தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் படம் ‘லால் சலாம்’.
இதில் விஷ்ணு விஷால் & விக்ராந்த் கதை நயாகர்களாக நடிக்க ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவரின் தங்கையாக முன்னாள் நடிகை ஜீவிதா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவலை பார்த்தோம்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த முன்னாள் கிரிக்கெட் வீர கபில்தேவ் உடன் இணைந்து நடிப்பது குறித்து நடிகர் ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
“முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகவும், கவுரவுமாகவும் கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!
#lalsalaam
#therealkapildev
I feel proud to work with Kapil Dev says Rajinikanth











