‘காலா’வுக்கு பிறகு காணாமல் போன ஹூமா குரேஷி..; ‘வலிமை’ கைகொடுக்குமா..?

‘காலா’வுக்கு பிறகு காணாமல் போன ஹூமா குரேஷி..; ‘வலிமை’ கைகொடுக்குமா..?

அஜித் நடித்துள்ள வலிமை படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும்,

போனிகபூர் தயாரிக்க யுவன் இசையமைத்துள்ள வலிமை படம் அடுத்த வாரம் பிப்ரவரி, 24ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் ரிலீசாகவுள்ளது.

காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி நாயகியாக நடித்துள்ளார்.

இவர் முன்னணி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் காலா மற்றும் வலிமை படங்களில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

அதில்…

‛‛வலிமை படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் உள்ள பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

அஜித் உடன் நடித்தாலும் அவருடன் டூயட் இல்லை.

காலா படத்திற்கு பிறகு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை. வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்.” என்றார்.

Huma Qureshi talks about her role in Valimai

நடிகர் சரவணசக்தி இயக்கத்தில் இணைந்த விமல் & விஜய்சேதுபதி பட அப்டேட்

நடிகர் சரவணசக்தி இயக்கத்தில் இணைந்த விமல் & விஜய்சேதுபதி பட அப்டேட்

கடந்த பிப்ரவரி 18ல் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடித்த ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரிலீசானது.

படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளது. எனவே இந்த படத்தை பிரசாந்த் & விமலின் கம்பேக் (COME BACK) எனலாம்.

இதனையடுத்து விமல் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார் விமல்.

‘குலசாமி’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்திற்காக வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. எனவே போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கியுள்ளன.

Vimal and Vijay Sethupathi come together for a new film

ஃபேமிலிமேன் மாநாடு வரல.. 3 ஹீரோயினை இணைக்க முடியல.. அப்பாவின் பென்சன் பணத்தில் படம்..; FIR சக்ஸஸ் விழாவில் விஷ்ணு விஷால் கவலை

ஃபேமிலிமேன் மாநாடு வரல.. 3 ஹீரோயினை இணைக்க முடியல.. அப்பாவின் பென்சன் பணத்தில் படம்..; FIR சக்ஸஸ் விழாவில் விஷ்ணு விஷால் கவலை

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது.

இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரிடத்திலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது, இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி அவர்கள் தயாரிப்பாளர், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசளித்தார்.

அமான் பேசியதாவது…

இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு மனுவுக்கு, விஷ்ணு விஷால் ஆகியோருக்கு நன்றி. மக்கள் அனைவருக்கும் படம் பிடித்துள்ளது, அவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

நடிகர் பிரவீன் குமர் பேசியதாவது…

இந்த திறந்த மனதோடு ரசிகர்கள் கொண்டாடியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு மனுவுக்கு, விஷ்ணு விஷால் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தை பார்த்த ஆடியன்ஸ்க்கும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் அபிஷேக் பேசியதாவது…

வெற்றி மேடையில் நான் பேசுவது இது தான் முதல் முறை. இந்த வாய்ப்பு கிடைப்பது அரிது. விஷ்ணு இதில் உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் ராம் பேசியதாவது…

இந்த வெற்றிப் படத்தில் பங்கு கொண்டது ரொம்ப சந்தோஷமாக, பெருமையாக இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த வாய்ப்பு தந்திருக்கலாம், ஆனால் என் திறமையை நம்பி எனக்கு இந்த வாய்ப்பு தந்ததற்கு மனுவுக்கு நன்றி. சினிமாவை நேசித்து உழைக்கும் விஷ்ணுவிற்கு வாழ்த்துக்கள் அது தான் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. இவர்களது அடுத்தடுத்த படங்களிலும் நான் நடிப்பேன் என நம்புகிறேன் நன்றி.

