்கள்.

இந்த காமெடி கலந்த ஆக்ஷன் தொடர். விரைவில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது

நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படம் கொரியன் பட ரீமேக்..?

நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படம் கொரியன் பட ரீமேக்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)‘நெற்றிக்கண்’ என்ற படத்தின் மூலம் தன் காதலன் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறார் நயன்தாரா.

இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பட சூட்டிங்கை உடனடியாக ஆரம்பித்துள்னர்.

அவள் படத்தை இயக்கிய மிலண்ட் ராவ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில் 2011ம் ஆண்டு வெளிவந்த கொரியன் படமான ‘பிளைண்ட்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் நெற்றிக்கண் என்ற தகவல்கள் வந்துள்ளன.

பார்வை திறனற்ற ஒரு பெண், ஒரு கொலை வழக்கை புத்திசாலித்தனமாக விசாரணை செய்வதுதான் படத்தின் கதையாம்.

ஆன் சாங் ஹுன் இயக்கியிருந்த இப்படத்தில் கிம் ஹாநீல் நாயகியாக நடித்திருந்தார். மேலும் அவர் அந்த படத்திற்காக இரண்டு விருதுகளைப் பெற்றிருந்தார்.

ரஜினி-தனுஷ் வழியில் ஆங்கில படத்தில் சம்பத் ராம்.

ரஜினி-தனுஷ் வழியில் ஆங்கில படத்தில் சம்பத் ராம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ரஜினியுடன் கபாலி, கமலுடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் மற்றும் விஜய், அஜித் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளவர் சம்பத் ராம்.

கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறாராம் இவர்.

இந்த நிலையில் முதன் முறையாக ‛பியர்ல் இன் தி பிளட்’ என்ற ஆங்கில படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

செவன் ஹில்ஸ் பிக்சர்ஸ் சார்பில் கனடா வாழ் தமிழரான கென் கெண்டையா தயாரித்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

எம்.எஸ்.சதீஷ் / ஜெயந்தி சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய சேன்சூ லட்சுமி இசையமைத்துள்ளார்.

கனடாவிலும், தமிழ்நாட்டிலும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

தமிழ் சினிமாவில் ரஜினி, தனுஷ் உள்ளிட்டோர் ஆங்கில படத்தில் நடித்துள்ளனர். தற்போது அவர்கள் வரிசையில் இணைந்துள்ள சம்பத் ராம் அவர்களையும் வாழ்த்துவோம்.

‘CM-கேப்மாரி’; விஜய் தந்தை எஸ்ஏசி-க்கு ஆர்.கே.செல்வமணி கண்டனம்

‘CM-கேப்மாரி’; விஜய் தந்தை எஸ்ஏசி-க்கு ஆர்.கே.செல்வமணி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசென்னைக்கு மிக அருகிலுள்ள பையனூரில் எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துடன் திரைப்பட தொழிலாளர்களுக்கான குடியிருப்பும் கட்டப்படுகிறது.

அதாவது ஒரு சினிமா உருவாக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த நகரத்தில் இருக்கும்.

இதே நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்பு அரங்கம் கட்டுவதற்கு 5 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இதன்படி ஒரு கோடி ரூபாயை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெப்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது…

தமிழக அரசும், முதல்வரும் திரைப்படத்துறைக்கு நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ‛சி.எம்.கேப்மாரி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார்.

இதற்கு எங்கள் கண்டத்தை தெரிவிக்கிறோம். அவர் பட டைட்டிலை மாற்ற வேண்டும்.

அதுபோல் தமிழர்களுக்கு எதிராக பேசி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அவருக்கும் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் அதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

More Articles
Follows