தல அஜித் படத்திற்காக புல்லட் ஓட்டும் காலா ஹீரோயின்

தல அஜித் படத்திற்காக புல்லட் ஓட்டும் காலா ஹீரோயின்

Huma Qureshi to perform bike stunts in Valimaiபோனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

கொரோனா பீதி காரணமாக நாட்டில் உள்ள எல்லா பட சூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் வலிமை படமும் அடங்கும்.

இந்த படத்தில் அஜித்தின் நாயகியாக ஹூமா குரேஷி நடித்து வருகிறார்.

இவர் காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், ஹூமா குரேஷி, புல்லட் ஓட்டும் படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கை என்பது தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கிறது. அத்துடன் உங்கள் பயத்தை மீறுவதிலும் என் பதிவிட்டுள்ளார்.

Huma Qureshi to perform bike stunts in Valimai

ஆர்யாவுடன் ஜோடி போடும் ‘போதை ஏறி புத்தி மாறி’ நாயகி

ஆர்யாவுடன் ஜோடி போடும் ‘போதை ஏறி புத்தி மாறி’ நாயகி

Dushara to star as female lead in Aryas Salpettaகபாலி, காலா படங்களை அடுத்து ரஞ்சித் இயக்கி வரும் படம் ‘சல்பேட்டா’.

ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் ஆர்யா பாக்ஸராக நடித்துள்ளார்.

இதற்காக இவர் தன் உடம்மை முறுக்கு கம்பி போல மாற்றியமைத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாம்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் நடித்திருந்தார்.

Dushara to star as female lead in Aryas Salpetta

விஜய்யை மட்டும் வாழ்த்தி அவரது ரசிகர்களை கிழித்த அஜித் ரசிகர்கள்

விஜய்யை மட்டும் வாழ்த்தி அவரது ரசிகர்களை கிழித்த அஜித் ரசிகர்கள்

Ajith fans praises Vijay and slams Vijay fans விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் விஜய்…. தனது நண்பர் அஜித் போல கோட் சூட் அணிந்து வரலாம் என நினைத்து வந்ததாக பேசினார்.

இதனால் விஜய் & அஜித் ரசிகர்கள் நட்பு பாராட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய்யின் பேச்சினை வரவேற்கும் விதமாக மதுரையில் அஜித் ரசிகர்கள் ‘தல-தளபதி’ தமிழ் சினிமாவின் மகுடங்கள் என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

அதில் ஒரு ட்விஸ்டும் வைத்துள்ளனர்.

“தனது சக போட்டியாளரை நண்பராக மதிக்கும் மாண்பு விஜய் ரசிகர்களிடமும் இருந்தால் எத்தனை அழகாய் இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக… அஜித் ரசிகர்கள் விஜய்யை மட்டுமே ஆதரித்து அவரது ரசிகர்களை எதிரியாகவே நினைப்பது தெரிகிறது..

மேலும், ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவரவுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்,

Ajith fans praises Vijay and slams Vijay fans

தயாரிப்பாளர் சங்க தேர்தல்.: சிவா தலைமையில் பாதுகாப்பு அணி போட்டி

தயாரிப்பாளர் சங்க தேர்தல்.: சிவா தலைமையில் பாதுகாப்பு அணி போட்டி

Tamil Film Producers Protection Team 2020 election விரைவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கு சிவா தலைமையில் பாதுகாப்பு அணி ஒன்று உருவாகியுள்ளது. அந்த அணி தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதோ அதன் விவரம்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த அணியை உருவாக்கி, வருகின்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் (2020-22) போட்டியிடுகிறது. அணியின் அங்கத்தினர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

Contesting for Office Bearers:

திரு T. சிவா, தலைவர்
திரு K. முரளிதரன் (LMM), பொருளாளர்
திரு PL. தேனப்பன், செயலாளர்
திரு JSK. சதிஷ் குமார், செயலாளர்
திரு RK. சுரேஷ், துணை தலைவர்
திரு G. தனஞ்செயன், துணை தலைவர்
Contesting for Executive Committee (EC) Members:
திரு. K. ராஜன்
திரு. ராதாரவி
திரு. K.S. ஸ்ரீனிவாசன்
திரு. சித்ரா லக்ஷ்மணன்
திரு. H. முரளி
திரு. SS. துரைராஜ்
திரு. K. விஜயகுமார்
திரு. RV. உதயகுமார்
திரு. மனோஜ் குமார்
திரு. S. நந்தகோபால்
திரு. மனோபாலா
திரு. பாபு கணேஷ்
திரு. பஞ்சு சுப்பு
திரு. M.S. முருகராஜ்
திரு. வினோத் குமார்
திரு. ரங்கநாதன்
திரு. பஞ்ச் பரத்
திரு. மதுரை செல்வம் மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள்

திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் அணியின் நோக்கம்… என தங்கள் அறிக்கையில் அறிவித்துள்ளது பாதுகாப்பு அணி.

Tamil Film Producers Protection Team 2020 election

Tamil Film Producers Protection Team

அந்தாதூன் தமிழ் ரீமேக்.; பிரசாந்த்தை இயக்க மறுக்கும் மோகன்ராஜா..?

அந்தாதூன் தமிழ் ரீமேக்.; பிரசாந்த்தை இயக்க மறுக்கும் மோகன்ராஜா..?

Mohan Raja walks out of Andhadhun Tamil remake with Prashanthஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ பட தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

ஹிந்தியில் இந்த படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மோகன் ராஜா இயக்கவிருந்த இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா கேரக்டரில் பிரசாந்த் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது.

இதில் நடிக்க பிரசாந்த் 20 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார்.

இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மோகன் ராஜா இப்படத்தை இயக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வெங்கடேஷ் என்பவர் இயக்குவதாக தகவல்கள் வந்துள்ளன.

தபு நடித்த ரோலில் ரம்யா கிருஷ்ணனும், ராதிகா ஆப்தே ரோலில் 2018ல் இந்திய அழகி பட்டம் பெற்ற அனு கீர்த்திவாஸ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Mohan Raja walks out of Andhadhun Tamil remake with Prashanth

விஜய்யை இயக்கும் கோப்ரா டைரக்டர்.? யார் பார்த்த வேலை இது?

விஜய்யை இயக்கும் கோப்ரா டைரக்டர்.? யார் பார்த்த வேலை இது?

Ajay Gnanamuthuலோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ படத்தை முடித்துவிட்டார் விஜய்.

இவரின் அடுத்த (விஜய்யின்) 65வது படத்தை ‛இறுதிச்சுற்று’ சுதா அல்லது முருகதாஸ் ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புது கதையாக ‛டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியவரும், விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கி வருபவருமான அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

இது குறித்து அஜய் ஞானமுத்துவே… ‛‛இது யார் பார்த்த வேலைன்னு தெரியல, விஜய் 65வது படத்தை நான் டைரக்ட் செய்யல” என விளக்கமளித்துள்ளார்.

More Articles
Follows