இட்ஸ் பிரசாந்த் பேசியதாவது….
இங்கு தான் கீழே அமர்ந்து படம் பார்ப்பேன், இன்று இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது வாழ்க்கை. 10 வருடமாக விஷ்ணு பிரதரை தெரியும். அன்றிலிருந்து இப்போது வரை ஒரே மாதிரி பழகுகிறார். இந்த படத்தில் மிக ஜாலியாக வேலை பார்த்தேன்.

எல்லோரும் மிக நட்பாக உழைத்தோம். நான் என்னை நம்பியதை விட, மனு என்னை அதிகமாக நம்பினார். நிறைய இடங்களில் இருந்து பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கிறது. ரைசா நடிக்கும் போது என்னை கிண்டல் செய்து கொண்டே இருப்பார். இது மனு மற்றும் விஷ்ணு விஷாலின் 8 வருட உழைப்பு, இந்த வெற்றியில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசியதாவது…

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. வெற்றிப்படத்தில் இருக்க வேண்டுமென்கிற எனது 8 வருட கனவை இப்படம் நிறைவேற்றியுள்ளது. விஷ்ணு ஒரு நல்ல மனிதனாக என்னை கவர்ந்துள்ளார். இந்த கோவிட் காலத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டோம், அதை மறந்து நம்மை மகிழ்ச்சிபடுத்த இந்த படம் வந்துள்ளது. மனு ஒரு பிரில்லியண்ட் ரைட்டர். இந்தப்படம் முதல் பிரதி பார்த்த போதே மிகப்பெரிய வெற்றிபெறும் என நம்பிக்கை வந்தது. ரைசாவை படத்தில் அசத்திவிட்டார்.

அனைத்து நடிகர்களும் அட்டகாசமாக நடித்துள்ளனர். சில்வா மாஸ்டர் அருமையாக சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். படத்தின் குழு அனைவருக்கும் நன்றி. மற்றும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் நன்றி.

ஜீ.கே.பிரச்சன்னா பேசியதாவது…

பல இடங்களிலிருந்து படத்திற்கு பாராட்டுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தில் வேலை செய்வது சவாலாக இருந்தது. படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். படம் வெற்றி பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் அஷ்வத் பேசியதாவது…

இது எனது முதல் சக்ஸஸ் மீட், நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது. படத்தை பற்றி அனைவரும் நல்லபடியாக எழுதியிருந்தார்கள் இந்த வெற்றி இயக்குநரை தான் சாரும், மனுவுக்கு நன்றி. இந்தப்படத்திற்கு ஒவ்வொரு பாடலுக்கும் லிரிகல் வீடியோ செய்து, என் பெயர் போட்டு என்னை விளம்பரபடுத்தினார்கள் அதற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டதால் இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை எனக்கு தந்த விஷ்ணு பிரதருக்கு நன்றி

நடிகர் வினோத் பேசியதாவது…

எங்களை மாதிரி புது ஆக்டருக்கு இந்த தருணம் மிகப்பெரிது. எங்களை மேடையேற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் எங்களை மதித்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. நடிகராக ஆக வேண்டுமென்பது 15 வருட ஆசை. யாரிடம் கேட்பது என தெரியவில்லை, என்னை நம்பி எனக்கு இந்த ரோலை தந்த மனு சாருக்கு மிகப்பெரும் நன்றி. இந்த குழு என்னுடைய இரண்டாவது குடும்பம். கோவிட் முடிந்து கஷ்டத்தில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்கிய முதல் நாளில் எங்களுக்கு சம்பளம் வந்ததா என கேட்டு, அதை அங்கேயே செக் போட்டு தரச்சொன்னார் விஷ்ணு சார்.

சிக்கலான காலங்களில் ஒரு தயாரிப்பாளராக இப்படி நடந்து கொள்வது அவ்வளவு எளிதானதல்ல, அவரின் நல்ல மனதிற்கு அவருக்கு நன்றி.

போஸ்டர் டிசைனர் பிரதுள் பேசியதாவது….
மனு எப்படி டிசைன் செய்ய வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தார். என்னுடைய வேலை இதில் பெரிதாக எதுவும் இல்லை. நான் முதலில் டைட்டில் ரெடி செய்தது குள்ள நரிக்கூட்டம் திரைப்படம் அதற்கு பிறகு மீண்டும் இந்த வெற்றிப்படத்தில் இருப்பது மகிழ்ச்சி.

நடிகை ரைசா வில்சன் பேசியதாவது…

இந்த கேரக்டரை நான் செய்வேனா என எல்லோரையும் போல எனக்கும் டவுட் இருந்தது, ஆனால் மனு மட்டும் மிக நம்பிக்கையுடன் இருந்தார்.

விஷ்ணு விஷாலின் நம்பிக்கையும், அவரது தேர்வும் எனது மிகச்சிறந்த உழைப்பைத் தர, உந்தித் தள்ளியது. விஷ்ணு விஷால் இப்படத்தை செய்தே தீருவேன் என உறுதியாக இருந்தார். இந்த படத்தில் இரண்டு பேர் மட்டும் அந்தளவு நம்பிக்கையாக, உறுதியாக இருந்தார்கள். அப்படிப்பட்ட படம் கண்டிப்பாக தோற்காது. படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் மனு ஆனந்த் பேசியதாவது…

இந்த படம் என்னால் பண்ண முடியும் என நம்பி வாய்ப்பு தந்த விஷ்ணு விஷால், தங்கதுரை சார் இருவருக்கும் நன்றி. இந்த கதையை என்னால் எடுக்க முடியாது என நான் நினைத்த போது, இவர்கள் என் மீது நிறைய நம்பிக்கை வைத்தார்கள். படக்குழு அனைவருக்கும் எனது கஷ்டங்கள் தெரியும், என்னை நம்பிய விஷ்ணு விஷால் மற்றும் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை நம்பி பெரிய அளவில் எடுத்து சென்றுள்ளனர். இந்தப் படத்தை ஆதரவு தந்து தூக்கிவிட்டது பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் தான் உங்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது…

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மீடியா தரும் ஆதரவை நான் என்றும் மறக்கவே மாட்டேன். விஷ்ணு விஷால் அடுத்த லெவலுக்கு போய்விட்டார் என எல்லோரும் பாராட்டியிருந்தார்கள், அதற்கு காரணம் மனு தான்.

உங்களுக்கும், மனுவுக்கும் நன்றி. நான் மனுவிடம் கதை கேட்ட போது ஃபேமிலிமேன், மாநாடு வந்திருக்கவில்லை. அது வந்த போது மனுவை அழைத்து பேசினேன், என்னிடம் அப்போது இரண்டு சாய்ஸ் இருந்தது, ஆனால் நான் துணிந்து தயாரித்தேன்.

ஏற்கனவே இப்படத்தை ஒரு தயாரிப்பாளர் மறுத்து விட்டபோது, மீண்டும் இப்படத்தை நிறுத்தினால் ஒரு டைரக்டருக்கு என்ன நடக்குமென எனக்கு தெரியும். அதனால் நான் இதை தயாரித்தே தீருவது என முடிவு செய்தேன்.

ராட்சசசனுக்கு பிறகு நடிகராக இது எனக்கு இராண்டாவது வாய்ப்பு, ஆனால் அதை வெற்றியாக சாதித்து காட்டிய மனுவுக்கு நன்றி. மைனா படத்தின் வெற்றி விழாவிற்கு போனபோது ரெட் ஜெயன்ட் மூவிஸ் எனது படம் பண்ணுவார்களா? என்ற ஆசை இருந்தது.

நீர்ப்பறவை முதல் இப்போது வரை பெரிய ஆதரவு தந்துள்ளார்கள். ஷ்ரவந்தி ‘லைஃப் ஆஃப் பை’ ஹாலிவுட் பட நடிகை, என் படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றியுள்ளார். அவருக்கு நன்றி. தங்கதுரை சாருக்கு நன்றி.

என் படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள் ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு கூட மூன்று பேரையும் என்னால் ஒன்றாக இணைக்க முடியவில்லை, அது ஒரு சின்ன கவலை.

அப்புறம் உதய் அண்ணா, அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. குள்ள நரிக்கூட்டம் முதல் இப்போது வரை அவர் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. எல்லோரும் நான் சரியாக செக் எழுதிக்கொடுத்தேன் என்றார்கள், ஆனால் அதன் பின்னால் உள்ள கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்.

, இந்தப்படம் ஒரு கட்டத்தில் பெரிய பட்ஜெட்டாக வந்து நின்ற நேரத்தில், கடுமையான சிக்கல் உண்டானது, அப்பா வந்து கடன் வாங்காதே என்று அவரது பென்சன் பணத்தை தந்து உதவினார் அவருக்கு நன்றி.

Actor Vishnu Vishal speech at FIR success meet

முதன்முறையாக இளையராஜா வரிகளை பாடிய யுவன்.; அசத்தும் ஆதிராஜன்

முதன்முறையாக இளையராஜா வரிகளை பாடிய யுவன்.; அசத்தும் ஆதிராஜன்

இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார்.

பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர் வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

காலக் கரையான்களால் செல்லரிக்க முடியாத பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இசைஞானி அசத்தும் ஐந்து பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார்.

கவிஞர் பழநிபாரதி எழுதிய “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற பாடலை பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திக் பாடியிருக்கிறார்.

கவிஞர் சினேகன் எழுதிய மூன்று பாடல்களில், “வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை” என்ற பாடலை ஹரிப்பிரியா பாடியிருக்கிறார்.

“வெச்சேன் நான் முரட்டு ஆசை…” பாடலை கன்னட திரையுலகின் முன்னணி பாடகி அனன்யா பட் பாடியிருக்கிறார்.

“அழகான இசை ஒன்று ….” என்ற பாடலை கார்த்திக் – அனன்யாபட் ஜோடி பாடி இருக்கிறது.

இந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கும் பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது கிறங்கடிக்கும் குரலில் பாடிக்கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் ஆதி ராஜன் கூறும்போது,

“இசைஞானியுடன் ஒரு படத்திலாவது பணியாற்றி விடவேண்டும் என்ற என்னுடைய பெருங்கனவு இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது.

பாடல் கம்போஸிங்கின் போது நான் பயந்து கொண்டே இருந்தேன்.

ஆனால் இளையராஜா உனக்கு என்ன தேவை என்று கேட்டு… தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

இப்படத்திற்கு ஒரு பாடலை நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது, உடனே சம்மதித்து “இதயமே இதயமே இதயமே…. உன்னைத் தேடித் தேடிக் கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே” என்ற என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.

இசைஞானி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார்.

இந்தப் பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையைத் தெரிவித்தேன்.

அவரும் உடனே யுவனை
அழைத்துப் பாட வைத்தார். மும்பை பாடகி ஸ்ரீஷா இணைந்து பாடியிருக்கிறார்.

யுவனின் மயக்கும் குரலில் பாடல் அருமையாக வந்திருக்கிறது.

சுமார் இருபத்தைந்து வருடங்களில் 150 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரையுலகில் பட்டையைக் கிளப்பும் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

1989ல் “தென்றல் சுடும்”என்ற படத்திலிருந்து பாடி வருகிறார்.

இதுவரை 150 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அவர் பாடினாலே அந்த பாட்டு சூப்பர் ஹிட்டு தான் என்பதை சமூக வலைத்தளங்கள் சமரசம் இன்றி சத்தியம் செய்து கொண்டிருக்கின்றன.

இளைஞர்களும் இளம் பெண்களும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக யுவனின் குரலுக்கு மயங்கிக் கிடக்கிறார்கள்.

சமீப காலங்களில் அவர் பாடிய என் காதல் சொல்ல தேவையில்லை, காதல் ஆசை யாரை விட்டதோ, விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் அந்த கண்ண பார்த்தாக்கா, அஜித்குமாரின் “வலிமை” படத்தில் இடம் பெற்ற “நாங்க வேற மாதிரி…” உள்ளிட்ட பல பாடல்கள் யூடியூபில் 47 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

அந்தளவு யுவனின் குரலுக்கு இளைஞர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் சக்தி இருக்கிறது.

அதேபோல இளையராஜா இசையில் பாடிய சாய்ந்து சாய்ந்து பாடலும் பலமில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

இசைஞானியின் இசையில் பல பாடல்களை யுவன்சங்கர் ராஜா பாடியிருந்தாலும் இளையராஜா எழுதிய ஒரு பாடலை யுவன் பாடியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜன், சினாமிகா நடனமாடும் இப்பாடலை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா வடிவமைக்கிறார்.

கண்டிப்பாக இந்த பாடல் பல மில்லியன் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடிக்கும் என்பது உறுதி.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.” என்று இயக்குநர் ஆதிராஜன் குறிப்பிட்டார்.

Ilaiyaraaja and son Yuvan Shankar Raja come together for Ninaivellam Neeyeda

விக்ரம் பிரச்சினையை தீர்க்க பிக்பாஸில் இருந்து கமல் எஸ்கேப்

விக்ரம் பிரச்சினையை தீர்க்க பிக்பாஸில் இருந்து கமல் எஸ்கேப்

விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் 5 சீசன்களை வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.

பிக்பாஸ் சீசன்களை முடித்துவிட்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளில் பிசியாகி இருந்தார்.

இத்துடன் விக்ரம் பட சூட்டிங்கிலும் கலந்து கொண்டு நடித்து வந்தார் கமல்.

இந்த நிலையில் தற்போது ஓடிடி.,யில் மட்டுமே ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.

ஆனால் தொடர்ச்சியாக தொகுத்து வழங்க முடியாது என தெரிவித்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது…

இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது, அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்கக் கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்குப் பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. இவர்களோடு இணைந்து புதுமைப் பாதையில் பயணிப்பதில் எனக்கு அளவற்ற பெருமிதம் உண்டு.

லாக்டவுன் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்படிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாகிவிட்டது.

இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களையும் கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் என் சொந்தக் காரணங்களின் பொருட்டு தாமதிக்கச் செய்வது நியாயமல்ல. அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன், இன்றைய எபிஸோடுக்குப் பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

என்னுடைய விலகல் ஏற்படுத்தும் சிரமங்களுக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Kamalhassan made shocking news that he quits Bigg Boss

கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் நாயகனாகும் வடிவேலு

கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் நாயகனாகும் வடிவேலு

ரெட் கார்டு உள்ளிட்ட சில பிரச்சினைகளால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து நடிகர் வடிவேலு தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் காமெடி கேரக்டர்களில் நடிக்கவும் முன்வந்துள்ளார்.

உதயநிதியின் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்துடன் கௌதம் மேனன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நாயகனாகவும் நடிக்கவிருக்கிறாராம் வடிவேலு.

தற்போது சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். இதயைடுத்து வடிவேலு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை சீரியஸ் மற்றும் ரொமான்டிக் படங்களை இயக்கியவர் கௌதம்மேனன்,

முதன்முறையாக வடிவேலுவை வைத்து ரொமான்டிக் காமெடி படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் நலன் குமாரசாமி இயக்கத்திலும் வடிவேலு நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வாங்க வைகைப்புயல் வடிவேலு…

Gautham Menon to make a romantic comedy film with Vadivelu

More Articles
Follows